சேலம்: சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி, மேட்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளரிக்காய் அதிக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை இல்லாததால் இந்த ஆண்டு வெள்ளரி விளைச்சல் வழக்கத்தை விட பாதியாக குறைந்துவிட்டது. கடந்த மாதத்தில் ஒரு கிலோ வெள்ளரி ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. கோடை வெப்பம் அதிகரிப்பதால் வெள்ளரி விற்பனையும் உயர்ந்துள்ளது. ஆனால் மார்க்கெட்டுக்கு போதிய வரத்து இல்லாத நிலையில் அதன் விலை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளரி ரூ.160க்கு விற்கப்பட்டது.
நன்றி தினகரன்