பசுந்தேயிலைக்கு குறைந்த மாத விலை நிர்ணயம்-உறைபனி, நோய் தாக்கத்தால் மகசூல் பாதிப்பு

மஞ்சூர் : மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு குறைவானவிலை நிர்ணயத்தால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு ஆலைகளும் நு£ற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளும் இயங்கி வருகின்றன.இதில் கூட்டுறவு ஆலைகளில் மட்டும் சுமார் 22 ஆயிரம் சிறு,குறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து  தினமும் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு மாதம் ஒரு முறை குன்னு£ரில் உள்ள இன்ட்கோசர்வ் நிறுவனம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்னர் சம்பந்தப்பட்ட கூட்டுறவு ஆலை மூலம் விவசாயிகளுக்கு அவர்கள் வினியோகித்த பசுந்தேயிலைக்கேற்ப தொகை பட்டுவாடா செய்யப்படும்.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விவசாய உறுப்பினர்களிடம் இருந்து கூட்டுறவு ஆலைகளில் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு மாதவிலை நிர்ணயம் செய்வது தொடர்பான கூட்டம் குன்னு£ரில் உள்ள இன்ட்கோசர்வ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு இன்ட்கோ சர்வ் சேர்மன் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில், கடந்த மாதத்திற்கான பசுந்தேயிலையின் மாத விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதன்படி மாவட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் அதிகபட்சமாக மஞ்சூர், கூடலு£ர் சாலீஸ்பரி, பந்தலு£ர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.13.10 மற்றும் கூடுதலாக 90 பைசா சேர்த்து ரூ.14 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது. கைகாட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை யில் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.13.10 மற்றும் கூடுதலாக 40 பைசா சேர்த்து ரூ.13.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.பிக்கட்டி, குந்தா (எடக் காடு), இத்தலார், கிண்ணக்கொரை, கரும்பாலம், மகாலிங்கா, எப்பநாடு, மேற்கு நாடு, பிதர்காடு, பிராண்டியர் உள்ளிட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.13.10 ஆகவும் மாதவிலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக மாவட்டத்தில் கடும் பனி பொழிவு மற்றும் உறை பனியின் தாக்கத்தால் தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குந்தா உட்பட பல்வேறு பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் சிவப்பு சிலந்தி நோய் தாக்கியுள்ளது.இதனால் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்து போனது. இலை வரத்து பெருமளவு குறைந்துள்ள நிலையில் பெரும்பாலான கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் கடந்த மாதங்களை விட பசுந்தேயிலைக்கு மாத விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

 

நன்றி தினகரன்

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *