Thursday , 17 October 2019
சற்று முன்
Home » Tag Archives: Agri News

Tag Archives: Agri Newsகாபி ஏற்றுமதி 4% குறைந்தது


Coffee-01a

நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 21 வரையிலான காலத்தில் காபி ஏற்றுமதி நான்கு சதவீதம் குறைந்து 2.75 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதே இதற்கு காரணம் என காபி வாரியம் தெரிவித்துள்ளது. 2013-ஆம் ஆண்டின் இதே காலத்தில் 2.88 லட்சம் டன் காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. கடந்த முழு ஆண்டில் மொத்தம் 3.12 லட்சம் டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரேசில்சர்வதேச அளவில் காபி உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டின் காபி ... மேலும் படிக்க... »

நடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்


Cotton-01a

நடப்பு 2014-15 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) பருத்தி உற்பத்தி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 4.06 கோடி பொதிகளை எட்டும் என இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொதி என்பது 70 கிலோ பருத்தியை கொண்டதாகும். தற்போதைய மதிப்பீடுகளின்படி குஜராத் மாநிலத்தில் பருத்தி உற்பத்தி அதிகபட்சமாக 1.25 கோடி பொதிகளாக இருக்கும். அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி 85 லட்சம் பொதிகளாக இருக்கும். தெலுங்கானாவில் 45 லட்சம் பொதிகளும், கர்நாடகா மாநிலத்தில் 36 லட்சம் பொதிகளும், சீமாந்திராவில் 25 லட்சம் பொதிகளும் உற்பத்தியாகும். அரியானாவில் ... மேலும் படிக்க... »

தோட்டக்கலை- குட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு


Bonsai-01a

போன்சாய் போன்சாய் என்னும் குட்டைச் செடிகளின் வளர்ப்புக் கலையானது ஜப்பானில் 13 – ஆம் நூற்றாண்டில் தோன்றி இன்று உலகமெங்கும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானிய மொழியில் “போன்” என்றால் “ஆழமற்ற தட்டுகள்” என்னும் “சாய்” என்றால் “செடிகள்” என்றும் பொருள்படும். மற்றும் போன்சாய் கலை மூலம் 100 முதல் 200 வயதான மரங்களையோ, செடிகளையோ கூட தொட்டிகளில் வளர்க்க முடியும். பொதுவாக போன்சாய் செடிகளின் வயது கூடும் போது தென் விலை மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. நகர மக்களின் செடி மற்றும் மரம் வளர்க்கும் ... மேலும் படிக்க... »

SOLAR DRYER தொழில்நுட்பம்


Value Addition-03a

உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க நாம் பல பதப்படுத்துதல் முறைகளை கையாள்கிறோம். அதில் குறிப்பாக குளிர்பதனம் மூலம் கெடாமல் பாதுகாப்பது மற்றும் வெயிலில் மூலம் பதப்படுத்தி பாதுகாப்பது. இதில் குளிர்பதன முறையை விட வெயிலில் பதப்படுத்துவதுதான் உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். உதாரணமாக நாம் இன்றும் செய்யும் மாங்காய் வற்றல், கத்திரிக்காய் வற்றல்,சுண்டக்காய் வற்றல், மிளகாய் வற்றல், சில ஊறுகாய் வகைகள், கருவாடு போன்றவை வெயிலின் மூலம் பதபடுத்தி பாதுகாக்கும் முறைகளாகும். இதேபோல் ... மேலும் படிக்க... »

மீன் உணவு மதிப்பு கூட்டு தல்


Value Addition-01a

மீன்களை பயன்படுத்தி 50க்கும் மேலான மதிப்பு கூட்டிய மீன் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைகள் உள்ளது மத்தி, கோழி மீன், எலிசூரை, கரிக் காடி இறால் போன்ற மீன்வகைகளில் இருந்து விலை மதிப்பு கூட்டிய பொருட்களாக   – மீன் கட்லெட், மீன்சமோசா, மீன் புட்டு, மீன் ஊறுகாய், மீன் நூடுல்ஸ், இறால் பிரியாணி, இறால் வாடா, மீன் மற்றும் இறால் பஜ்ஜி   மீன் சான்ட்விச் சாளை மீன் (கவல மீன்)  –   அரை கிலோ வெண்ணெய்   –   200கிராம் ... மேலும் படிக்க... »

உர மானியம் குறைப்பு


Potash-Uram-01a

பொட்டாஷ் உர மானியத்தை டன்னுக்கு ரூ.9,400 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கான ஒப்புதலை உர அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை அளித்துள்ளது. பொட்டாஷ் உர தேவைக்கு இந்தியா பெருமளவு இறக்குமதியை சார்ந்தே உள்ளது. உர இறக்குமதியில் கடந்த 5 ஆண்டுகளாக 10வது இடத்தில் இந்தியா உள்ளது. இருப்பினும், யூரியாவுக்கான மானியத்தை குறைக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள மானிய குறைப்பு ஏப்ரலுக்கு பிறகு நடைமுறைக்கு வருகிறது.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

கொத்தமல்லி விலை உயர்வு


Organic-Coriander-01a

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேலம் மார்க்கெட்டிற்கு கொத்தமல்லி விற்பனைக்கு வருகிறது. துறையூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் மற்றும் சேலம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளுக்கு கொத்தமல்லி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், வரத்து குறைந்துள்ளதால் கொத்தமல்லி விலை கிலோவிற்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது.   கடந்த மாதம் ரூ.80 வரை விற்கப்பட்ட கொத்தமல்லி தற்போது ஒரு கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. மேலும் ரூ.3,000 வரை ... மேலும் படிக்க... »

நாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை


KONICA MINOLTA DIGITAL CAMERA

ஈரோட்டிற்கு அடுத்து நாமக்கல் மாவட்டம்  நாமகிரிப்பேட்டையில் தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன.  இங்கு, ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு  சங்கம் (ஆர்.சி.எம்.எஸ்) உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. கடந்த  செவ்வாய்க்கிழமை நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடந்தது.  அப்போது, விரலி 903 மூட்டைகளும், உருண்டை 481 மூட்டைகளும்,  பனங்காலி 300 மூட்டைகளும் என மொத்தம் 1,684 மூட்டைகள்  விற்பனைக்கு வந்தது. செவ்வாய் அன்று ஒரே நாளில்  ஆர்.சி.எம்.எஸ்சில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

வட மாநிலங்களில் மழையால் பாதிப்பு கோதுமை அறுவடை தாமதம்


Wheat -05a

வட இந்தியாவில் பல மாநிலங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் கோதுமை அறுவடை தாமதமாகியுள்ளது. 10 நாட்கள் தாமதம் கோதுமை அறுவடை பொதுவாக மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டில் மழையால் கோதுமை அறுவடை தாமதம் ஆகியுள்ளதாகவும், குறைந்தபட்சம் 10 நாட்கள் தாமதமாக அறுவடை தொடங்கும் என்றும் பஞ்சாப் மாநில விவசாய துறை இயக்குனர் எம்.எஸ். சாந்து தெரிவித்தார். அறுவடை தாமதம் ஆகியுள்ளதால் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏப்ரல் ... மேலும் படிக்க... »

உரிகம் புளி விலை உயர்வு


Sweet-Tamarind-01a

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை,  அஞ்செட்டி மற்றும் உரிகம் காட்டுப்பகுதியில் அதிகளவில்  புளியமரங்கள் உள்ளன. இந்த வருடம் போதிய மழையில்லாததால்  உரிகம் புளி விளைச்சல் குறைவாகவே உள்ளது. மரங்களில் பறித்த  புளியை பொட்டு அடித்து பிரித்தெடுக்கும் பணி துவங்கியுள்ளது.  பொட்டு அடித்து புளியை பிரித்தெடுக்கும் பணிக்கு போதிய கூலி  ஆட்கள் கிடைக்காததால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது.  கொட்டை நீக்கிய ஒரு கிலோ புளி ரூ.55 முதல் ரூ.60 வரை  விற்பனையாகிறது. பொட்டுடன் கிலோ 20 ரூபாயாகவும், பொட்டு  அடித்த புளி 23 ரூபாயாக உள்ளது.   ... மேலும் படிக்க... »