Friday , 24 May 2019
சற்று முன்
Home » தகவல் களஞ்சியம் » தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரித்தல்

தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரித்தல்


  • இந்த முறையில் 3 அடி அகலம் 11/2 அடி உயரம் 20 அடி நீளம் கொண்ட சிமென்ட் தொட்டிகளை கட்டிக் கொள்ள வேண்டும்.
  • இதுபோல அவரவர் வசதிக்கு ஏற்ப எத்தனை தொட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம்.
  • தொட்டியின் அடிப்பாகத்தில் தண்ணீர் வெளியேற்றுவதற்காக 5 அடிக்கு ஒரு துவாரம் வீதம் இருக்கும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • தொட்டியில் மண்புழு உரம் தயாரிக்க மழை மற்றும் வெய்யிலிலிருந்து பாதுகாக்க கீற்றுக் கொட்டகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
  • மக்கிய கால்நடைக் கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை மேற்சொன்ன தொட்டிகளிலிட்டு தண்ணீர் தெளித்து வரவேண்டும்.
  • வெப்பம் அடங்கிய பின்னர் உரத் தயாரிப்பிற்கு தயாராக உள்ள மேற்படி கழிவுகளின் மேல் பரப்பில் தேர்ந்தெடுக்க மண்புழுக்களை இடவேண்டும்.
  • மண்புழுக்கள் மண்புழு உர உற்பத்தி செய்து வரும். பண்ணையாளர்களிடம் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.
  • சதுர மீட்டருக்கு 2000 புழுக்கள் என்ற அளவில் விட வேண்டும்.
  •  தோராயமாக 1 கிலோவிற்கு 1500 முதல் 2000 புழுக்கள் இருக்கும்.
  • பத்து கிலோ மண்புழுக்கள் 1 மாதத்தில் 1 டன் கழிவுகளை உண்ணும் திறனுடையவை.
  • மண்புழுக்கள் 2 1/2 மாதத்தில் 2 மடங்கு இனப்பெருக்கம் அடைந்து விடும்.

மண்புழு உரத்திலுள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவுகள்

நுண்ணுட்டம்                  மண்புழு உரம்                சாதாரண தொழு உரம்

  • நைட்ரஜன்                            1.5%                                         0.3%
  • பாஸ்பரஸ்                            1.0%                                        0.2%
  • பொட்டாஸ்                          0.65%                                      0.3%
  • ஜிங்க்                                        04.6 PPM                               14.5 PPM
  • இரும்பு                                  1247.3 PPM                             1465 PPM
  • மாங்கனீஷ்                          509.7 PPM                              69.0 PPM
  • தாமிரம்                                 61.5 PPM                                 2.8 PPM

பயிர்களுக்கு வழங்கும் மண்புழு உரத்தின் அளவுகள்

    பயிர்                                                           அளவு ஏக்கர் 1க்கு

  • நெல்                                                             500 முதல் 750 கிலோ/1 ஏக்கர்
  • கரும்பு                                                         1000 முதல் 1500 கிலோ / 1 ஏக்கர்
  • பயிறு வகைகள்                                     500 கிலோ / 1 ஏக்கர்
  • உருளைக்கிழங்கு                                 1000 முதல் 1500 கிலோ
  • காய்கறிகள்                                              750 கிலோ
  • எண்ணெய் வித்துக்கள்                      1000 கிலோ
  • பூச்செடிகள்                                              750 முதல் 1000 கிலோ
  • மஞ்சள், இஞ்சி, பூண்டு                      1000 கிலோ
  • வெற்றிலை                                             1000 கிலோ
  • ஏலக்காய், கிராம்பு, ரப்பர்                  3 முதல் 8 கிலோ வரை / செடி 1க்கு
  • அழகு பூ தொட்டிகள்                           200 கிராம் -1 பூ தொட்டிற்கு
  • மாமரம், தென்னை, பாக்கு               3 கிலோ 1 மாதத்திற்கு
  • கொய்யா, மாதுளை, வாழை          3 கிலோ 1 மாதத்திற்கு
  • சப்போட்டா                                              7 கிலோ முதல் 10 கிலோ வரை / 1
    மாதத்திற்கு

நன்றி:  தினமலர்



உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*