நெல்லையில் விழா காலங்களில் கிலோ ரூ.1000க்கு விற்கப்ப டும் மல்லிகை பூவின் விலை நேற்று கிலோ ரூ.100 ஆக குறைந்தது. நெல்லை பூ மார்க்கெட்டுக்கு தற்போது சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மல்லிகை பூ அதிகம் வருவதால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.600, பிச்சி ரூ.1000, அரளி ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பிச்சி பூ விளைச்சல் இல்லாததால் ரூ.1000க்கு விற்கப்படுகிறது. மல்லிகை விலை வீழ்ச்சிக்கான காரணம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரை பங்குனி உத்திரம் மாத துவக்கத்திலேயே வந்தால் மட்டுமே பூக்களின் விலை உயரும். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் மாத கடைசியில் வருகிறது. இதனால் உத்திரம் முடிந்த பின்னரே கோயில் கொடை விழாக்கள், முகூர்த்தம் ஆகியவற்றுக்கு நாள்குறிப்பது வழக்கம். இவ்வாண்டு உத்திர திருவிழா மாதக்கடைசியில் வருவதால், பூக்களின் தேவை குறைந்து விலை வீழ்ச்சியடைந்துள்ளது என்றனர்.
நன்றி தினகரன்