Sunday , 19 May 2019
சற்று முன்
Home » தொழில்நுட்பம் » நவீன தொழில்நுட்பம் » வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு-சில்பாலின் தொழில் நுட்பம்

வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு-சில்பாலின் தொழில் நுட்பம்



வீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு

விவசாயிகள் மண்புழு உரத்தினை விலை கொடுத்து வாங்குவதற்கு தயக்கம் காண்பித்து அவரவர் இல்லங்களிலேயே சிறிய முதலீட்டில் தங்கள் வயலுக்கு தேவையான மண்புழு உரத்தினை தயாரிக்க சுலபமான முறை.

சில்பாலின் தொழில் நுட்பம்

  • இந்த உரத்தை நிழலான எந்த இடத்திலும் தயாரிக்கலாம்.
  • விளை நிலங்கள்,தோட்டம் ஆகிய பகுதிகளில் சிறிய இடம் இருந்தால் போதும்.
  • பாலிதீன் வகையில் சில்பாலின் என்ற பிளாஸ்டிக் பை ஒன்றை 12 அடி நீளம்,4 அடி அகலம், 3 அடி உயரம் என்ற அளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
  • நிழலான இடத்தில் 15 அடி நீளமுள்ள மூங்கில் கம்பு நான்கை நட்டு,பாலிதீன் பையை சுற்றி தொட்டி போன்ற அமைப்பில் உருவாக்க வேண்டும்.
  • பின் இதில் ஒரு டன் அளவுள்ள மாடு, பன்றி, ஆடு, வாத்து கழிவுகளும், பருத்தி, வைக்கோல், சோளம், கருப்பு தோகை, இலை தழைகள், சமையலறை கழிவுகள் ஆகியவற்றையும், சாணம் மற்றும் கழிவுகள் தலா ஒரு அடுக்கு என்ற முறையில் 6 அடுக்குகளாக போட வேண்டும்.
  • காலை, மாலைகளில் ஈரப்பதம் வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • தொட்டியின் மேல் பகுதியை கோழி மற்றும் பறவைகள் கிளறா வண்ணம் சாக்கு அல்லது நைலான் வலை கொண்டு மூட வேண்டும்.
  • டன் ஒன்றுக்கு 1 கிலோ மண்புழு தேவைப்படும்.
  • இவ்வாறு செய்த பின் 45 நாட்களில் உரம் உருவாகும்.
  • டன் ஒன்றுக்கு 600 கிலோ மண்புழு உரம் தயாரிக்கலாம்.
  • இதற்கு ஆகும் மொத்த செலவு 800 ரூபாய்.


உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*