வரத்து குறைவால் இஞ்சி விலை உயர்வு

சேலம் மார்க்கெட்டிற்கு கர்நாடக மாநிலம் குடகு, கேரளா,  ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து இஞ்சி விற்பனைக்கு வருகிறது.  ஆடி மாதத்தில் புதிய இஞ்சி வரத்து அதிகளவில் இருக்கும். பொதுவாக  பழைய இஞ்சிக்கு அதிக வரவேற்பு இருக்கும். கடந்த சில நாட்களாக  மார்க்கெட்டிற்கு இஞ்சி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு  மாதத்தில் இஞ்சி விலை கிலோவிற்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது. கடந்த  மாதத்தில் ரூ.3,700க்கு விற்பனையான 60 கிலோ கொண்ட மூட்டை,  தற்போது ரூ.4,800க்கு விற்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும்  மூட்டைக்கு ரூ.1,100 வரை அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனையில்  கடந்த மாதத்தில் ரூ.80 வரை விற்ற ஒரு கிலோ இஞ்சி, தற்போது கிலோ  ரூ.95 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் இஞ்சி  விலை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது

 

நன்றி தினகரன்

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *