Sunday , 20 January 2019
சற்று முன்
Home » வேளாண்மை செய்திகள் (page 3)

வேளாண்மை செய்திகள்



ஏற்காட்டில் வாட்டியெடுக்கும் வெயில்: காபி உற்பத்தி பாதிக்கும் அபாயம்


SAMSUNG

ஏற்காடு: ஏற்காட்டில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தற்போது வெயில் வாட்டியெடுக்கிறது. இதனால், காபி உற்பத்தி பாதிக்கும் என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் காலை 10 மணி வரை மிதமான வெப்பம் காணப்படுகிறது. இதையடுத்து, மாலை 4 மணி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு தற்போது முன்னதாகவே, கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் அந்த பகுதியில் காபி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ... மேலும் படிக்க... »

தேயிலை உற்பத்தி பாதிப்பு


Tea Leaf-03a

மத்திய தேயிலை வாரியம் ஒவ்வொரு மாதமும் தேயிலை உற்பத்தி குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 5.9 சதவிகிதம் சரிந்து 2.09 கோடி கிலோவாக குறைந்துள்ளது என்று தேயிலை உற்பத்தி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உற்பத்தி பாதித்ததால் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரியில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 15 சதவிகிதம் குறைவு என்று தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.   ... மேலும் படிக்க... »

பிப்ரவரியில் ஏற்றுமதி குறைந்துள்ளதால் நடப்பு நிதி ஆண்டிற்கான இலக்கை எட்டுவது கடினம்


Tea Leaf-01a

ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 5.9 சதவீதம் சரிவடைந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், ஜனவரி மாதத்தில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது, 2013 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைவாகும். நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 56 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி பெரிதும் குறைந்ததால் ஒட்டுமொத்த அளவில் நாட்டின் தேயிலை உற்பத்தி சரிவடைந்துள்ளது. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது ... மேலும் படிக்க... »

வடமாநிலங்களில் உற்பத்தி பாதிப்பு ஆப்பிள் விலை 20 சதவிகிதம் அதிகரிப்பு


Apple-01a

வடமாநிலங்களில் ஆப்பிள் உற்பத்தி குறைந்துள்ளதால் அதன் விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில பகுதிகளில் அதிக அளவில் மழைபெய்வது, சில பகுதிகளில் காலம் தவறி மழைபெய்வது, வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிள், வாழை, மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பழ வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிம்லாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘இந்திய ஆப்பிள் சாகுபடியாளர்கள் சங்கத்தின்’ தலைவர் ரவீந்தர் சவுகான் கூறுகையில், ‘கடந்த ஆண்டு காலம் கடந்து மழை பெய்தது. இதனால் ... மேலும் படிக்க... »

அரசு மதிப்பீடுகளுக்கு மாறாக கோதுமை உற்பத்தி குறையும்


Wheat-01a

அரசு மதிப்பீடுகளுக்கு மாறாக கோதுமை உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவம் தவறி பெய்த மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக சில மாநிலங்களில் உள்ள கோதுமை வயல்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே உற்பத்தி பாதிக்கப்படும் என விவசாய ஆணையர் ஜே.எஸ். சந்து தெரிவித்தார். குளிர்கால பயிர் கோதுமை குளிர்கால பயிராகும். ரபி பருவத்தில் (அக்டோபர்–மார்ச்) மிக முக்கிய பயிரான கோதுமை அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நடப்பு பருவத்தில் கூடுதலாக 61 ஆயிரம் ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டில் கோதுமை விளைச்சல் அமோகமாக ... மேலும் படிக்க... »

ஒரு குவின்டால் மஞ்சள் விலை ரூ.7 ஆயிரத்தை தாண்டியது


Manjal -01a

ஈரோடு : திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் ஈரோடு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும், ஈரோடு நசியனூர் ரோட்டிலுள்ள செம்மாம்பாளையம் தனியார் மஞ்சள் மார்க்கெட்டிலும் மஞ்சள் ஏலம் நடைபெறும். நேற்று மஞ்சள் மார்க்கெட்டிற்கு குறைந்தளவிலேயே மஞ்சள் மூட்டை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக நேற்று தனியார் மஞ்சள் மார்க்கெட்டில் நடந்த ஏலத்தில் இந்த ஆண்டிலேயே முதன்முறையாக ரூ.7 ஆயிரத்தை தாண்டி மஞ்சள் விலை போனது. அதிகபட்சமாக விரலி ரகம் ரூ.7089க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.6,666க்கும் விலை போனது.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி காய்கறிகள் தேக்கம்- தேர்தல் கமிஷன் கெடுபிடிகளால்


Market-01a

ஒட்டன்சத்திரம் : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் தமிழகம் முழுவதும் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்பவர்கள் போதிய ஆவணங்கள் காட்டியாக வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்படும். தமிழகம் முழுவதும் நாள்தோறும் லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.இந்த நடைமுறை காய்கறி வியாபாரிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தினமும் ரூ.2 கோடி மதிப்பிலான காய்கறிகள் வியாபாரம் ... மேலும் படிக்க... »

பசுந்தேயிலைக்கு குறைந்த மாத விலை நிர்ணயம்-உறைபனி, நோய் தாக்கத்தால் மகசூல் பாதிப்பு


Tea - 01a

மஞ்சூர் : மாவட்ட கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு குறைவானவிலை நிர்ணயத்தால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் 15 கூட்டுறவு ஆலைகளும் நு£ற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளும் இயங்கி வருகின்றன.இதில் கூட்டுறவு ஆலைகளில் மட்டும் சுமார் 22 ஆயிரம் சிறு,குறு விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களிடம் இருந்து  தினமும் கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலைக்கு மாதம் ஒரு முறை குன்னு£ரில் உள்ள இன்ட்கோசர்வ் நிறுவனம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்னர் சம்பந்தப்பட்ட கூட்டுறவு ஆலை மூலம் விவசாயிகளுக்கு அவர்கள் வினியோகித்த பசுந்தேயிலைக்கேற்ப தொகை பட்டுவாடா ... மேலும் படிக்க... »

வடக்கில் மழை; தெற்கில் வறட்சி விளைச்சல் பாதிப்பால் புளி விலை உயர்வு


Tamarind - 01a

சேலம்: இந்தியாவில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் புளி விளைச்சல் அதிகம். இம்மாநிலங்களில் ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் புளி அறுவடை செய்து, இந்தியா முழுவதும் புளி விற்பனைக்கு அனுப்புவார்கள். தமிழகத்தை பொறுத்தவரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தில்தான் புளி அதிகம் விளைச்சல் தருகிறது. தற்போது புளி மண்டிக்கு புளி வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்து வருகிறது. கிருஷ்ணகிரி புளி மண்டி வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மிகப்பெரிய புளி மண்டி கிருஷ்ணகிரியில்தான் உள்ளது. இங்கு வட மாநிலம் ... மேலும் படிக்க... »

வெளிநாடு போகும் வெள்ளரி..!


6813233319_752a42a794_b

கொடிகளை நைலான் பந்தலில் படர விட வேண்டும். 15-ம் நாளில் இருந்து, 35-ம் நாள் வரை தினமும் 500 கிராம் நீரில் கரையக்கூடிய 19:19:19 பயோ உரத்தை சொட்டுநீரில் கலந்துவிட வேண்டும். 30, 55 மற்றும் 75-ம் நாட்களில் 250 கிராம் நுண்ணுயிர் உரத்தை சொட்டுநீரில் கலந்து விட வேண்டும். 35-ம் நாளில் கைகளால் களை எடுத்து, அன்றிலிருந்து 50-ம் நாள் வரை, தினமும் 700 கிராம் அளவுக்கு 19:19:19 பயோ உரத்தை சொட்டுநீரில் கலந்துவிட வேண்டும். 40 நாட்களுக்கு மேல் கொடிகளில் பழுத்த ... மேலும் படிக்க... »