மண் புழு உரம் தயாரிப்பு-கேள்வி பதில்கள்

பொதுவாக மண் புழு உர படுக்கையில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டுமா?

முதலில் 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் தெளித்து வரவேண்டும். பிறகு ஈரத்தின் அளவை பொருத்து மூன்று நாடகளுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவேண்டும்

சாணக்கரைசல் குளோரின் கலந்த குடிநீரில் தயாரிக்கலாமா?

குடிநீரில் குறைந்த அளவே குளோரின் இருப்பதனால் பயன்படுத்தலாம்.

மண் புழு உரம் பயன்படுத்தும் வயலில் பியூரிடான் குருனை பயன்படுத்தலாமா?

இரசாயன உரம் பயன்படுத்தும் அதே வேளையில் பயன்படுத்த கூடாது.

மண் புழு உர படுக்கையில் எறும்புகளால் பாதிப்பு உண்டா?

மண் புழு உர படுக்கையில் கட்டாயம் எறும்புகள் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு இல்லாதவாறு கவனிக்க வேண்டும். அவ்வாறு இருப்பின் உர படுக்கையை சுற்றி இரண்டு அடி தள்ளி எறும்பு மருந்தை தூவி பாதுகாக்கலாம்.

உர படுக்கையில் தயாராகும் உரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?

உரத்தை கண்டிப்பாக பாலித்தீன் பைகளில் அடைக்கக்கூடாது. நல்ல காற்றோட்டம் உள்ள துனிப்பைகளில் சேகரிக்க வேண்டும்.

மண் புழு வடிநீர் (வெர்மி ஸ்ப்ரே) பயிர்களுக்கு எப்படி எந்த அளவுகளில் தெளிக்க வேண்டும்?

ஒரு லிட்டர் மண் புழு வடிநீருடன் பத்து லிட்டர் தண்ணீர் கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.

மண் புழு உர படுக்கை திறந்த வெளியில் அமைக்கலாமா?

திறந்த வெளியில் மண் புழு உர படுக்கை அமைக்கலாம் ஆனால் நேரடியாக சூரிய ஒளி படக்கூடாது. உர படுக்கையில் உள்ள மண் புழுக்கள் இறந்துவிட வாய்ப்புள்ளது ஆகையால் மர நிழல்களில் அல்லது கீற்றுக்கொட்டகை அமைத்து உர படுக்கை அமைக்கலாம்.

மண் புழு உரம் தயாரிக்க என்னென்ன வேளாண் கழிவுகளை பயன்படுத்தலாம்?

தினந்தோரும் வீடுகளில் பயன்படுத்தும் வேளாண் கழிவு பொருட்களான காய்கறி கழிவுகள், வைக்கோல், மர இலை தழைகள், மாட்டுச் சாணம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

Check Also

இளநீரின் மருத்துவ பண்புகள்

ஜீரணக் கோளாறுகளால் அவதியுறும் சிறு குழந்தைகளுக்கு இளநீர் ஓர் கைகண்ட மருந்தாகும். • உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *