Monday , 17 June 2019
சற்று முன்
Home » Tag Archives: Tea

Tag Archives: Tea



ரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்


Tea Bud , Two leaf and tea a bud

ரஷ்யாஉக்ரைன் எல்லை பிரச்னை யால் ரஷ்யாவிற்கு தேயிலை தூள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.  தென்னிந்தியாவில் குன்னூர் சிடிடிஏ, அரசு கூட்டுறவு, கொச்சின், கோவை ஏல மையங்களில் விற்பனை செய்யப்பட்ட தேயிலை தூளுக்கு கடந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு சராசரியாக ரூ.109 வழங்கப்பட்டது. இந்தாண்டு இதன் விலை ரூ.92.34 பைசாவாக இருந்தது. வட இந்தியாவில் கடந்த ஆண்டு சராசரி விலை ரூ.128.33 பைசா வழங்கப்பட்டது. இந்தாண்டு இதன் விலை ரூ.116.88 பைசாவாக குறைந்துள்ளது. இந்தியாவில் தேயிலை தூள் விற்பனையில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ... மேலும் படிக்க... »

தேயிலை விற்பனை சரிவு


Tea-07a

கோவை தேயிலை ஏல மையத்தில் இந்த ஆண்டின் 12வது ஏலம் நேற்று நடந்தது. இதில் உள்ளூர் ரகம்(டஸ்ட்) 2.89 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 1.58 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ ரூ87.06. விற்பனை மதிப்பு ரூ1.38 கோடி. ஏற்றுமதி ரகம்(லீப்) 1.55 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 98 ஆயிரம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ ரூ77.82. விற்பனை மதிப்பு ரூ76 லட்சம். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் உள்ளூர் ரகம் வரத்து 44 ... மேலும் படிக்க... »

சர்வதேச மந்தநிலையால் தேயிலை ஏற்றுமதி 13.24% குறைந்தது


Tea-05a

சர்வதேச சந்தைகளில் தேவைப்பாடு குறைந்துள்ளதால், நடப்பு நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஏப்ரல் – பிப்ரவரி) இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில் 13.24 சதவீதம் சரிந்து 69.56 கோடி டாலராக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் 80.18 கோடி டாலராக இருந்தது. நிதி ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுமதி மிகவும் குறைந்ததே இதற்கு காரணமாகும். பாகிஸ்தான் இந்நிலையில், தற்போது பாகிஸ்தானில் தேயிலைக்கான தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இந்திய தேயிலை ஏற்றுமதிக்கு இது சாதகமான அம்சமாகும். ஏனென்றால் சர்வதேச அளவில் தேயிலை ... மேலும் படிக்க... »

ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 6 சதவீதம் சரிவு


Tea leaf-05a

தேயிலை உற்பத்தி ஜனவரி மாதத்தில் 6 சதவீதம் சரிந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 2.19 கோடி கிலோவாக இருந்தது. தென்மாநிலங்களில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டின் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி ஜனவரி மாதத்தில் 8 லட்சம் கிலோ உயர்ந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் தேயிலை உற்பத்தி 19.50 லட்சம் கிலோவிலிருந்து 28.50 லட்சம் ... மேலும் படிக்க... »

தேயிலை உற்பத்தி பாதிப்பு


Tea Leaf-03a

மத்திய தேயிலை வாரியம் ஒவ்வொரு மாதமும் தேயிலை உற்பத்தி குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 5.9 சதவிகிதம் சரிந்து 2.09 கோடி கிலோவாக குறைந்துள்ளது என்று தேயிலை உற்பத்தி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உற்பத்தி பாதித்ததால் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரியில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 15 சதவிகிதம் குறைவு என்று தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.   ... மேலும் படிக்க... »

பிப்ரவரியில் ஏற்றுமதி குறைந்துள்ளதால் நடப்பு நிதி ஆண்டிற்கான இலக்கை எட்டுவது கடினம்


Tea Leaf-01a

ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 5.9 சதவீதம் சரிவடைந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், ஜனவரி மாதத்தில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது, 2013 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைவாகும். நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 56 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி பெரிதும் குறைந்ததால் ஒட்டுமொத்த அளவில் நாட்டின் தேயிலை உற்பத்தி சரிவடைந்துள்ளது. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது ... மேலும் படிக்க... »

பசுந்தேயிலைக்கு குறைந்த மாத விலை நிர்ணயம்-உறைபனி, நோய் தாக்கத்தால் மகசூல் பாதிப்பு


Tea - 01a

மஞ்சூர் : மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு குறைவானவிலை நிர்ணயத்தால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு ஆலைகளும் நு£ற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளும் இயங்கி வருகின்றன.இதில் கூட்டுறவு ஆலைகளில் மட்டும் சுமார் 22 ஆயிரம் சிறு,குறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து  தினமும் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு மாதம் ஒரு முறை குன்னு£ரில் உள்ள இன்ட்கோசர்வ் நிறுவனம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்னர் சம்பந்தப்பட்ட கூட்டுறவு ஆலை மூலம் விவசாயிகளுக்கு அவர்கள் வினியோகித்த பசுந்தேயிலைக்கேற்ப தொகை பட்டுவாடா ... மேலும் படிக்க... »