Sunday , 19 May 2019
சற்று முன்
Home » வேளாண்மை செய்திகள் » வடக்கில் மழை; தெற்கில் வறட்சி விளைச்சல் பாதிப்பால் புளி விலை உயர்வு
வடக்கில் மழை; தெற்கில் வறட்சி விளைச்சல் பாதிப்பால் புளி விலை உயர்வு

வடக்கில் மழை; தெற்கில் வறட்சி விளைச்சல் பாதிப்பால் புளி விலை உயர்வு



சேலம்: இந்தியாவில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் புளி விளைச்சல் அதிகம். இம்மாநிலங்களில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் புளி அறுவடை செய்து, இந்தியா முழுவதும் புளி விற்பனைக்கு அனுப்புவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தில்தான் புளி அதிகம் விளைச்சல் தருகிறது. தற்போது புளி மண்டிக்கு புளி வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. கிருஷ்ணகிரி புளி மண்டி வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மிகப்பெரிய புளி மண்டி கிருஷ்ணகிரியில்தான் உள்ளது. இங்கு வட மாநிலம் மற்றும் தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்து புளி வரும். நடப்பாண்டு வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால் புளிய மரத்தில் புளியம்பழம் விழுந்து வருகிறது. இதனால் வட மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

 

நன்றி: தினகரன்



உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*