அரசு திட்டங்கள் & சலுகைகள்

உர மானியம் குறைப்பு

பொட்டாஷ் உர மானியத்தை டன்னுக்கு ரூ.9,400 ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. இதற்கான ஒப்புதலை உர அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை அளித்துள்ளது. பொட்டாஷ் உர தேவைக்கு இந்தியா பெருமளவு இறக்குமதியை சார்ந்தே உள்ளது. உர இறக்குமதியில் கடந்த 5 ஆண்டுகளாக 10வது இடத்தில் இந்தியா உள்ளது. இருப்பினும், யூரியாவுக்கான மானியத்தை குறைக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள மானிய குறைப்பு ஏப்ரலுக்கு பிறகு நடைமுறைக்கு வருகிறது.   நன்றி தினகரன்

Read More »

உரங்களுக்கான மானியங்கள் குறைப்பு

இந்த நிதியாண்டுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான மானியங்களை குறைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை முடிவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் உரங்களின் விலை குறைவு ஏற்பட்டதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி மிச்சமாகும். உரங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டபோதும், டை அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு போன்ற உரங்களின் அதிகபட்ச சில்லறை விலை ஒரு டன்னுக்கு முறையே ரூ.1500 மற்றும் ரூ. 1000 குறையும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், …

Read More »

பசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்

பசுமைக்குடில் விவசாயம் என்பது விவசாயிகளுக்கு ஒரு லாபகரமான தொழிலாக இருக்கும் தோட்டக்கலை துணை இயக்குநர் த.சந்திரசேகரன் கூறுகையில், பசுமைக் குடிலை அமைக்க தேசிய தோட்டக்கலைத் திட்டத்தின் கீழ் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியமாக வழங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு, புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் இதற்கு தகுந்த ஆலோசனையை திண்டுக்கல் மாவட்ட தோட்டக்கலைத் துறை வழங்கத் தயாராக உள்ளது. சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு மலைப் பிரதேசங்களில் பசுமைக்குடில்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பசுமைக் குடில்களில் பொதுவாக …

Read More »

செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க மானியம்

  “தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது’ நாமக்கல் வட்டாரத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பண்ணை கழிவுகளை பயன்படுத்தி, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயாரிக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 15 அடி நீளம், ஆறடி அகலம், இரண்டு அடி ஆழம் உள்ள எரு குழிகள் வெட்டி, அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான, செறிவூட்டப்பட்ட தொழு உரம் தயார் செய்யலாம். …

Read More »