Friday , 24 May 2019
சற்று முன்
Home » வேளாண்மை செய்திகள் » ஏற்காட்டில் வாட்டியெடுக்கும் வெயில்: காபி உற்பத்தி பாதிக்கும் அபாயம்
ஏற்காட்டில் வாட்டியெடுக்கும் வெயில்: காபி உற்பத்தி பாதிக்கும் அபாயம்

ஏற்காட்டில் வாட்டியெடுக்கும் வெயில்: காபி உற்பத்தி பாதிக்கும் அபாயம்



ஏற்காடு: ஏற்காட்டில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தற்போது வெயில் வாட்டியெடுக்கிறது. இதனால், காபி உற்பத்தி பாதிக்கும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் காலை 10 மணி வரை மிதமான வெப்பம் காணப்படுகிறது. இதையடுத்து, மாலை 4 மணி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது முன்னதாகவே, கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அந்த பகுதியில் காபி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து  காபி விவசாயிகள் கூறியதாவது:  காபியில் தற்போது அரும்புகள் வரத்தொடங்கியுள்ளன. மார்ச் மாதம் முதல் பூ, ஏப்ரல் மாதம் 2வது பூ, அந்த மாத கடைசியில் 3வது பூ விடும். அரும்புகள் மலரும் தருணத்தில் உரிய நேரத்தில் மழை பெய்தால் கூடுதல் பிஞ்சு பிடிக்கும் வாய்ப்பு ஏற்படும். இந்த மாத இறுதிக்குள் ஒரு மழை பெய்தால் எதிர்வரும் நவம்பர் மாதம் காபி அறுவடையில் கூடுதல் மகசூல் கிடைக்கும். ஆனால், கடந்த ஒரு வாரமாக பகலில் கடும் வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவும் காணப்படுவ தால் மழை பெய்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இந்த மாத இறுதிக்குள் மழை வராவிட்டால் பூக்கள் காய்ந்து அப்படியே உதிர்ந்து விடும். மேலும், எஸ்டேட்களில் கடந்த ஆண்டு பயிரிட்ட சில்வர் ஓக், காபி உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் கருகும் நிலை ஏற்படும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

 

நன்றி தினகரன்



உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

உங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *

*