பஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள்

பஞ்சகாவ்யா மூலம் பயிரின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது என்று அறிவியல் பூர்வமாக நிருபித்து உள்ளார்கள் மதுரையில் உள்ள தியாகராஜர் கல்லூரியில் உள்ள உயிர்தொழில் நுட்பவியல் துறையை சேர்ந்த சந்தான மகாலிங்கம், சுரேஷ் குமார், ராஜன் பாபு என்ற மூன்று மாணவர்கள். இடுகை பொருட்கள் மூலமே விவசாயிகள் தற்சார்பை அடைய முடியும் என்கிறார்கள்

“பஞ்சகவ்யாவில் உள்ள பக்டீரியா பிரித்து எடுத்து வளர்ப்பு ஊடகத்தில் வளர்த்து நீரில் கலந்து தாவரங்களுக்கு கொடுத்து வளர்ச்சியை பார்த்தோம்.

இவ்வாறு பிரித்து எடுக்க பட்ட பக்டீரியா அடங்கிய கரைசல் ஊற்றி வளர்த்த தண்டு கீரை வழக்கமான முறையில் வளர்க்க பட்ட  தன்டுகீரையை விட அதிக வளர்ச்சியுடனும் அடர்த்தியாகவும் இருந்தது. பஞ்சகவ்யில் உள்ள நுண் இயிரிகள் ஒவ்வொரு 20 நிமிடதிற்கும் பெருகும். இவற்றின் மூலம் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள்  பயிர்களின் கிளை பகுதிகள், மொட்டு, நுனி, அடிபாகம் வேர் பகுதி ஆகியவற்றின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன” என்கிறார் சந்தான மகாலிங்கம்

“பசு மாட்டின் இரைப்பையில் பலவகையான நுண் இயிரிகள் உள்ளன. அவை அதிகமாக பெருகி சாணத்தில் வெளியேறுகின்றன.  அப்படி பட்ட சாணத்தில் இருந்து தயாரிக்க பட்ட பஞ்சகவ்யா நிலத்திற்கு வளம் சேர்க்க கூடியது ” என்கிறார் சுரேஷ் குமார்.

விவசாயிகளே எளிதாக குறைந்த விலையில் தயாரிக்க கூடியது தான் பஞ்சகவ்யா. இதனை பயன் படுத்தினால் தற்சார்பு அடைவது நிச்சயம் என்கிறார் அவர்.

இதன் மூலம் மண் வளமும் மகசூலும் மேன்படும் என்பதில் ஐயம் இல்லை.

நன்றி: பசுமை விகடன

Check Also

பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை

பஞ்சகாவ்யா தெளிக்கும் முறை கரைசல் அதிகம் மற்றும் குறைந்த அளவு செறிவைக் காட்டிலும் 3% கரைசல் மிகவும் பயன்பாடு உள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *