Wednesday , 24 July 2019
சற்று முன்
Home » மூலிகைகள்

மூலிகைகள்அம்மான்பச்சரிசி-Euphorbia Hirta


Euphorbia Hirta -01a

அம்மான் பச்சரிசி என்றவுடன் இது அரிசியின் ஒரு வகையோ என நினைக்க தோன்றும். ஆனால் ஒரு சிறு மூலிகை என்பது பலருக்கு தெரியாத ஓன்றாகும். அதுவும் நாம் கானுமிடமெல்லாம் தானாகவே முளைத்து கிடக்கும் ஓன்றுதான். அம்மா என்பது உயர்ந்த எனப்பொருள்படும் தமிழ்சொல்லாகும். உறவுகளில் சிறந்த உறவான தாய் மாமனை அம்மான் என்று குறிப்பிடுவது தமிழகத்தில் உள்ளது. சிறு குழந்தையை வளர்க்க பயன்படும் தாய்பாலை பெருக்கும் குணம் கொண்டதால் இதை அம்மான் என்ற அடைமொழியுடன் சேர்த்து அம்மான்பச்சரிசி என அழைத்தனர். இதன் வட்டவடிவ காயில் அரிசியின் ... மேலும் படிக்க... »

துளசியின் மருத்துவ குணங்கள்


Thulasi-01a

துளசியின் மருத்துவ குணங்கள் சில  தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும்.  மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும். கண் பார்வைக் குறை உடையவர்கள் கண்களில் நேரடியாக இரண்டு சொட்டு துளசிச் சாற்றை விட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். துளசியைத் தினமும் உட்கொண்டு வந்தால் காது வலி, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். துளசி கஷாயம் வாய் துர்நாற்றத்தையும் பால் விளை நோய்களையும் நீக்கும். துளசிச் செடி அதிக ... மேலும் படிக்க... »

துவரை, அவரைக்கு மூலிகைப் பூச்சி விரட்டி!துவரை மற்றும் அவரையில் காய் துளைப்பானின் தாக்குதல் அதிகம் இருக்கும்.  இதற்கு விவசாயிகள் அதிக அளவு இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்துவர்.  காய்த்துளைப்பான் அதிகமுள்ள பகுதியில் துவரை மற்றும் அவரை பயிரிடுவதைக்கூடத் தவிர்த்துவிடுவர். கீழ்கண்ட முறையில் பூச்சிக்கொல்லிமருந்தினை தயாரித்து காய்த்துளைப்பானை கட்டுப்படுத்தலாம். சுண்டக்காய் – அரைகிலோ எட்டிக்காய் – 1 கிலோ நொச்சி – அரை கிலோ சோற்றுக்கற்றாலை – அரைகிலோ பீனாரி சங்கு – அரைகிலோ வேப்பங்கொட்டை – 1/4 கிலோ உருகுலா பட்டை – 1/2 கிலோ ஆகியவற்றை  ஒன்றாக ... மேலும் படிக்க... »

வசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்மருத்துவத்திற்கு பயன் படக்கூடிய வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய கோலியாஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்றொரு பயிரான வசம்பும் சாகுபடி செய்யப்படுகிறது. வசம்பிற்கு பிள்ளை வளர்த்தி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஓராண்டு பயிரான இதன் வேர் மற்றும் தண்டு பகுதிகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. மருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, எடைபாடி பகுதியில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் வசம்பு ... மேலும் படிக்க... »

ஆடாதோடா உயிர்வேலி


Adhatoda-01a

ஆடாதோடா மூலிகையானது அகாந்தேசி என்ற தாவரவியல் குடும்பத்தில் ஜஸ்டிசியா ஆடாதோடா என்ற தாவரவியல் பெயரால் வழங்கப்படுகிறது. 4 மீட்டர் வரை வளரக்கூடியது. ஆடாதோடா முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டாலும் ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது. ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இதன்பங்கு அளப்பரியதாகும். குறிப்பாக சுவாச நோய்கள், சளி, இருமல், ஆஸ்துமா, தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுகிறது. இத்தாவரத்தில் காணப்படும் வாசிசின் என்ற மருந்துப் பொருளே இதன் மருத்துவ குணத்துக்கு காரணமாக ... மேலும் படிக்க... »

தரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழைதிருநெல்வேலி மாவட்டம்,பாவூர்சத்திரம் பகுதியில் தரிசு நிலங்களில் அதிகமாக சோற்றுக் கற்றாழை பயிரிடப்பட்டு வருகிறது. சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும். மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான அளவில் நடைபெற முடியாத நிலையில் மூலிகைப் பயிரான சோற்றுக் கற்றாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது. இந்தப் பயிர் அதிகளவில் தரிசுநிலப் பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது. ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும்.இது ஆடு, மாடு ... மேலும் படிக்க... »

வெட்டிவேர் மகிமைகள்விலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் வெட்டிவேர் எல்லா விவசாயிகளுக்கும் நன்மை செய்யும் ஒரு வெற்றி வேராகத் திகழ்கிறது. பிரதானமாக இந்த வேர் மண் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. வெட்டிவேரின் செடிகளை வேருடன் வெட்டி, தோண்டி எடுத்து, ஒரு கொத்தாக உள்ள செடியைத் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். பின் வேர்ப்பகுதியிலிருந்து 15-20 செ.மீ. மேலே உள்ள இலைகளை வெட்டிவிட வேண்டும். வேர்ப்பகுதியிலிருந்து 10 செ.மீ. கீழே உள்ள வேர்களை வெட்டி, நடுவதற்கு உள்ள நாற்றுக்களைத் தயாரிக்க வேண்டும். இதனை 15 செ.மீ. இடைவெளியில் ... மேலும் படிக்க... »

வசம்பு – பூச்சிவிரட்டிவசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர். நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10 கிலோ அளவில் தூவினால் போதும். காய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ தூவினால் போதும். பருத்தியில் அசுவினி, காய்ப்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த 5 ... மேலும் படிக்க... »

வசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்மருத்துவத்திற்கு பயன் படக்கூடிய வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய கோலியாஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்றொரு பயிரான வசம்பும் சாகுபடி செய்யப்படுகிறது. வசம்பிற்கு பிள்ளை வளர்த்தி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஓராண்டு பயிரான இதன் வேர் மற்றும் தண்டு பகுதிகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. மருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, எடைபாடி பகுதியில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் வசம்பு ... மேலும் படிக்க... »

வெட்டிவேர் நாற்றுகள்வெட்டிவேர் இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது: இது ஒரு லாபகரமானபயிர். இதற்கு அதிக ஆள் தேவையில்லை. அதிக தண்ணீர் தேவையில்லை. அதிக வெயில் தேவையில்லை. அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை. வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது. பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50,000 வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன   நன்றி: தினமலர் மேலும் படிக்க... »