வேளாண் ஏற்றுமதி

காபி ஏற்றுமதி 4% குறைந்தது

நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் 21 வரையிலான காலத்தில் காபி ஏற்றுமதி நான்கு சதவீதம் குறைந்து 2.75 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை கடும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதே இதற்கு காரணம் என காபி வாரியம் தெரிவித்துள்ளது. 2013-ஆம் ஆண்டின் இதே காலத்தில் 2.88 லட்சம் டன் காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. கடந்த முழு ஆண்டில் மொத்தம் 3.12 லட்சம் டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டது. பிரேசில்சர்வதேச அளவில் காபி உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டின் காபி …

Read More »

ரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்

ரஷ்யாஉக்ரைன் எல்லை பிரச்னை யால் ரஷ்யாவிற்கு தேயிலை தூள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.  தென்னிந்தியாவில் குன்னூர் சிடிடிஏ, அரசு கூட்டுறவு, கொச்சின், கோவை ஏல மையங்களில் விற்பனை செய்யப்பட்ட தேயிலை தூளுக்கு கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு சராசரியாக ரூ.109 வழங்கப்பட்டது. இந்தாண்டு இதன் விலை ரூ.92.34 பைசாவாக இருந்தது. வட இந்தியாவில் கடந்த ஆண்டு சராசரி விலை ரூ.128.33 பைசா வழங்கப்பட்டது. இந்தாண்டு இதன் விலை ரூ.116.88 பைசாவாக குறைந்துள்ளது. இந்தியாவில் தேயிலை தூள் விற்பனையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு …

Read More »

கடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு

கடந்த நிதி ஆண்டில் (2013-14) காபி ஏற்றுமதி 3.6 சதவீதம் உயர்ந்து 3.15 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.04 லட்சம் டன்னாக இருந்தது. விலை அதிகரித்தது சர்வதேச சந்தையில், மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்-டிசம்பர்) மாதம் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே காபி ஏற்றுமதி ஆகியிருந்தது. நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) காபி விலை அதிகரித்ததால் ஏற்றுமதி நன்கு அதிகரித்தது. காபி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடு காரணமாக விலை உயர்ந்துள்ளது. …

Read More »

பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு

மத்திய அரசு பருப்பு வகைகள் ஏற்றுமதி மீதான தடையை மேலும் நீட்டித்துள்ளது. எனினும் ‘காபுலி’ என்ற உயர்தர கொண்டைக்கடலை, இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பருப்பு வகைகள் மற்றும் துவரம் பருப்பு (10 ஆயிரம் டன் வரை) ஏற்றுமதிக்கு தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பருப்பு உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 2.10 கோடி டன் பருப்பு நுகரப்படுகிறது. அதே சமயம் உற்பத்தி ஏறக்குறைய 1.80 கோடி டன் அளவிற்கே உள்ளது. எனவே …

Read More »

மாலத்தீவுக்கு 291 டன் பருப்பு ஏற்றுமதி செய்ய அனுமதி

பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக 2016-17-ஆம் ஆண்டு வரை மாலத்தீவுக்கு 291 டன் பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.2014-15 முதல் 2016-17-ஆம் நிதி ஆண்டு வரை அரசியல் உறவு அடிப்படையில் அந்நாட்டிற்கு பருப்பு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் அந்நாட்டிற்கு முறையே 87.85 டன், 96.63 டன் மற்றும் 106.29 டன் பருப்புகள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதர நாடுகளுக்கு பருப்பு ஏற்றுமதி செய்ய …

Read More »

அடுத்த மூன்று ஆண்டுகளில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 300 கோடி டாலராக அதிகரிக்கும்

சர்வதேச சந்தையில் தேவைப்பாடு அதிகரித்து வருவதால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 300 கோடி டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் சர்வதேச சந்தையில் இயற்கை விவசாய முறைகளில் உற்பத்தி செய்யப்பட்ட நறுமணப் பொருள்கள் விற்பனை சூடுபிடித்து வருகிறது. மொத்த நறுமணப் பொருள்கள் ஏற்றுமதியில் இதன் பங்களிப்பு இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வடகிழக்கு மண்டலங்களில் சாகுபடி செய்யாத நிலங்களில் இதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த …

Read More »

40 ஆண்டு கால கட்டுப்பாடு நீங்கியது நேரடியாக வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி

நாற்பது ஆண்டு காலமாக இருந்து வந்த கட்டுப்பாடு நீங்கியது. இனி யார் வேண்டுமானாலும் வெங்காயத்தை நேரடியாக ஏற்றுமதி செய்யலாம். விதிமுறை கடந்த 1974-ஆம் ஆண்டில் குறிப்பிட்ட ஏஜென்சிகள் வாயிலாக மட்டுமே வெங்காயம் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஏற்றுமதியாளர்கள் வெங்காயம் ஏற்றுமதி செய்ய இவ்வமைப்புகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். இதற்காக ஏற்றுமதியில் 1 சதவீதத்தை கட்டணமாக செலுத்தி வந்தனர். விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இந்த விதிமுறையை தளர்த்துமாறு வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து கடந்த வாரம் வெளிநாட்டு …

Read More »

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதி 8.4 சதவீதம் சரிவு

சர்வதேச அளவில் காபி ஏற்றுமதி ஜனவரி மாதத்தில் 8.4 சதவீதம் குறைந்து 87 லட்சம் மூட்டைகளாக (1 மூட்டை 60 கிலோ) சரிவடைந்துள்ளது. வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் ஏற்றுமதி குறைந்ததே இதற்கு காரணம் என சர்வதே காபி அமைப்பு தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் காபி ஏற்றுமதி 94 லட்சம் மூட்டைகளாக இருந்தது. ஜனவரி மாத காபி ஏற்றுமதியில் அராபிகா ரக காபி ஏற்றுமதி 2.6 சதவீதம் குறைந்து 55 லட்சம் மூட்டைகளாகவும், ரோபஸ்டா ரக காபி ஏற்றுமதி 17.2 …

Read More »

சர்வதேச மந்தநிலையால் தேயிலை ஏற்றுமதி 13.24% குறைந்தது

சர்வதேச சந்தைகளில் தேவைப்பாடு குறைந்துள்ளதால், நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் – பிப்ரவரி) இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 13.24 சதவீதம் சரிந்து 69.56 கோடி டாலராக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் 80.18 கோடி டாலராக இருந்தது. நிதி ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி மிகவும் குறைந்ததே இதற்கு காரணமாகும். பாகிஸ்தான் இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் தேயிலைக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இந்திய தேயிலை ஏற்றுமதிக்கு இது சாதகமான அம்சமாகும். ஏனென்றால் சர்வதேச அளவில் தேயிலை …

Read More »

உக்ரைன் போர் பதற்றத்தால் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி உயர வாய்ப்பு

உக்ரைன் போர் பதற்றத்தால் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி உயர வாய்ப்புள்ளது என சர்வதேச வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியன் சந்தைகளுக்கான கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் பங்கு கணிசமாக உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தால் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நாடுகளின் கோதுமை ஏற்றுமதி சரிவால் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 36 லட்சம் டன்னாக இருந்தது. போர் பதற்ற …

Read More »