சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேலம் மார்க்கெட்டிற்கு கொத்தமல்லி விற்பனைக்கு வருகிறது. துறையூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் மற்றும் சேலம் மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளுக்கு கொத்தமல்லி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில், வரத்து குறைந்துள்ளதால் கொத்தமல்லி விலை கிலோவிற்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.80 வரை விற்கப்பட்ட கொத்தமல்லி தற்போது ஒரு கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது. மேலும் ரூ.3,000 வரை விற்பனையான 40 கிலோ கொண்ட ஒரு மூட்டை தற்போது ரூ.4,000 வரை விற்பனையாகிறது.இது குறித்து செவ்வாய்பேட்டை கொத்தமல்லி வியாபாரிகள் கூறுகையில், ‘வரத்து குறைவால் மூட்டைக்கு ரூ.1,000 வரை விலை அதிகரித்துள்ளது. புது கொத்தமல்லி இன்னும் விற்பனைக்கு வரவில்லை. தற்போது உள்ள கொத்தமல்லி இருப்பை விற்கிறோம். அடுத்த மாதத்தில் புது கொத்தமல்லி வரும் வரை, கொத்தமல்லி இதே விலையில் விற்பனையாகும்‘ என்றனர்.
நன்றி தினகரன்