Thursday , 19 September 2019
சற்று முன்
Home » Tag Archives: வேளாண்மை (page 4)

Tag Archives: வேளாண்மைவேலி மசால்


VeliMasal-01a

பருவம் : இறவையில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் ஜூன், அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம். உழவு : இரும்பு கலப்பை கொண்டு 2 அல்லது 3 முறை உழவேண்டும். தொழு உரம் அல்லது கம்போஸ் எக்டருக்கு 12.5 டன் என்ற அளவில் இடவேண்டும். பார்கள் அமைத்தல் : 50 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். உரமிடுதல் : மண் பரிசோதனையின்படி உரமிடவேண்டும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25:40:20 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும். விதைப்புக்கு முன் அடியுரமாக முழுஅளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை ... மேலும் படிக்க... »

நாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை


KONICA MINOLTA DIGITAL CAMERA

ஈரோட்டிற்கு அடுத்து நாமக்கல் மாவட்டம்  நாமகிரிப்பேட்டையில் தான் மஞ்சள் மண்டிகள் அதிகம் உள்ளன.  இங்கு, ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை கூட்டுறவு  சங்கம் (ஆர்.சி.எம்.எஸ்) உட்பட தனியார் மண்டிகள் உள்ளன. கடந்த  செவ்வாய்க்கிழமை நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் நடந்தது.  அப்போது, விரலி 903 மூட்டைகளும், உருண்டை 481 மூட்டைகளும்,  பனங்காலி 300 மூட்டைகளும் என மொத்தம் 1,684 மூட்டைகள்  விற்பனைக்கு வந்தது. செவ்வாய் அன்று ஒரே நாளில்  ஆர்.சி.எம்.எஸ்சில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

வட மாநிலங்களில் மழையால் பாதிப்பு கோதுமை அறுவடை தாமதம்


Wheat -05a

வட இந்தியாவில் பல மாநிலங்களில் பருவம் தவறி பெய்து வரும் மழையால் பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் கோதுமை அறுவடை தாமதமாகியுள்ளது. 10 நாட்கள் தாமதம் கோதுமை அறுவடை பொதுவாக மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டில் மழையால் கோதுமை அறுவடை தாமதம் ஆகியுள்ளதாகவும், குறைந்தபட்சம் 10 நாட்கள் தாமதமாக அறுவடை தொடங்கும் என்றும் பஞ்சாப் மாநில விவசாய துறை இயக்குனர் எம்.எஸ். சாந்து தெரிவித்தார். அறுவடை தாமதம் ஆகியுள்ளதால் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏப்ரல் ... மேலும் படிக்க... »

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்…


Vegetables-01a

என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் ... மேலும் படிக்க... »

உரிகம் புளி விலை உயர்வு


Sweet-Tamarind-01a

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை,  அஞ்செட்டி மற்றும் உரிகம் காட்டுப்பகுதியில் அதிகளவில்  புளியமரங்கள் உள்ளன. இந்த வருடம் போதிய மழையில்லாததால்  உரிகம் புளி விளைச்சல் குறைவாகவே உள்ளது. மரங்களில் பறித்த  புளியை பொட்டு அடித்து பிரித்தெடுக்கும் பணி துவங்கியுள்ளது.  பொட்டு அடித்து புளியை பிரித்தெடுக்கும் பணிக்கு போதிய கூலி  ஆட்கள் கிடைக்காததால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது.  கொட்டை நீக்கிய ஒரு கிலோ புளி ரூ.55 முதல் ரூ.60 வரை  விற்பனையாகிறது. பொட்டுடன் கிலோ 20 ரூபாயாகவும், பொட்டு  அடித்த புளி 23 ரூபாயாக உள்ளது.   ... மேலும் படிக்க... »

பொள்ளாச்சி இளநீருக்கு கிராக்கி: கொள்முதல் விலை அதிகரிப்பு


Tender Coconut-01a

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விளையும்  பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு மக்களிடம் நல்ல  வரவேற்பு உள்ளது. இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில்  இளநீர் அனுப்பப்படுகிறது. கடந்த சில வருடங்களாக பொள்ளாச்சி  சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி  மாநிலங்களுக்கும் இளநீர் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து  அனுப்பப்படுகிறது. தற்போது தேவை அதிகம் உள்ளதால்,  செவ்விளநீருக்கு அதிக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இளநீரின்  விலை ஏற்றமாக இருந்தாலும், வெளியூர் வியாபாரிகள்  பொள்ளாச்சிக்கு நேரடியாக வந்து போட்டி போட்டு கொள்முதல்  செய்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ... மேலும் படிக்க... »

பூக்கள் விலை கடும் சரிவு: மல்லிகை ரூ.70க்கு விற்பனை


Jasmine-02a

தோவாளை பூ மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டம்  மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக  கொண்டு வரப்படுகிறது. இது தவிர இங்கிருந்து கேரளா உள்பட  தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு  செல்லப்படுகிறது. திருமணம் மற்றும் விஷேச நாட்கள் தற்போது  குறைவு என்பதால் பூ விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று  காலை ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது.  நாகர்கோவில் பகுதியில் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனையானது.  சீசன் காலங்களில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,000 வரை  விற்பனை ... மேலும் படிக்க... »

கால நிலை மாற்றத்தால் உணவு பற்றாக்குறை அபாயம்


Golden-Rice-01a

உலகம் முழுவதும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு வரும்  அழிவுகள், கால நிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் உள்ளிட்ட  காரணங்களால் எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்று  அறிவியல் மையத்தின் விஞ்ஞானி என்.எச்.ரவீந்திரநாத்  எச்சரித்துள்ளார். ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் கால நிலை மாற்றம்  குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் அவர் மேலும்  பேசுகையில், ‘இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்றால் பெரும் ஆபத்தை சந்திக்க  நேரிடும்’ என்றார்   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

உற்பத்தி பொருட்களில் இனி விவசாயத்துக்குதான் கிராக்கி


Agriculture-01a

பல ஆண்டுகளாகவே வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, நடுத்தர வர்க்கத்தினரிடையே உணவு தேவை அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் குறைந்த விலைக்கு விற்ற உணவுப்பொருட்கள் இன்று விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. சாதாரண மக்கள் முன்பு வாங்கி வந்த உணவு தொடர்பான மாதாந்திர பொருட்களின் விலை இன்று பல மடங்கு கூடிவிட்டது. இந்த விளைபொருட் களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் இல்லாததால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்கள் நாசமாகிறது. இதனாலும் பொருளாதார அளவில் ... மேலும் படிக்க... »

தேயிலை விற்பனை சரிவு


Tea-07a

கோவை தேயிலை ஏல மையத்தில் இந்த ஆண்டின் 12வது ஏலம் நேற்று நடந்தது. இதில் உள்ளூர் ரகம்(டஸ்ட்) 2.89 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 1.58 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ ரூ87.06. விற்பனை மதிப்பு ரூ1.38 கோடி. ஏற்றுமதி ரகம்(லீப்) 1.55 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. இதில் 98 ஆயிரம் கிலோ விற்பனையானது. சராசரி விற்பனை விலை கிலோ ரூ77.82. விற்பனை மதிப்பு ரூ76 லட்சம். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் உள்ளூர் ரகம் வரத்து 44 ... மேலும் படிக்க... »