Tuesday , 26 March 2019
சற்று முன்
Home » வேளாண்மை செய்திகள் (page 2)

வேளாண்மை செய்திகள்



காலிபிளவர் விலை உயர்வு


Close up shot of cauliflower

பெங்களுர், ஒசூர், ராயக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து காலிபிளவர் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகிறது. மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்கள் காலிபிளவர் சீசனாகும். சேலம் மார்க்கெட்டிற்கு தினமும் 5 ஆயிரம் பூக்களுக்கு மேல் விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு பூ ரூ10 வரை விற்கப்பட்டது. இந்நிலையில், சீசன் முடிந்ததால் மார்க்கெட்டிற்கு காலிபிளவர் வரத்து குறைந்து தினமும் ஆயிரம் பூக்கள் மட்டுமே வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் காலிபிளவர் விலை ரூ10 வரை அதிகரித்துள்ளது. தற்போது காலிபிளவர் அளவை பொறுத்து ரூ20 முதல் ... மேலும் படிக்க... »

வரத்து குறைவால் இஞ்சி விலை உயர்வு


Ginger-01a

சேலம் மார்க்கெட்டிற்கு கர்நாடக மாநிலம் குடகு, கேரளா,  ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் இருந்து இஞ்சி விற்பனைக்கு வருகிறது.  ஆடி மாதத்தில் புதிய இஞ்சி வரத்து அதிகளவில் இருக்கும். பொதுவாக  பழைய இஞ்சிக்கு அதிக வரவேற்பு இருக்கும். கடந்த சில நாட்களாக  மார்க்கெட்டிற்கு இஞ்சி வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு  மாதத்தில் இஞ்சி விலை கிலோவிற்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது. கடந்த  மாதத்தில் ரூ.3,700க்கு விற்பனையான 60 கிலோ கொண்ட மூட்டை,  தற்போது ரூ.4,800க்கு விற்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும்  மூட்டைக்கு ரூ.1,100 ... மேலும் படிக்க... »

மாட்டு சந்தையில் பசுமாடு ரூ.60,000


Cattle market-01a

வேலூர் அருகே பொய்கையில் வாரந்தோறும்  செவ்வாய்க்கிழமை நடைபெறும் மாட்டு சந்தை நேற்று நடைபெற்றது.  வேலூர், திருவண்ணாமலை மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும்  சுமார் 1000 மாடுகள் கொண்டுவரப்பட்டன. பசுமாடு ரூ.10 ஆயிரம் முதல்  ரூ.62 ஆயிரம் வரையிலும், எருது மாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.75  ஆயிரம் வரையிலும், எருமை மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.55  ஆயிரம் வரையிலும் விலைபோனது. நன்றி தினகரன் மேலும் படிக்க... »

சின்னவெங்காயம் விலை உயர்வு


Onion-01a

சேலம் மார்க்கெட்டிற்கு ராசிபுரம், முத்துநாயக்கன்பட்டி,  நாமகிரிப்பேட்டை, வெண்ணந்தூர், பாப்பம்பட்டி, காடையாம்பட்டி உள்ளிட்ட  இடங்களில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தை,  மாசி, பங்குனி ஆகிய மாதங்கள் சின்ன வெங்காய சீசனாகும். சேலம்  மார்க்கெட்டிற்கு சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சின்ன வெங்காயம்  மூட்டை மூட்டையாக விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதத்தில்  பனிப்பொழிவால் விளைச்சல் அதிகரித்து வாரத்திற்கு 50 கிலோ கொண்ட  4000 மூட்டைகள் வரை விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகரிப்பால்  கிலோ ரூ.18 வரை விற்பனையானது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் வரத்து குறைவால் ... மேலும் படிக்க... »

மல்லிகை பூ விலை கடும் வீழ்ச்சி


Jasmine-01a

நெல்லையில் விழா காலங்களில் கிலோ ரூ.1000க்கு  விற்கப்ப  டும் மல்லிகை பூவின் விலை நேற்று கிலோ ரூ.100 ஆக குறைந்தது.  நெல்லை பூ மார்க்கெட்டுக்கு தற்போது சங்கரன்கோவில் பகுதியில் இருந்து  மல்லிகை பூ அதிகம் வருவதால் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  சம்பங்கி ரூ.200,  கனகாம்பரம் ரூ.600, பிச்சி ரூ.1000, அரளி ரூ.80க்கு  விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பிச்சி பூ விளைச்சல் இல்லாததால்  ரூ.1000க்கு விற்கப்படுகிறது. மல்லிகை விலை வீழ்ச்சிக்கான காரணம்  குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘நெல்லை, தூத்துக்குடி  மாவட்டங்களை பொறுத்தவரை பங்குனி உத்திரம் ... மேலும் படிக்க... »

வெள்ளரி விலை உயர்வு


Cucumber-01a

சேலம்: சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி, மேட்டூர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளரிக்காய் அதிக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை இல்லாததால் இந்த ஆண்டு வெள்ளரி விளைச்சல் வழக்கத்தை விட பாதியாக குறைந்துவிட்டது. கடந்த மாதத்தில் ஒரு கிலோ வெள்ளரி ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. கோடை வெப்பம் அதிகரிப்பதால் வெள்ளரி விற்பனையும் உயர்ந்துள்ளது. ஆனால் மார்க்கெட்டுக்கு போதிய வரத்து இல்லாத நிலையில் அதன் விலை உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளரி ரூ.160க்கு விற்கப்பட்டது.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

3,289 டன் கோதுமை தஞ்சை வந்தது


Wheat-04a

பொது விநியோக திட்டத்துக்காக 3,289 டன் கோதுமை ரயிலில்  நேற்று தஞ்சைக்கு வந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சரக்கு  ரயிலில் 57 வேகன்களில் 3 ஆயிரத்து 289 டன் கோதுமை மூட்டைகள்  நேற்று தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது. இவை அனைத்தும்  லாரிகளில் ஏற்றப்பட்டு பொது விநியோக திட்டத்திற்காக தஞ்சை,  திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலுர், பெரம்பலூர்  மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.   நன்றி தினகரன் மேலும் படிக்க... »

ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 6 சதவீதம் சரிவு


Tea leaf-05a

தேயிலை உற்பத்தி ஜனவரி மாதத்தில் 6 சதவீதம் சரிந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 2.19 கோடி கிலோவாக இருந்தது. தென்மாநிலங்களில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. நாட்டின் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி ஜனவரி மாதத்தில் 8 லட்சம் கிலோ உயர்ந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் தேயிலை உற்பத்தி 19.50 லட்சம் கிலோவிலிருந்து 28.50 லட்சம் ... மேலும் படிக்க... »

1200 மூட்டை மஞ்சள் ரூ.50 லட்சத்திற்கு ஏலம்


Turmeric-04a

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வேளாண்  உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை  மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் ஆத்தூர், கெங்கவல்லி, கூகையூர்,  கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூர், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர்,  நாமக்கல், மேட்டூர், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்  சுமார் 1,200 மூட்டை மஞ்சள் கொண்டு வந்தனர். கடந்த வாரத்தைவிட  200 மூட்டைகள் அதிகம் வந்திருந்தது. இவற்றை கொள்முதல் செய்ய  ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து  25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். ஏலம் மூலம் ரூ.50  லட்சத்திற்கு மஞ்சள் விற்பனையானது. ... மேலும் படிக்க... »

மஞ்சள் மார்க்கெட் 5 நாள் விடுமுறை


Turmeric-02a

ஈரோடு: ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வெளிமார்க்கெட்டிற்கு வரும் 31ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 4ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் திருவிழாவினையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்   நன்றி தினகரன் மேலும் படிக்க... »