வெளிநாடு போகும் வெள்ளரி..!

கொடிகளை நைலான் பந்தலில் படர விட வேண்டும். 15-ம் நாளில் இருந்து, 35-ம் நாள் வரை தினமும் 500 கிராம் நீரில் கரையக்கூடிய 19:19:19 பயோ உரத்தை சொட்டுநீரில் கலந்துவிட வேண்டும். 30, 55 மற்றும் 75-ம் நாட்களில் 250 கிராம் நுண்ணுயிர் உரத்தை சொட்டுநீரில் கலந்து விட வேண்டும். 35-ம் நாளில் கைகளால் களை எடுத்து, அன்றிலிருந்து 50-ம் நாள் வரை, தினமும் 700 கிராம் அளவுக்கு 19:19:19 பயோ உரத்தை சொட்டுநீரில் கலந்துவிட வேண்டும். 40 நாட்களுக்கு மேல் கொடிகளில் பழுத்த இலைகள் மற்றும் அதிகப்படியான கிளைகளை ஒடித்துவிட வேண்டும். அப்போதுதான் போதுமான வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்கும்.

50-ம் நாளுக்குமேல் தினமும் ஒரு கிலோ அளவுக்கு திரவ உரம் கொடுத்து வர வேண்டும். உயர ரக வீரிய விளைச்சல் தரக்கூடிய இந்தப் பயிரில், 45-ம் நாளில் இருந்து, தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை வாரத்துக்கு மூன்று முறை என அறுவடை செய்யலாம். ஒரு யூனிட்டில் ஒரு போகத்துக்கு சராசரியாக 6 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்.

பூச்சிகள் தாக்காது!

பசுமைக் குடிலுக்குள் சாகுபடி செய்வதால், பழ ஈக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், துளைப்பான்கள்… என எந்தப் பூச்சிகளின் தொல்லையும் இருக்காது. ஒவ்வொரு முறை குடிலுக்குள் நுழையும்போதும், ‘பிளீச்சிங் பவுடர்’ கலந்த நீரில் பாதங்களை நனைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும். இதன் மூலமாக, பயிரை நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும். பூஞ்சணம், இலைக்கருகல், அசுவிணிப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதல்கள் வந்தால், 100 மில்லி நீம் கலவையை, 10 லிட்டர் நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் புகைமூட்டம் போல தெளிக்க வேண்டும்.’

சாகுபடி, பாடம் முடித்த மோகன்செல்லக்குமார், ”கோயம்புத்தூர், திருப்பூர், மேட்டுப்பாளையம்னு இந்த வெள்ளரிக்கு உள்ளூர் சந்தைகள்லயே விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, நிரந்தர விலை கிடைக்கறதில்லை. பாதி வருமானத்தை கமிஷனாவே பிடுங்கிக்குவாங்க. இணையத்துல அதைப் பத்தி தேடினப்ப, அரபுநாடுகளுக்கு காய்கறி ஏற்றுமதி செய்ற நபரோட தொடர்பு கிடைச்சுது. அவருக்கு ஒரு பெட்டி வெள்ளரிப் பிஞ்சுகளை ‘சாம்பிள்’ அனுப்பினேன். அவர் திருப்தி அடைஞ்சு ஆர்டர் கொடுத்தார். அவருக்குத்தான் இப்போ, வெள்ளரிப் பிஞ்சுகளை அட்டைப்பெட்டிகள்ல அடைச்சு அனுப்பிட்டிருக்கேன். கிலோ 37 ரூபாய்னு வருஷம் முழுக்க எடுத்துக்கிறார்.

25 சென்ட் நிலத்துல, ஒரு போகத்துல கிடைக்கற 6 டன் வெள்ளரியில இருந்து, 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. எல்லா செலவும் போக ஒன்றரை லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும்” என்ற மோகன் செல்லக்குமார்,

”சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை விட்டதைப் பத்தி இப்ப எங்க வீட்ல யாரும் கவலைப்படல. அதைவிட அதிக வருமானத்தை சொந்த ஊர்ல இருந்துகிட்டே பசுமைக் குடில் மூலமா எடுத்தாச்சு. பக்கத்துல இன்னொரு பசுமைக் குடிலையும் அமைக்கப் போறேன். நேரடியா ஏற்றுமதி பண்ற யோசனையும் கைவசம் இருக்கு” என்றார், நம்பிக்கை பொங்க!

தொடர்புக்கு,
மோகன் செல்லக்குமார்,
செல்போன்: 96884-89477..

Check Also

காபி ஏற்றுமதி 4% குறைந்தது

நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 21 வரையிலான காலத்தில் காபி ஏற்றுமதி நான்கு சதவீதம் குறைந்து 2.75 லட்சம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *