கால்நடைகளுக்கு சுத்தமான தண்ணீர்

“நீரின்றி அமையாது உலகு” – வள்ளுவர் வாக்கு.  எந்த உயிரினமானாலும் நீரின்றி வாழ இயலாது.  கால்நடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கன்று.  உயிரினங்கள் உயிர் வாழ காற்றும் உணவும் எவ்வளவு அவசியமோ, நீரும் அவ்வளவு அவசியமே.  உணவின்றி கால்நடைகள் ஒரு மாதம் கூட உயிர் வாழ இயலும்.  ஆனால் நீரின்றி ஒரு வாரம் கூட உயிர் வாழ்வது அரிது.

தண்ணீரின் அவசியம்:

கறவை மாடுகளின் உடல் எடையில் 70% நீரும், பாலில் 87% நீரும் உள்ளது.  உடம்பின் ஒவ்வொரு திசுக்களிலும் நீர் உள்ளது.

நீரானது உடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டையுமே சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் நல்ல முறையில் செயலாற்ற உதவுகிறது.

நீரானது, உணவு உட்கொள்ளுதல் செரித்தல் மற்றும் செரித்த உணவிலிருந்து தேவையான சத்துப்பொருட்களை இரத்தத்தில் சேர்த்தல் போன்ற வேலைகளுக்கு மிகவும் அவசியமாகிறது.

அதேபோல் உடம்பிலுள்ள தேவையற்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றவும் மிகவும் உதவுகிறது.

மேலும், உடம்பின் வெப்ப நிலையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

உடம்பின் செல்களில் உள் மற்றும் வெளியில் உள்ள திரவத்தின் [intra and extra cellular Fluids] pH அழுத்தம் மற்றும் முக்கியமான உப்புச் சத்துக்கள் ஆகியவற்றால் சீரான நிலையில் பராமரிக்கவும் உதவுகிறது.

கால்நடைகள் உட்கொள்ளும் நீரானது, குடிநீர், தீவனத்தில் உள்ள நீர் மற்றும் உணவுப்பொருட்கள் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது உண்டாகும் நீர் [Metabolic Water] என மூன்று வழிகளில் கிடைக்கிறது.  பசுந்தீவனங்களில் 75-90% நீரும் வைக்கோல் போன்ற பொருட்களில் 10-15% நீரும் உள்ளது.  100 கிராம் புரதம் ஆக்சிஜனேற்றம் அடையும்போது 42 கிராம் நீரும், 100 கிராம் கொழுப்புச் சத்து ஆக்சிஜனேற்றம் அடையும்போது 100 கிராம் நீரும், 100 கிராம் கார்போஹைட்ரேட் ஆக்சிஜனேற்றம் அடையும்போது 60 கிராம் நீரும் கிடைக்கிறது.

கால்நடைகளுக்கு தேவைப்படும் தினசரி தண்ணீர் அளவு [ஒரு நாளைக்கு  லிட்டரில்]

இனம் பராமரிப்பு கழுவி
சுத்தப்படுத்துதல்
எல்லாவற்றிற்கும் தினசரி
தேவைப்படும் குறைந்தபட்ச
தண்ணீர் அளவு
பசுக்கள் மற்றும் எருமைகள் 27-28 45-70 110
ஆடுகள் 18 18
பன்றிகள் 20-25 25-28 40
குதிரைகள் 36 36 72
நாய்கள் மற்றும் பூனைகள் 14 14
கோழிகள் 0.25 100 கோழிகளுக்கு 20-30 லிட்டர்

தண்ணீர் குறைவினால் ஏற்படும் விளைவுகள்:

மேற்கண்ட அளவுகளை விட குறைவான அளவு நீர் உட்கொள்வது தொடர்ந்து நிறுத்தப்படுவதால் இரத்தம் மிகவும் கெட்டியாகிவிடுகிறது.  இதனால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது.  நீர் குறைவாக உட்கொள்ளுவதால் சோர்வும், தளர்ச்சியும் ஏற்படுவதுடன் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது.  நீர் உட்கொள்ளுதல் 20-22% ஆகக் குறையும் போது கால்நடைகள் இறக்கவும் நேரிடுகிறது.  ஆனால் நீர் அதிகம் உட்கொள்ளுவதால் எந்தவித எதிரிர்விளைவுகளோ, பாதிப்போ ஏற்படுவதில்லை.  நீர் எல்லா நேரங்களிலும் கிடைக்கும்படியாகச் செய்தல் அவசியம்.

நீர் இழப்பு உட்கொள்ளும் நீரானது மூச்சுக்காற்றிலும், தோலின் மூலம் வியர்வையாகவும், மற்றும் சிறுநீர், சாணம் ஆகியவற்றுடனும் வெளியேற்றப்படுகிறது.  சிறுநீரில் உள்ள யூரியாவானது நீரினால் ‘பாதிப்பு இல்லாத அளவிற்கு கரைக்கப்பட்டு பின் வெளியேற்றப்படுகிறது.

உட்கொள்ளும் நீரின் அளவு சீதோஷ்ண நிலை மற்றும் தீவனத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுகிறது.  கோடைக்காலத்தில் உட்கொள்ளும் நீரின் அளவு 20-30% அதிகமாக இருக்கும்.  அதேபோல் நார்ச்சத்து நிறைந்த பொருட்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பொருட்களை உட்கொள்ளும்போதும் நீரின் தேவை பசுவைவிட கன்றுகளில் அதிகமாகவும், பால் கொடுக்கும் பசுக்களில் இவை இரண்டையும் விட அதிகமாகவும் இருக்கும்.  தீவனத்தில் உள்ள உப்பின் அளவு மற்றும் அதிக புரதம் நிறைந்த உணவு ஆகியவை நீரின் தேவையை அதிகரிக்கின்றன.

சுத்தமான தண்ணீர்

கால்நடைகளுக்கு அளிக்கப்படும் நீரானது, சுத்தமாகவும், கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம்.

அசுத்தமான நீரின் மூலம் பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.  அவை குடற்புழு நோய்கள், பாக்டீரியா எனும் நுண்ணுயிரி மூலம் உண்டாகும் அடைப்பான், தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள், நைட்ரேட், அம்மோனியா போன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் போன்றவையாகும்.

இதுபோன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் கோழிகளில் பேரிழப்பை உண்டாக்கக் கூடும்.

கால்நடைகளுக்கு அளிக்கப்படும் நீரானது,  சுத்தமாகவும், கிருமிகள் இல்லாமலும், துர்நாற்றமில்லாமலும் இருத்தல் மிகவும் அவசியம்.

அசுத்தமான நீரின் மூலம் பல நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.  அவை குடற்புழு நோய்கள், பாக்டீரியா எனும் நுண்னுயிரி மூலம் உண்டாகும் அடைப்பான், தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள், நைட்ரேட், அம்மோனியா போன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் போன்றவையாகும்.

இதுபோன்ற தாது உப்புக்களினால் உண்டாகும் நோய்கள் கோழிகளில் பேரிழப்பை உண்டாக்கக்கூடும்.

கால்நடைகளுக்கு அளிக்கும் நீருடன் சாக்கடை அல்லது கழிவுநீர் கலக்காமல் பார்த்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம்.  இதனால் நோய் உண்டாக்கும் கிருமிகள் குடிநீருடன் கலந்து கால்நடைகள் மற்றும் கோழிகளீல் பெரும் சேதத்தை விளைவிக்கலாம்.

சுத்தப்படுத்தும் முறை:

கால்நடைகளுக்கு அளிக்கும் நீரை கீழ்க்கண்டவாறு சுத்தப்படுத்தி பின்பு உபயோகிக்கலாம்.

குளோரின், ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவற்றை கால்நடைகளுக்கு அளிக்கும் நீரில் கலந்து அளிப்பதால் நீரில் உள்ள நோய் உண்டாக்கும் கிருமிகள் அழிந்து நீர் சுத்தப்படுகிறது.

பாலிபாஸ்பேட் எனும் இரசாயனப் பொருளை நீருடன் கலந்து உபயோகிப்பதால் கால்சியம் கார்பனேட் போன்ற உப்புகள் படியாமல் தடுக்கிறது.

புற ஊதாக்கதிர்களைக் கொண்டு நீரை சுத்தம் செய்யும் முறையும் வழக்கத்தில் உள்ளது.

மேலும் விபரங்களை அருகில் உள்ள அரசு கால்நடை நிலையம் / மண்டல இணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகவும்.

தகவல்: தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை நீர்வள திட்டம்

நன்றி:  M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் (Jamsetji Tata National Virtual Academy)

One comment

  1. nan kalnadai sarntha thakavalkalai pera vendum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *