சம்பாவுக்கு பின் உளுந்து பயிரிட வேளாண் துறையினர் அறிவுரை

புதுக்கோட் டை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைக்கு பின் அந்த நிலங்களில் உளுந்து சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

  • இதர பயிர்களை விட பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • தண்ணீரும் குறைந்த அளவு போதுமானது.
  • பயறுவகைகளுக்கு நுகர்வோர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதால் இவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • எனவே, உளுந்து, தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, துவரை போன்ற பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் அனைவரும் முன்வரவேண்டும்.
  • மாவட்டம் முழுவதும் தற்போது சம்பா நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில் ஈரப்பதத்தை பயன்படுத்தி பயறுவகைப் பயிர்கள் குறிப்பாக உளுந்து சாகுபடியை விவசாயிகள் துவக்கலாம்.
  • இவை மண் வளத்தை காப்பதோடு, குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான தழைஉரமாகவும் அமையும். பயறுவகை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு தேவையான சான்றுபெற்ற விதைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
  • மாவட்டம் முழுவதும் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் இவற்றை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தண்ணீர் தேவையை குறைத்து வேளாண் விளை பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • நுண்ணீர் பாசனம் அமைக்க முன்வரும் சிறு மற்றும் குறு வி வசாயிகளுக்கு 100 சதவீதம் அதாவது முழு தொகை மானியமாக வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு செலவுத் தொகையில் 75 சதவீதம் மானியமாக வழங்கப்படும். தங்கள் விளை நிலங்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தொடர்புடைய வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்புகொள்ளலாம்.

நன்றி: தினமலர்

Check Also

கத்தரி பயிர் இடுவது எப்படி?

மண் : நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் நிரம்பிய மண் வகைகள் உகந்தது. விதைப்பதற்கும் நடவிற்கும் ஏற்ற பருவம் : …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *