கருப்பட்டி தேவை அதிகரிப்பு – விலை உயர்வு

கோடை வெயில் காரணமாக கோபி மற்றும் நம்பியூர் பகுதியில் பனை கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புகையிலை சாகுபடி அதிகரிப்பால் கருப்பட்டி தேவை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டதால், கருப்பட்டி உற்பத்தியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பனை மரங்களில் இருந்தும், ஜூன் முதல் அக்டோபர் வரை தென்னையில் இருந்தும் பதநீரை இறக்கி, கருப்பட்டி தயாரிக்கப்படுகிறது.
கோபி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளன. வானம் பார்த்த பூமியான இப்பகுதிகளில் பனை தொழிலை நம்பி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
பனை பதநீருக்கு தற்போது சீஸன் என்பதால், கோபி, சிறுவலூர் பகுதிகளில் கருப்பட்டி வெல்லம் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. போதிய மழை இல்லாததால் பனைமரங்களில் பதநீர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு பனை மரத்தில் தினமும் ஆறு லிட்டர் பதநீர் கிடைக்கும். தற்போது, இரண்டு லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. 18 லிட்டர் பனை பதநீரை காய்ச்சினால்தான் 10 கிலோ கருப்பட்டி கிடைக்க வாய்ப்புண்டு.

மழை காரணமாக பதநீர் உற்பத்தி குறைவால், கருப்பட்டி உற்பத்தியும் குறைந்து விட்டது.
பனை கருப்பட்டி வரத்து குறைந்து வருவதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கிலோ, 50 முதல் 60 ரூபாய் வரை விலை கிடைக்கிறது.
கோபி, நம்பியூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் நடப்பாண்டு அதிகளவில் புகையிலை பயிரிடப்பட்டுள்ளது. புகையிலையை பதப்படுத்த, பனை கருப்பட்டி அவசியம் தேவை. கேரளாவுக்கும் அதிகளவில் பனை கருப்பட்டி ஏற்றுமதியாகிறது.

இந்நிலையில் கருப்பட்டி உற்பத்தி குறைவால், வரும் மாதங்களில் விலை மேலும் உயர வாய்ப்புண்டு. இதனால் கோபி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் பனை கருப்பட்டியை உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:

  • கோடை வெயில் அதிகரித்துள்ளதால் பதனீர் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஜனவரி முதல் மே மாதம் வரை சீஸன் காலமாகும். மழை பெய்து குளிர்ச்சியான காலங்களில் ஒரு மாதத்தில் இரண்டு முதல் எட்டு லிட்டர் பதனீர் கிடைக்கும். கோடை காலத்தில் ஒரு லிட்டர் பதனீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
  • பனை வெல்லம் வரத்து குறைவு காரணமாக நடப்பாண்டு துவக்கத்திலேயே, 10 கிலோ கருப்பட்டி, 500 முதல் 550 ரூபாய் வரை விலை போனது.
  • இப்பகுதியில் உற்பத்தியாகும் கருப்பட்டி கேரளாவுக்கு ஆயுர்வேத மருந்து தயாரிக்கவும், தமிழகத்தில் புகையிலை பதப்படுத்தவும் பயன்படுகிறது.  கோடையில் உற்பத்தி மேலும் பாதிக்கும். விலை உயர வாய்ப்புள்ளது.

நன்றி: தினமலர்

 

Check Also

அழிந்து வரும் பனை மரங்கள்

தென் மாவட்டங்களில் பனைமரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விறகுக்காக விற்பதால் இவை அழியும் தறுவாயில் உள்ளன. ஏற்கெனவே, மருத்துவ குணமிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *