வடமாநிலங்களில் உற்பத்தி பாதிப்பு ஆப்பிள் விலை 20 சதவிகிதம் அதிகரிப்பு

வடமாநிலங்களில் ஆப்பிள் உற்பத்தி குறைந்துள்ளதால் அதன் விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில பகுதிகளில் அதிக அளவில் மழைபெய்வது, சில பகுதிகளில் காலம் தவறி மழைபெய்வது, வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிள், வாழை, மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பழ வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிம்லாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘இந்திய ஆப்பிள் சாகுபடியாளர்கள் சங்கத்தின்’ தலைவர் ரவீந்தர் சவுகான் கூறுகையில், ‘கடந்த ஆண்டு காலம் கடந்து மழை பெய்தது. இதனால் ஆப்பிள் விளைச்சல் அதிக அளவில் பாதித்துவிட்டது. கடந்த ஆண்டு 3.5 லட்சம் பெட்டிகள் (ஒரு பெட்டிக்கு 20 கிலோ ஆப்பிள்) உற்பத்தியாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், 2.5 லட்சம் பெட்டிகள் தான் உற்பத்தியானது. மேலும் குளிர்பதன கிடங்குகளிலும் ஆப்பிள் இருப்பு மிக குறைவாக உள்ளது. இப்படிப்பட்ட காரணங்களால் ஆப்பிள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது.

கடந்த 2 மாதங்களில் மட்டும், சுமார் 10 முதல் 20 சதவிகிதம் வரை ஆப்பிள் விலை அதிகரித்துள்ளது. தற்போது சாகுபடி நல்ல முறையில் இருக்கிறது. அடுத்த அறுவடை நடந்து சந்தைக்கு ஆப்பிள் வரத்து அதிகரிக்கும் வரை, இந்த விலை உயர்வு வரும் மே மாதம் வரை நீடிக்கும்’ என்றார். வாழைப்பழ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி.பாட்டீல் கூறுகையில், ‘வாழைப்பழ சாகுபடிக்கு அதிக அளவில் செலவாகிறது. தவிர பருவம் தவறி மழை பெய்வது ஆகிய காரணங்களால் வாழைப்பழம் விலை உயர்கிறது. இன்னொரு பக்கம் மகசூல் குறைவதாலும், தேவை அதிகரிப்பதாலும் அதன் விலை அதிகரிக்கிறது. மாம்பழம் ஒரு கிலோ ^100 முதல் ^130 வரை விற்கப்படுகிறது. மாம்பழம் சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அப்போது அதன் விலை குறையும்’ என்றார்.

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *