சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி

கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை சுற்றுவட்டார பகுதியில், சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மகாராஜகடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகள், நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் வீரிய ஒட்டுரக பப்பாளி செடிகளை சாகுபடி செய்துள்ளனர்.

 • ஒரு விதை எட்டு ரூபாய்க்கு வாங்கும் விவசாயிகள் ஒரு ஏக்கரில் ஆயிரம் செடிகளை நட்டு வைத்து வளர்க்கின்றனர்.
 • 6 மாதத்திற்கு பின், அறுவடைக்கு வரும் பப்பாளி காய்களை மொத்த வியாபாரிகள் மூலம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜூஸ் பாக்டரி மற்றும் சென்னை, கர்நாடகா மாநிலம் பெங்களூரு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
 • பப்பாளி சாகுபடியில் கூலி ஆட்கள் தேவை குறைவாக உள்ளது.
 • மேலும் மற்ற பயிர்களை போலவே பப்பாளியும் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுவதால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் போகிறது.
 • நெல், கரும்பு,வாழை, மஞ்சள் பயிர்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும் நிலையில், பப்பாளி சாகுபடிக்கு குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படுவதால், விவசாயிகளுக்கு சாதகமாக உள்ளது.
 • இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல விவசாயிகள் பப்பாளி சாகுபடிக்கு மாறியுள்ளனர்.

இது குறித்து மகாராஜகடையை சேர்ந்த பப்பாளி சாகுபடி செய்துள்ள விவசாயி சோமசுந்தரம் கூறியது:

 • கடந்த காலங்களில் கிணற்று பாசனம் மூலம் கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துவந்தோம்.காட்டு விலங்குகள் அட்டகாசம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு நஷ்டமே மிஞ்சியது.
 • இதனால், கடந்த ஆண்டில் இருந்து நான்கு ஏக்கரில் சொட்டு நீர் பாசனம் மூலம், பப்பாளி செடிகளை வளர்த்து வருகிறோம்.
 • ஆறு மாதத்தில், ஒரு ஏக்கரில் வாரத்துக்கு ஒரு முறை இரண்டு டன் பப்பாளி உற்பத்தி செய்யப்படுகிறது.
 • ஒரு கிலோ, 4 ரூபாய் என்ற அளவில் மொத்த விற்பனையாளகர்கள் தோட்டத்திலே வந்து காய்களை எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் வாரத்துக்கு ஏக்கருக்கு, 8,000 ரூபாய் கிடைக்கிறது.
 • செடிகளை பராமரிக்கும் முறையை பொறுத்து விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதால், பல விவசாயிகளும் பப்பாளி சாகுபடிக்கு மாறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்

Check Also

சொட்டு நீர் பாசனத்தில் பப்பாளி

சொட்டு நீர் பாசனம் மூலம் பப்பாளி சாகுபடி செய்யும் பரப்பு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்துள்ளது. சர்க்கரை நோய் மற்றும் வயிறு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *