ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி காய்கறிகள் தேக்கம்- தேர்தல் கமிஷன் கெடுபிடிகளால்

ஒட்டன்சத்திரம் : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் தமிழகம் முழுவதும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் போதிய ஆவணங்கள் காட்டியாக வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும். தமிழகம் முழுவதும் நாள்தோறும் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த நடைமுறை காய்கறி வியாபாரிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தினமும் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் வியாபாரம் நடைபெறும். இதை வாங்க தமிழக, கேரள வியாபாரிகள் வருவர். ஞாயிறு முதல் வெள்ளிக்கிழமை வரை வியாபாரம் நடைபெறும். சனிக்கிழமை மார்க்கெட் விடுமுறை.

இந்த ஒரு வாரம் வாங்கிய காய்கறிகளுக்கு வியாபாரிகள் ஞாயிறு காலை பணம் வழங்க வேண்டும். இதற்காக கேரள வியாபாரிகள் அங்கு வசூலான தொகையுடன் ஒட்டன்சத்திரம் வருவர். இரண்டு தினங்களுக்கு முன்பு இரவில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மடத்துக்குளம் வழியாக வரும்போது, 7 வியாபாரிகளிடம் ரூ.29 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் கடந்த 2 நாட்களாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வியாபாரிகள் வரத்து குறைந்து, ரூ.2 கோடி மதிப்பு காய்கறிகள் தேங்கின.இந்நிலையில் நேற்று காலை கேரள, தமிழக வியாபாரிகள், அதிகாரிகள் நடவடிக்கையை கண்டித்து காய்கறிகளை வாங்க மறுத்தனர். இதையடுத்து வியாபாரிகள், கமிஷன் கடைக்காரர்கள், விவசாயிகள் திண்டுக்கல்-பழநி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம் தாசில் தார் விஜயலட்சுமி, டிஎஸ்பி ஜானகிராமன், இன்ஸ்பெக்டர் இளவரசு ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார் த்தை நடத்தினர். பணத்தை பறிமுதல் செய்யும் அதிகாரிகளின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அதிகாரிகள் சமரசத்தை தொடர்ந்து மறியல் வாபஸ் பெறப்பட்டது. மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து வியாபாரிகள் சங்க தலைவர் தங்கவேல் தலைமையில் கலெக்டரை சந்தித்தனர். அவர்க ளிடம் பேச்சு வார்த்தை நடத்திய கலெக்டர் வெங்கடாசலம், கேரளாவில் கடைகளில் வசூல் செய்யும் பணத்தை கடையின் லெட் டர் பேடில் பில்போட்டு வாங்கி வந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது என உறுதியளித்தார். இதையடுத்து நேற்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வியாபாரம் மீண்டும் துவங்கியது.

 

 

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *