தோவாளை பூ மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இது தவிர இங்கிருந்து கேரளா உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. திருமணம் மற்றும் விஷேச நாட்கள் தற்போது குறைவு என்பதால் பூ விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. நாகர்கோவில் பகுதியில் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனையானது. சீசன் காலங்களில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை போன்று பிச்சிப்பூவும் கிலோ ரூ.200க்கு விற்பனையானது. வாடாமல்லி கிலோ ரூ.30க்கும், அரளி ரூ.50, கிரேந்தி ரூ.25, ரோஜா ரூ.80, சம்பங்கி ரூ.25, தாமரை ஒன்று 50 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
நன்றி தினகரன்