மண்புழு உரமே விவசாயிகளின் இன்றைய தேவை

சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கவும், பயிர்களின் சிறந்த வளர்ச்சிக்கும், மண்புழு உரமே விவசாயிகள் இன்றைய தேவை

 • மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப உணவு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. பசுந்தாழ் உரத்துக்கு தேவையான மரமோ, செடியோ, கொடியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
 • இதற்கு மாற்றாக மண்புழு உரத்தின் தேவை அவசியமாகி வருகிறது.
 • நிலமும், மண்ணும் மாசுபடாமல் இருக்க மண்புழு உரம் உதவுகிறது.
 • திடக்கழிவு மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கும் மண்புழுவின் தேவை அதிகரித்து வருகிறது.
 • வேளாண் உற்பத்தியை 3 மடங்காக பெருக்க நினைக்கும் அரசின் முயற்சிக்கு மண்புழு உரத்தின் பயன்பாடு அவசியம்.
 • இதை நன்செய் மற்றும் புன்செய் நிலங்களிலும் பயன்படுத்தலாம்.
 • இந்த உரத்தைச் சேர்த்து செடிகளை நடவு செய்தால், விரைவான வளர்ச்சி காண முடியும்.
 • சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க, மண்புழு உரத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்

மண்புழு உரத்திலுள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவுகள்

நுண்ணுட்டம்                  மண்புழு உரம்                 சாதாரண தொழு உரம்

 • நைட்ரஜன்                           1.5%                                         0.3%
 • பாஸ்பரஸ்                            1.0%                                        0.2%
 • பொட்டாஸ்                                     0.65%                                       0.3%
 • ஜிங்க்                                                  04.6 PPM                                 14.5 PPM
 • இரும்பு                                  1247.3 PPM                             1465 PPM
 • மாங்கனீஷ்                                      509.7 PPM                               69.0 PPM
 • தாமிரம்                                 61.5 PPM                                 2.8 PPM

பயிர்களுக்கு வழங்கும் மண்புழு உரத்தின் அளவுகள்

    பயிர்                                                           அளவு ஏக்கர் 1க்கு

 • நெல்                                                  500 முதல் 750 கிலோ/1 ஏக்கர்
 • கரும்பு                                              1000 முதல் 1500 கிலோ / 1 ஏக்கர்
 • பயிறு வகைகள்                            500 கிலோ / 1 ஏக்கர்
 • உருளைக்கிழங்கு           1000 முதல் 1500 கிலோ
 • காய்கறிகள்                                                 750 கிலோ
 • எண்ணெய் வித்துக்கள்       1000 கிலோ
 • பூச்செடிகள்                                      750 முதல் 1000 கிலோ
 • மஞ்சள், இஞ்சி, பூண்டு       1000 கிலோ
 • வெற்றிலை                                                1000 கிலோ
 • ஏலக்காய், கிராம்பு, ரப்பர்            3 முதல் 8 கிலோ வரை / செடி 1க்கு
 • அழகு பூ தொட்டிகள்                    200 கிராம் -1 பூ தொட்டிற்கு
 • மாமரம், தென்னை, பாக்கு         3 கிலோ 1 மாதத்திற்கு
 • கொய்யா, மாதுளை, வாழை     3 கிலோ 1 மாதத்திற்கு
 • சப்போட்டா –                                  7 கிலோ முதல் 10 கிலோ வரை / 1
  மாதத்திற்கு

 

 மண்புழு உரத்தின் பயன்கள்:

 • மண்புழு உரத்தில் சுமார் 1.5% தழைச்சத்து, 0.5%மணிச்சத்து, 0.8% சாம்பல் சத்து, 12% அங்ககக் கரிமப் பொருள்கள் உள்ளன.
 • ஒரு ஏக்கரில் மண்புழு உரத்தை பயன்படுத்தினால் மண்ணின் உயிர்தன்மை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும்.
 • உரத்தில் உள்ள அனைத்துச் சத்துக்களும் தாவரங்களுக்கு உடனே கிடைக்கிறது.
 • இதன்மூலம் பயிரின் வேர் வளர்ச்சி மற்றும் பூக்கும் திறன் தூண்டப்பட்டு, மகசூல் 20 முதல் 30% வரை அதிகரிக்கிறது.

Check Also

மண்புழு உரம்

மண்புழு உரம் ஆடு, மாடு கழிவுகள் மற்றும் வீடு, தோட்டக் கழிவுகளை பள்ளத்தில் குவித்து, அதில் மண் புழுக்களை இட்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *