Tuesday , 26 March 2019
சற்று முன்

ஊடுபயிர்



வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி


Banana-Egg Plant-01a

கோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. நெல், கரும்பு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களின் உற்பத்திக்கு பெயர் போன கோபி பகுதியில், ஐந்து ஆண்டுகளாக மாற்றுப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். உரம் விலை பல மடங்கு உயர்வு, விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் சாகுபடியும், சரியான விலை கிடைக்காததாலும், குறித்த காலத்தில் கரும்பு வெட்டாததால் கரும்பு சாகுபடியும், நிரந்தர விலை இல்லாததால் மஞ்சள் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டுக்கு ... மேலும் படிக்க... »

மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயம்


Topioca-01a

சின்னசேலம் பகுதியில் மரவள்ளியில் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். சின்னசேலம் ஒன்றியத்தில் தொட்டியம், அனுமனந்தல், ஈரியூர், கருங்குழி உள்ளிட்ட 50 கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்கின்றனர். பருவ மழையின்றி கிணற்று நீரை பயன்படுத்தி மரவள்ளி, கரும்பு பயிரிட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் ஆண்டிற்கு ஒரு பருவம் மட்டும் தான் பயிர் செய்ய முடிகிறது. அதனால் விவசாயிகளுக்கு குறைவான லாபம் கிடைக்கிறது. எனவே பல விவசாயிகள் ஊடு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மரவள்ளியில் சின்னவெங்காயத்தை ஊடுபயிராக செய்துள்ளனர். மரவள்ளி ... மேலும் படிக்க... »

மணிலா சாகுபடியில் ஊடு பயிராக கேழ்வரகு


Ragi-Plant-01a

தமிழக விவசாயிகள் அதிக பரப்பளவில் மணிலா பயிரை சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக மழை வளம் குறைந்த நிலத்திலும், நீர்ப்பாசனம் இல்லாத மானாவாரி நிலங்களிலும் அதிகளவில் பயிரிடப்பட்டு மணிலா ஒரு தனிப்பயிராகவே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய நடைமுறைச் சூழலில் கர்நாடக மாநில விவசாயிகள் புதிய வேளாண் ஊடுபயிர் முயற்சியாக மணிலாவுடன் கேழ்வரகு சாகுபடி செய்து அதிகளவு லாபம், கால்நடைத் தீவனம், மண்ணின் வளம் பெருக்கம் போன்ற ஆக்கப்பூர்வமான பயன்களைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் ... மேலும் படிக்க... »

வாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை


Elephant yam-01a

கோபி வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பூசணி பயிரிடப்பட்டுள்ளது. வெள்ளைப் பூசணி மற்றும் சாம்பார் பூசணி தனியாகவும், வாழையில் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. பூசணி, 90 முதல், 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஏக்கருக்கு, 20 டன் பூசணி கிடைக்கிறது. சேனைக் கிழங்கு எட்டு மாத பயிர்.மஞ்சளில் அதிகளவில் ஊடுபயிர் செய்யப்படுகிறது. களிமண் பகுதியில் சேனை கிழங்கு நன்கு வளரும். சேனைக் கிழங்கு பத்து மாத பயிராக இருந்தாலும், ஏழு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கரில், 15 முதல் 20 டன் கிழங்கு ... மேலும் படிக்க... »

வாழை வயலில் ஊடுபயிராக பூசணி


Poosani-01a

சத்தியமங்கலம் பகுதியில் வாழை வயலில் நடப்பட்டுள்ள பூசணி, தற்போது அறுவடையாகி வருகிறது. சத்தியமங்கலம் பகுதியில் விவசாயிகள், பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் வாழை பயிரிட்டுள்ளனர். இதில் செவ்வாழை மற்றும் கதளி ஆகிய ரக வாழைகளுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது. இந்த ரகவாழைகள் ஏக்கர் ஒன்றுக்கு செவ்வாழை, 800 வாழை கன்றுகளும், கதளி ஏக்கர் ஒன்றுக்கு, 1,200 வாழை கன்றுகளும் நடப்படுகிறது. ஒவ்வொரு வாழை கன்றுகளுக்கு இடையே செவ்வாழை எட்டு அடி இடைவெளியும், கதளி ரகத்திற்கு ஆறு அடி இடைவெளியும் விடப்படுகிறது. இந்த இடைவெளியில் புற்கள் முளைத்து விடுகிறது. ... மேலும் படிக்க... »

பாக்குத் தோப்பில் ஊடு பயிராக காஃபி செடி


Coffee Plant-01a

ராசிபுரம் அருகே பாக்குத் தோப்பில், ஊடு பயிராக, காஃபி செடி பயிரிடப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தொ.ஜேடர்பாளையம் அருகே ஒசைக்கரையான் ஊற்று உள்ளது. கொல்லிமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியை சேர்ந்தவர் வக்கீல் குமார். அவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில், பாக்கு மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். பாக்கு மரத்தின் இடையே, ஊடுபயிராக, காஃபி செடி வளர்க்க முடிவு செய்தார். நாமகிரிப்பேட்டை தோட்டக்கலை துறை மூலம், 3,000 காஃபி செடிகளை பெற்று, அதை, பாக்கு மரத்தின் இடையே ஊடுபயிராக பயிரிட்டுள்ளார். இந்த காஃபி செடிகள், ... மேலும் படிக்க... »

வாழையில் ஊடுபயிராக வெள்ளரி



கோபி சுற்று வட்டாரத்தில் வாழையில்ஊடுபயிராக பயிரிடப்பட்ட வெள்ளரிபழம் அறுவடை தீவிரமாக நடக்கிறது. விவசாய கூலியாட்கள் பற்றாக்குறை காரணமாக தோட்டக்கலை பயிர்களான காய்கறிகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர். கத்தரிக்காய், வெண்டை, தக்காளி, பாகற்காய், காலிஃபிளவர், புடலை, சின்ன வெங்காயம், பூசணி வகைகள், முள்ளங்கி, கீரை வகைகள் மற்றும் பூ வகைகள் வகைகளை அறுவடை செய்ய கூலியாட்கள் தேவை இல்லை.குடும்ப உறுப்பினர்களே பெரும்பாலும் அறுவடை செய்கின்றனர். தோட்டக்கலை பயிர்கள் மூலம் அதிகளவில் லாபமும் கிடைக்கிறது.  ஃபிப்ரவரி மாத இறுதியில் வாழை, மஞ்சளில் ஊடு பயிராக வெள்ளரி செடி பயிரிடப்பட்டது. ... மேலும் படிக்க... »

“ஊடுபயிர்களால்” கூடுதல் லாபம்



கூடுதல் லாபம் பெறுவதற்காக விவசாயிகள் மத்தியில் ஊடுபயிர் திட்டத்தை சேலம் வேளாண்மை துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டாரத்தில் செம்மை நெல் பயிரிட்ட விவசாயிகளிடம், வயலின் வரப்பில் உளுந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்று வேளாண் அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். நெல் நாற்று நடவு செய்யும் நேரத்தில் வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய வேண்டும். நெல்லுக்கு செல்லும் நீர் உளுந்துசெடிகளுக்கும் கிடைக்கும். இதனால் உளுந்து செடிகளும் செழிப்பாக வளரும். ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள வரப்பில் உளுந்து சாகுபடி ... மேலும் படிக்க... »