வேலி மசால்

பருவம் : இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஜூன், அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம்.

உழவு : இரும்பு கலப்பை கொண்டு 2 அல்லது 3 முறை உழவேண்டும். தொழு உரம் அல்லது கம்போஸ் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும்.

பார்கள் அமைத்தல் : 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.

உரமிடுதல் : மண் பரிசோதனையின்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். விதைப்புக்கு முன் அடியுரமாக முழுஅளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை இடவும்.

விதையளவு : எக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் பார்களின் இருபுறமும் தொடர்ச்சியாக விதைக்கவும். 3 பாக்கெட்டுகள் [600 கிராம் ரைசோபியம் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

நீர் மேலாண்மை : விதைத்தவுடன் பாசனம் செய்ய வேண்டும் மற்றும் மூன்றாவது நாளில் உயிர்ப்பு நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்பு வாரம் ஒரு முறை பாசனம் அளிப்பது சிறந்தத்து.

களை நிர்வாகம் : தேவைப்படும் போது களை எடுக்கவும். அறுவடை விதைத்த 90 நாட்களுக்குப் பிறகு 50 செ.மீ. உயரத்தில் முதல் அறுவடை செய்யவேண்டும். அடுத்தடுத்த அறுவடைகள் 40 நாட்கள் இடைவெளியில் செய்யவேண்டும்.

எக்டருக்கு 125 டன் பசுந்தீவன மகசூல் கிடைக்கும்.

கலப்புப் பயிர் விதைத்த 60 நாட்களுக்குப் பிறகு முதல் அறுவடையும், அடுத்தடுத்த அறுவடைகள் 45 நாட்கள் இடைவெளியிலும் செய்யவேண்டும்.

குறிப்பு :

விதைகள் நன்றாக விதை நேர்த்தி செய்யவேண்டும். கொதித்த நீரை 3-4 நிமிடங்கள் கீழே வைத்து, பின் அதில் வேலிமசால் விதைகளைப் போடவேண்டும். 4 நிமிடங்கள் கழித்து நீரை வடித்துவிட்டு விதையை நிழலில் உலர வைத்து விதைத்தால் சுமார் 80 சதவீதம் முளைப்புத்திறன் கிடைக்கும்

வேலிமசால் விதைகளை கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்லுடன் 1:3 என்ற விகிதத்தில் ஊடுபயிர் செய்யலாம்

நன்றி:  M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (Jamsetji Tata National Virtual Academy)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *