சின்னவெங்காயம் விலை உயர்வு

சேலம் மார்க்கெட்டிற்கு ராசிபுரம், முத்துநாயக்கன்பட்டி,  நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், பாப்பம்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட  இடங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தை,  மாசி, பங்குனி ஆகிய மாதங்கள் சின்ன வெங்காய சீசனாகும். சேலம்  மார்க்கெட்டிற்கு சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சின்ன வெங்காயம்  மூட்டை மூட்டையாக விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதத்தில்  பனிப்பொழிவால் விளைச்சல் அதிகரித்து வாரத்திற்கு 50 கிலோ கொண்ட  4000 மூட்டைகள் வரை விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகரிப்பால்  கிலோ ரூ.18 வரை விற்பனையானது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் வரத்து குறைவால் சின்ன  வெங்காயம் விலை கிலோவிற்கு ரூ.4 வரை அதிகரித்துள்ளது. தற்போது  ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ ரூ.22 முதல் ரூ.24 வரை  விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,  ‘வாரத்திற்கு 4000 மூட்டைகள் வீதம் வரத்து வந்து கொண்டிருந்த  நிலையில், தற்போது 2000 மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.  இதனால் சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ளது’ என்றனர்.

 

நன்றி தினகரன்

 

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *