ஈரோட்டிற்கு அடுத்து நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன. இங்கு, ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் (ஆர்.சி.எம்.எஸ்) உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடந்தது. அப்போது, விரலி 903 மூட்டைகளும், உருண்டை 481 மூட்டைகளும், பனங்காலி 300 மூட்டைகளும் என மொத்தம் 1,684 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. செவ்வாய் அன்று ஒரே நாளில் ஆர்.சி.எம்.எஸ்சில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது.
நன்றி தினகரன்