உற்பத்தி பொருட்களில் இனி விவசாயத்துக்குதான் கிராக்கி

பல ஆண்டுகளாகவே வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, நடுத்தர வர்க்கத்தினரிடையே உணவு தேவை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் குறைந்த விலைக்கு விற்ற உணவுப்பொருட்கள் இன்று விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. சாதாரண மக்கள் முன்பு வாங்கி வந்த உணவு தொடர்பான மாதாந்திர பொருட்களின் விலை இன்று பல மடங்கு கூடிவிட்டது. இந்த விளைபொருட் களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் இல்லாததால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் நாசமாகிறது. இதனாலும் பொருளாதார அளவில் பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவேதான் குளிர்பதன கிடங்குகள் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக உள்ளது. பொதுவாகவே விவசாய உற்பத்தியை பொறுத்தவரை தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. மகாராஷ்டிரா எப்போதும் முதலிடத்தில் உள்ளது.  சமீபத்தில் மத்திய அமைச்சர் சரத்பவார், விவசாய உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதை பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். உணவு தானிய உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2வது இடத்தில் இருக்கிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டபோதும், அதை ஈடுகட்டி பொருளாதாரத்துக்கு பக்கபலமாக விவசாயம் சார்ந்த துறைகளே இருந்து வந்தன.

இந்நிலையில், உணவு தானியங்களின் தேவை அதிகரிப்பு காரணமாக, இதுவரை தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் மீதான மோகத்தை பின்னுக்கு தள்ளி, உணவு பொருட்கள் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எச்எஸ்பிசி குளோபர் சர்ச் ஆய்வின்படி, வரும் 2030ம் ஆண்டில் நடுத்தர வருவாய் பிரிவினர் 130 கோடியாக இருப்பார்கள். இதுவே, 2050ம் ஆண்டில் நடுத்தர வருவாய் பிரிவினரின் எண்ணிக்கை 260 கோடியாக உயரும் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.  நடுத்தர வருவாய் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மாமிச உணவு தேவையும் அதிகரிக்கும்.
சீனாவில் பால் உற்பத்தி பொருட்களின் தேவை குறுகிய காலத்திலேயே வளர்ச்சி அடையும். அதுமட்டுமின்றி, சர்க்கரை தேவை அதிகரிப்பது பிரேசிலில் உள்ள உற்பத்தியாளர்களுக் கும், பாமாயில் தேவை அதிகரிப்பது ஆஸ்திரேலியாவில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக அமையும். பருவநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப் பால் உணவு தானியங்கள்,  விலங்குகள் சார்ந்த உணவு பொருட்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, உலக நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் சீர்கேட்டால் சீனா பெரும் பிரச்னை களை சந்திக்க  நேரிடும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

 

நன்றி தினகரன்

Check Also

கொத்தமல்லி விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் கொத்தமல்லி கிலோவிற்கு ரூ.20 அதிகரித்து, ரூ.100 வரை விற்கப்படுகிறது.ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் விருதுநகர் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *