மீன் உணவு மதிப்பு கூட்டு தல்

மீன்களை பயன்படுத்தி 50க்கும் மேலான மதிப்பு கூட்டிய மீன் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைகள் உள்ளது

மத்தி, கோழி மீன், எலிசூரை, கரிக் காடி இறால் போன்ற மீன்வகைகளில் இருந்து விலை மதிப்பு கூட்டிய பொருட்களாக   –

மீன் கட்லெட், மீன்சமோசா, மீன் புட்டு, மீன் ஊறுகாய், மீன் நூடுல்ஸ், இறால் பிரியாணி, இறால் வாடா, மீன் மற்றும் இறால் பஜ்ஜி

 

மீன் சான்ட்விச்

சாளை மீன் (கவல மீன்)  –   அரை கிலோ

வெண்ணெய்   –   200கிராம்

ரொட்டி(பெரியது)  –   3 பாக்கெட்

பெரிய வெங்காயம்   –   2

எலுமிச்சை சாறு  –   5/10 துளிகள்

உப்பு  –    தேவையான அளவு

மிளகுத் தூள்  –    தேவையான அளவு

செய்முறை

மீனை செதில், குடல், துடுப்பு, தலை நீக்கி நன்கு சுத்தம்செய்யவும். சுத்தம் செய்த மீனுடன் உப்பு, மஞ்சள் தூள்சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும். பின்னர் முட்கள்,தோல் நீக்கிய பின் மீனின் சதைப் பகுதியை மட்டும் பிரித்தெடுத்து நன்கு மசிக்கவும். வெங்காயத்தை சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், மீன் சதை,உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு ஆகியவற்றை சேர்த்து பிசையவும். ரொட்டித் துண்டில் வெண்ணெய் தடவி மேற்கூறிய கலவையைப் பரப்பவும். மேலே வெண்ணெய் தடவிய இன்னொரு ரொட்டித் துண்டை வைத்து மூடவும்.சூடான தீயில் அல்லது ஒவனில் 5 நிமிடம் வேக வைத்து ரொட்டித்துண்டுகளைக் குறுக்காக வெட்டி பரிமாறவும்.

 

 

Check Also

SOLAR DRYER தொழில்நுட்பம்

உணவுப் மற்றும் விவசாய பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்க நாம் பல பதப்படுத்துதல் முறைகளை கையாள்கிறோம். அதில் குறிப்பாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *