Thursday , 17 October 2019
சற்று முன்
Home » Tag Archives: வேளாண்மை (page 6)

Tag Archives: வேளாண்மை



ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 6 சதவீதம் சரிவு


Tea leaf-05a

தேயிலை உற்பத்தி ஜனவரி மாதத்தில் 6 சதவீதம் சரிந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 2.19 கோடி கிலோவாக இருந்தது. தென்மாநிலங்களில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டின் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி ஜனவரி மாதத்தில் 8 லட்சம் கிலோ உயர்ந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் தேயிலை உற்பத்தி 19.50 லட்சம் கிலோவிலிருந்து 28.50 லட்சம் ... மேலும் படிக்க... »

1200 மூட்டை மஞ்சள் ரூ.50 லட்சத்திற்கு ஏலம்


Turmeric-04a

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை  மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர்,  கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர்,  நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்  சுமார் 1,200 மூட்டை மஞ்சள் கொண்டு வந்தனர். கடந்த வாரத்தைவிட  200 மூட்டைகள் அதிகம் வந்திருந்தது. இவற்றை கொள்முதல் செய்ய  ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து  25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலம் மூலம் ரூ.50  லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. ... மேலும் படிக்க... »

மஞ்சள் மார்க்கெட் 5 நாள் விடுமுறை


Turmeric-02a

ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வெளிமார்க்கெட்டிற்கு வரும் 31ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 4ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவினையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

ஏற்காட்டில் வாட்டியெடுக்கும் வெயில்: காபி உற்பத்தி பாதிக்கும் அபாயம்


SAMSUNG

ஏற்காடு: ஏற்காட்டில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தற்போது வெயில் வாட்டியெடுக்கிறது. இதனால், காபி உற்பத்தி பாதிக்கும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் காலை 10 மணி வரை மிதமான வெப்பம் காணப்படுகிறது. இதையடுத்து, மாலை 4 மணி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது முன்னதாகவே, கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அந்த பகுதியில் காபி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ... மேலும் படிக்க... »

தேயிலை உற்பத்தி பாதிப்பு


Tea Leaf-03a

மத்திய தேயிலை வாரியம் ஒவ்வொரு மாதமும் தேயிலை உற்பத்தி குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 5.9 சதவிகிதம் சரிந்து 2.09 கோடி கிலோவாக குறைந்துள்ளது என்று தேயிலை உற்பத்தி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உற்பத்தி பாதித்ததால் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரியில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 15 சதவிகிதம் குறைவு என்று தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.   ... மேலும் படிக்க... »

பிப்ரவரியில் ஏற்றுமதி குறைந்துள்ளதால் நடப்பு நிதி ஆண்டிற்கான இலக்கை எட்டுவது கடினம்


Tea Leaf-01a

ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 5.9 சதவீதம் சரிவடைந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், ஜனவரி மாதத்தில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது, 2013 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைவாகும். நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 56 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி பெரிதும் குறைந்ததால் ஒட்டுமொத்த அளவில் நாட்டின் தேயிலை உற்பத்தி சரிவடைந்துள்ளது. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது ... மேலும் படிக்க... »

வடமாநிலங்களில் உற்பத்தி பாதிப்பு ஆப்பிள் விலை 20 சதவிகிதம் அதிகரிப்பு


Apple-01a

வடமாநிலங்களில் ஆப்பிள் உற்பத்தி குறைந்துள்ளதால் அதன் விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில பகுதிகளில் அதிக அளவில் மழைபெய்வது, சில பகுதிகளில் காலம் தவறி மழைபெய்வது, வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிள், வாழை, மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பழ வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிம்லாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘இந்திய ஆப்பிள் சாகுபடியாளர்கள் சங்கத்தின்’ தலைவர் ரவீந்தர் சவுகான் கூறுகையில், ‘கடந்த ஆண்டு காலம் கடந்து மழை பெய்தது. இதனால் ... மேலும் படிக்க... »

ஒரு குவின்டால் மஞ்சள் விலை ரூ.7 ஆயிரத்தை தாண்டியது


Manjal -01a

ஈரோடு : திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் ஈரோடு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஈரோடு நசியனூர் ரோட்டிலுள்ள செம்மாம்பாளையம் தனியார் மஞ்சள் மார்க்கெட்டிலும் மஞ்சள் ஏலம் நடைபெறும். நேற்று மஞ்சள் மார்க்கெட்டிற்கு குறைந்தளவிலேயே மஞ்சள் மூட்டை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக நேற்று தனியார் மஞ்சள் மார்க்கெட்டில் நடந்த ஏலத்தில் இந்த ஆண்டிலேயே முதன்முறையாக ரூ.7 ஆயிரத்தை தாண்டி மஞ்சள் விலை போனது. அதிகபட்சமாக விரலி ரகம் ரூ.7089க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.6,666க்கும் விலை போனது.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி காய்கறிகள் தேக்கம்- தேர்தல் கமிஷன் கெடுபிடிகளால்


Market-01a

ஒட்டன்சத்திரம் : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் தமிழகம் முழுவதும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் போதிய ஆவணங்கள் காட்டியாக வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும். தமிழகம் முழுவதும் நாள்தோறும் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த நடைமுறை காய்கறி வியாபாரிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தினமும் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் வியாபாரம் ... மேலும் படிக்க... »

பசுந்தேயிலைக்கு குறைந்த மாத விலை நிர்ணயம்-உறைபனி, நோய் தாக்கத்தால் மகசூல் பாதிப்பு


Tea - 01a

மஞ்சூர் : மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு குறைவானவிலை நிர்ணயத்தால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு ஆலைகளும் நு£ற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளும் இயங்கி வருகின்றன.இதில் கூட்டுறவு ஆலைகளில் மட்டும் சுமார் 22 ஆயிரம் சிறு,குறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து  தினமும் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு மாதம் ஒரு முறை குன்னு£ரில் உள்ள இன்ட்கோசர்வ் நிறுவனம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்னர் சம்பந்தப்பட்ட கூட்டுறவு ஆலை மூலம் விவசாயிகளுக்கு அவர்கள் வினியோகித்த பசுந்தேயிலைக்கேற்ப தொகை பட்டுவாடா ... மேலும் படிக்க... »