Sunday , 16 December 2018
சற்று முன்
Home » Tag Archives: turmeric

Tag Archives: turmeric



நாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை


KONICA MINOLTA DIGITAL CAMERA

ஈரோட்டிற்கு அடுத்து நாமக்கல் மாவட்டம்  நாமகிரிப்பேட்டையில் தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன.  இங்கு, ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு  சங்கம் (ஆர்.சி.எம்.எஸ்) உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. கடந்த  செவ்வாய்க்கிழமை நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடந்தது.  அப்போது, விரலி 903 மூட்டைகளும், உருண்டை 481 மூட்டைகளும்,  பனங்காலி 300 மூட்டைகளும் என மொத்தம் 1,684 மூட்டைகள்  விற்பனைக்கு வந்தது. செவ்வாய் அன்று ஒரே நாளில்  ஆர்.சி.எம்.எஸ்சில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

1200 மூட்டை மஞ்சள் ரூ.50 லட்சத்திற்கு ஏலம்


Turmeric-04a

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை  மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர்,  கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர்,  நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்  சுமார் 1,200 மூட்டை மஞ்சள் கொண்டு வந்தனர். கடந்த வாரத்தைவிட  200 மூட்டைகள் அதிகம் வந்திருந்தது. இவற்றை கொள்முதல் செய்ய  ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து  25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலம் மூலம் ரூ.50  லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. ... மேலும் படிக்க... »

மஞ்சள் மார்க்கெட் 5 நாள் விடுமுறை


Turmeric-02a

ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வெளிமார்க்கெட்டிற்கு வரும் 31ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 4ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவினையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்   நன்றி தினகரன் மேலும் படிக்க... »