பிப்ரவரியில் ஏற்றுமதி குறைந்துள்ளதால் நடப்பு நிதி ஆண்டிற்கான இலக்கை எட்டுவது கடினம்

ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 5.9 சதவீதம் சரிவடைந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், ஜனவரி மாதத்தில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது, 2013 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைவாகும். நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 56 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி பெரிதும் குறைந்ததால் ஒட்டுமொத்த அளவில் நாட்டின் தேயிலை உற்பத்தி சரிவடைந்துள்ளது.

சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சி.டி.சி. ரக தேயிலை பிரதானமாக எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆர்தோடக்ஸ் ரக தேயிலை ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் தேயிலை நுகர்வு அதிகமாக உள்ளது. காபி நுகர்வு குறைவாக உள்ளதால் உற்பத்தியாகும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது. தேயிலை உற்பத்தியில் அசாமும், காபி உற்பத்தியில் கர்நாடகாவும் முதலிடத்தில் இருந்து வருகின்றன.

 

நன்றி தினத்தந்தி

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *