1200 மூட்டை மஞ்சள் ரூ.50 லட்சத்திற்கு ஏலம்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை  மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர்,  கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர்,  நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்  சுமார் 1,200 மூட்டை மஞ்சள் கொண்டு வந்தனர். கடந்த வாரத்தைவிட  200 மூட்டைகள் அதிகம் வந்திருந்தது. இவற்றை கொள்முதல் செய்ய  ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து  25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலம் மூலம் ரூ.50  லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. விரலி ரகம் குவிண்டாலுக்கு  ரூ.7,100 முதல் ரூ.8,272 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ.6,150  முதல் ரூ.7,299 வரை விலைபோனது. பனங்காளி ரகத்திற்கு ரூ.11,100  முதல் ரூ.13,500 வரை விலை கிடைத்தது. விரலி ரகத்திற்கு அதிக விலை  கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

நன்றி தினகரன்

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *