- பூக்கும் தருணத்தில் உள்ள பயிறு வகை பயிர்களுக்கு இரண்டு சதவீதம் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும்.
- இதற்கு ஏக்கருக்கு 5 கிலோ டி.ஏ.பி., உரத்தை 10 லிட்டர் நீரில் முதல் நாள் இரவு ஊர வைத்து மறு நாள் காலை தெளிந்த நீரை வடிகட்டி 250 லிட்டர் நீரில் கலந்து கைதெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேணடும்.
- இது பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதோடு, தரமான விதைகளை உருவாக்கி மகசூல் அதிகரிக் செய்யும்.வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் பேசியதாவது:
- ஒரு ஏக்கருக்கு எட்டு கிலோ தரமான விதை போதுமானது. உயிர் உரவிதை நேர்த்திக்கு இரண்டு பொட்டலம் ரைசோபியம் 400 மி.லிட்டர் ஆறிய கஞ்சியுடன் கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.
- பாசிப்பயறு மற்றும் உளுந்து பயிருக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ., பயிருக்கு, பயிர் 10 செ.மீ., இடைவெளியில் இருக்குமாறு விதைக்க வேண்டும்.
- ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட வேண்டும்.
நன்றி: தினமலர்