தேயிலை உற்பத்தி பாதிப்பு

மத்திய தேயிலை வாரியம் ஒவ்வொரு மாதமும் தேயிலை உற்பத்தி குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 5.9 சதவிகிதம் சரிந்து 2.09 கோடி கிலோவாக குறைந்துள்ளது என்று தேயிலை உற்பத்தி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உற்பத்தி பாதித்ததால் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரியில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 15 சதவிகிதம் குறைவு என்று தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

 

நன்றி தினகரன்

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *