ஹர்யாநாவில் உள்ள சௌதரி சரண் சிங் வேளாண்மை பல்கலை கழகம், இப்போது, வீட்டிலேயே எளிமையாக, இயற்கை எரு செய்வது பற்றி அறிவுரை சொல்லி இருகிறார்கள்.
வீட்டில் உண்டாகும் காய்கறி கழிவுகள், தோலிகள் போன்றவற்றை தோட்டத்தில் ஒரு மூலையில் போட்டு வரவும். அதன் மேலேயே ஆடு புழுக்கை, சாணம் போன்றவற்றையும் ஒரு குவியலாக போட்டு வரவும். அவ்வபோது, நீர் ஊற்றி, இந்த கலவையை ஈரமாக வைத்திருக்கவும். இந்த குவியல் மீது ஒரு கருப்பு நிற பொலித்தின் ஷீட் மூலம் கட்டி, காற்று உள்ளே போக முடியாத படி வைக்கவும்.
ஒன்றரை முதல் இரண்டு மாதம் பின், ஷீட் திறந்தால், நல்ல இயற்கை எரு கிடைக்கும். கிராமத்தில் எல்லோரும் சேர்ந்து இப்படி செய்தால், சுகாதாரமும் முன்னேறும். வீட்டிலேயே தயார் இப்பதால், செலவும் இல்லை என்கிறது பலகலை கழக வெளியீடு.
நன்றி: newkerala