கால்நடை & வளர்ப்பு முறைகள்

கூட்டின மீன்வளர்ப்பு

குளங்களில் மாறுபட்ட உணவு, இடம், உயிரிவளி ஆகியவற்றைப் போட்டியில்லாமல் பயன்படுத்தும் பல்வேறு இன மீன் குஞ்சுகளை ஒரே குளத்தினில் இருப்பு செய்து வளர்த்தெடுப்பது கூட்டின மீன் வளர்ப்பு முறையாகும். இதன்படி நான்கு முதல் ஆறு வகையான மீன் இனக்குஞ்சுகளையும், நன்னீர் இறாலையும் தேர்வு செய்து குளங்களில் இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் மொத்த உற்பத்தியினை பெருக்கலாம். கூட்டின மீன்வளர்ப்பில் குளத்தில் உள்ள மூன்று நீர்மட்டங்களான மேல், நடு மற்றும் அடி மட்டத்தில் உள்ள உணவு வீணாகாமல் உபயோகப்படுத்துவதன் மூலம் குளத்தின் உற்பத்தித்திறன் பெருகுகின்றது. இந்த …

Read More »

காளான் பதனிடும் தொழில்நுட்பம்

காளான் மூலம் கிடைக்கும் புரதச்சத்து சிறந்த புரதச்சத்து உணவாக கருதப்படுகின்றது. மேலும் காளான்களின் புரதம் மாற்றும் திறன், புரதம் உற்பத்தித் திறன், தாவரப் பயிர் வகை புரதம் மற்றும் விலங்கு புரதத்தினைவிட சிறந்து காணப்படுகிறது. காளான் தொழில்நுட்பம் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவர நோயியல் துறை பேராசிரியை முனைவர் உஷாராணி தெரிவித்தது: காளாண் என்பது பூஞ்சான வகையைச் சார்ந்தது. உலகில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளான் வகைகள் உள்ளன. அவற்றுள் 100 வகை காளான்கள் மட்டும் நச்சுத் தன்மையற்றவையாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படக்கூடிய வகையாகும். இக்காளான்களில் …

Read More »

கால்நடைகளுக்கு சுத்தமான தண்ணீர்

“நீரின்றி அமையாது உலகு” – வள்ளுவர் வாக்கு.  எந்த உயிரினமானாலும் நீரின்றி வாழ இயலாது.  கால்நடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கன்று.  உயிரினங்கள் உயிர் வாழ காற்றும் உணவும் எவ்வளவு அவசியமோ, நீரும் அவ்வளவு அவசியமே.  உணவின்றி கால்நடைகள் ஒரு மாதம் கூட உயிர் வாழ இயலும்.  ஆனால் நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது அரிது. தண்ணீரின் அவசியம்: கறவை மாடுகளின் உடல் எடையில் 70% நீரும், பாலில் 87% நீரும் உள்ளது.  உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் நீர் உள்ளது. நீரானது உடலின் …

Read More »

வேலி மசால்

பருவம் : இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஜூன், அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம். உழவு : இரும்பு கலப்பை கொண்டு 2 அல்லது 3 முறை உழவேண்டும். தொழு உரம் அல்லது கம்போஸ் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும். பார்கள் அமைத்தல் : 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். உரமிடுதல் : மண் பரிசோதனையின்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். விதைப்புக்கு முன் அடியுரமாக முழுஅளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை …

Read More »

அசோலா வளர்ப்பு

அசோலா வளர்ப்பு டிப்ஸ் அசோலா  தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது. பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். மிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும். பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். வேகமாக வளரும் தன்மை கொண்டவை. அசோலா உற்பத்தி மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும். செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மீ அளவுள்ள …

Read More »

குதிரை மசால் சாகுபடி

குதிரை மசால் [மெடிக்காகோ சைட்டைவா] ‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற இதில் 20 சதவீதம் புரதச்சத்தும், 2.30 சதவீதம் சுண்ணாம்பு சத்து 0.23 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் உள்ளது. இதனை தினமும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் கொடுக்கவேண்டும். இதன் அளவு அதிகமானால் “வயிறு உப்பல்” ஏற்பட வாய்ப்புள்ளது. இது குளிர்கால இறவைப் பயிராகும். பருவம் : புரட்டாசி மாதம் ஏற்ற தருணம் நிலம் : வடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலம் விதை : 8 கிலோ இடைவெளி : வரிசைக்கு வரிசை 30 …

Read More »

தர்மபுரியில் ஆட்டுகிடைகள் மூலம் மூலம் இயற்கை உரம் பெரும் விவசாயிகள்

தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பட்ட சாகுபடி பணிக்காக விவசாயிகள் வயல்வெளிகளில் இயற்கை உரங்களை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். வயல்வெளிகளில் கடந்த காலங்களை போல் ஆட்டு பட்டி அமைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். விவசாய நிலங்களில் அதிக அளவில் ரசாயன உரங்கள் மற்றும் மருந்துகள் அடிப்பதால், பூமியில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்பட்டு, மண் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் காற்று, நீர் ஆகியவை மாசு அடைகின்றன. இதனால், தாவரங்களில் நோய் எதிர்ப்பு திறனை இழந்து மரக்கன்றுகள் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் பெரும் …

Read More »

சூரியகாந்தியில் விதைப்பிடிப்பை அதிகரிக்க வழிகள்

சூரியகாந்தி ஓர் அயல் மகரந்த சேர்க்கைப் பயிராகும்.  இந்த மகரந்த சேர்க்கையை ஊக்குவித்தால் நல்ல மகசூல் பெறலாம். 1.ஏக்கர் ஒன்றுக்கு 2 தேனீப் பெட்டிகள் வீதம் வைத்து தேனீக்களை வளர்ப்பதன் மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவித்து நல்ல மகசூல் பெறலாம். மேலும்  தேனீக்கள் மூலம் ஏக்கர் ஒன்ருக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.400/- உபரி வருமானமும் பெறலாம். 2.பூக்கும் தருணத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுமார் 5 முறை பூவின் மேல் பாகத்தை மெல்லிய துணியால் மெதுவாக ஒத்திக் கொடுக்க வேண்டும்.   அல்லது இரு கொண்டைகளையும் …

Read More »

தழைச்சத்து உரத்திற்கு அசோலா

தழைச்சத்து உரத்திற்கு அசோலா இயற்கை, உயிர், ரசாயன உரங்களை பயன்படுத்தி பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை உரிய காலத்தில் சமச்சீர் அளவில் அளிப்பதே ஒருங்கிணைந்த உர மேலாண்மையாகும். தாவர வகை தழைச்சத்து உரமான அசோலா பிற உயிரினங்களோடு சார்ந்து இயங்கும் பெரணி வகை தாவரம். அனாபீனா அசோலி என்ற நீலபச் சைப் பாசி அசோலாவின் உள்ளிருந்து வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்துகிறது. பயிருக்கு தழைச்சத்து அளித்து மண்ணிற்கு இயற்கை உரமாக மாறி மண் வளத்தை பெருக்குகிறது. விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ள வாய்க்கால் பகுதிகளிலும் அசோலா இயற் …

Read More »

அசோலா உற்பத்தியில் லாபம் அடையலாம்

அசோலா உற்பத்தியில் லாபம் அடையலாம் “அசோலா’ உற்பத்தி மூலம், கால்நடை வளர்ப்பை லாபம் மிக்கதாக மாற்ற முடியும்’ என, மாநகராட்சி உயிரியல் பூங்கா இயக்குனர் மற்றும் கால்நடை மருத்துவர் அசோகன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: நீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையை சார்ந்த தாவரம், “அசோலா‘. கால்நடைகளுக்கு மட்டுமின்றி கோழிகளுக்கும், தரமான தீவனமாக பயன்படுகிறது. கால்நடைகளுக்கு தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், விட்டமின்கள், பீட்டாகாரோடின் உட்பட 30 சதவீத புரதச்சத்துகள், இதில் உள்ளன. நிழல் உள்ள இடத்தில் 10 அடி நீளம், இரண்டு அடி …

Read More »