Monday , 17 June 2019
சற்று முன்
Home » பயிர் மேலாண்மை

பயிர் மேலாண்மைபுதிய கத்திரி பயிர்: TNAU VRM 1புதிய கத்திரி பயிர்: TNAU VRM 1 சிறப்பு இயல்புகள்: அதிக மகசூல் இலை தண்டு பகுதிகளில் முட்கள் கொத்து கொத்து ஆக காய்க்கும் தன்மை காய்கள் முட்டை வடிவம் கொண்டன ஊதா நிற காய்களில் முனையில் சிறிது பச்சை நிறம் இலை புள்ளி, வாடல் நோய், எப்பிலாகின வண்டுகளில் தாக்குதல் எதிர்ப்பு வயது: 140  முதல் 150 நாட்கள் பருவம்: ஆடிப்பட்டம், புரட்டாசி பட்டம், கோடை மகசூல்: முதல் ஹெக்டர் பயிர் இட உகந்த மாவட்டங்கள்: வேலூர் மற்றும் திருவண்ணாமலை நன்றி: தமிழ் ... மேலும் படிக்க... »

கத்தரி பயிர் இடுவது எப்படி?மண் : நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் நிரம்பிய மண் வகைகள் உகந்தது. விதைப்பதற்கும் நடவிற்கும் ஏற்ற பருவம் : டிசம்பர் – ஜனவரி மற்றும் மே – ஜீன் விதை அளவு : 400 கிராம் ஒரு எக்டருக்கு. நாற்றாங்கால் அளவு: 100 சதுர மீட்டர் எக்டருக்கு. விதையும் விதைப்பும் ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது கேப்டான் அல்லது திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.மேலும் விதைகளை அசோஸ்பைரில்லம் கொண்டும் நேர்த்தி செய்யவேண்டும். 400 ... மேலும் படிக்க... »

பயிர் பாதுகாப்பில் வேம்பு!பூச்சிகொல்லி மருந்துகள் நமக்கும் நிலவாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கேடுகள் விளைவிக்கின்றன.  சுற்றுப்புறச்சூழலும் மாசுபடுகிறது.  ஆதலால் பயிர்பாதுகாப்பில் தாவரப்பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவது தற்போது விவசாயிகளிடையே பிரபலமடைந்து வருகிறது. தாவரப்பூச்சிக்கொல்லிகளினால் மிகவும் முக்கியமானது வேம்பு ஆகும்.  சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துவதில்  வேம்பிற்கு ஈடான மரம் வேறொன்றும் இல்லை.  வேப்ப மரத்தின் இலைகள், வேப்பங்கொட்டை, வேப்பம் பிண்ணாக்கு, வேப்பெண்ணெய், வேப்பங்கொட்டைச்சாறு அனைத்தும் விவசாயிகளுக்கு உதவுகிறது.  வேம்பில்  உள்ள அசாடிராக்டின் என்ற இரசாயணப் பொருளே பூச்சிக்கொல்லி தறனுக்கு முக்கிய காரணமாகும்.   வேம்பு நேரடி பூச்சி கொல்லியாக மட்டுமல்லாமல் பூச்சி விரட்டியாக  ... மேலும் படிக்க... »

புதிய தக்காளி பயிர்


Tomoto-01a

புதிய ரக தக்காளி – வீரிய ஒட்டு3 இந்த ரகம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எக்டருக்கு 96.2 டன் பழமகசூல் கொடுக்கக் கூடியது. இது கோடிஎச்.2, லட்சுமி ரகங்களைக் காட்டிலும் முறையே 9.76 மற்றும் 42.24 சதம் கூடுதல் மகசூலாகும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 129.5 டன் கொடுக்க வல்லது. வயது – 145-150 நாட்கள். பருவம் – பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், நவம்பர்-டிசம்பர். பயிரிட உகந்த மாவட்டங்கள்: கோவை, சேலம், கடலூர், தஞ்சாவூர், மதுரை, தேனி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ... மேலும் படிக்க... »

வெண்டைப் பயிரை பாதுகாப்பது எப்படி?தை பட்டம், ஆடி பட்டம் ஆகிய இரு பருவங்களில் வெண்டை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தை பட்டச் சாகுபடி நடந்து வருகிறது. தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக, சூரியனின் உஷ்ணம் பூமியில் படும்போது, மண் சூடாகிறது. இதில் பூச்சிகளின் தாக்குதல் அதிகம் ஏற்படுகிறது. வெண்டை விதைத்த ஒரு மாதத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடங்கும்.இது குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு அதிகம் இல்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நஷ்டமடைய நேர்கிறது. வெண்டை பயிரைக் காப்பதற்கான வழிமுறைகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் ... மேலும் படிக்க... »

வனவியல் விரிவாக்கம் மூலம் இலவச மரப் பயிர்கள்கிருஷ்ணகிரி வனவியல் விரிவாக்க கோட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நீண்டகால மரப் பயிர்கள் மற்றும் குறுகிய கால மரப் பயிர் வகைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து வனவியல் விரிவாக்கக் கோட்ட அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனவியல் விரிவாக்க கோட்டத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு நிறைந்த பயன் தரக்கூடிய உயர் ரக மரக் கன்றுகளான தேக்கு, சில்வர் ஓக், மலை வேம்பு, பெருமரம், வேங்கை, குமிழ், வேம்பு, பலா, நாவல், நெல்லி, புளி, ... மேலும் படிக்க... »

எலுமிச்சை சாகுபடியில் பயிர்ப் பாதுகாப்பு முறைகள்தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலை காரணமாக,எலுமிச்சையில் அதிக மகசூல் கிடைக்கிறது. அதே நேரத்தில், 15 வகையான பூச்சிகளின் தாக்குதலால், எலும்ச்சையில் பெரும் சேதமும் ஏற்பட்டு வருகிறது. இலையைக் குடையும் புழு, சில்லிட் ஒட்டுப் பூச்சி, அசுவிணி, கறுப்பு ஈ மற்றும் தாவர நூல் புழுக்களின் தாக்குதலால், எலும்ச்சை செடிகள் சேதமடைந்துள்ளன. இலையைக் குடையும் புழுவானது,இளம் இலைகளைக் குடைந்து புறத் தோல்களுக்கு இடையிலான திசுக்களை உள்கொண்டு சேதத்தை விளைவிக்கிறது. அதிகம் தாக்கப்பட்ட இலைகள் பலவித நெளிவு, வளைவுகளுடன் காணப்படுவதோடு, இலைகள் காய்ந்து, சிறுத்து, செடியின் ... மேலும் படிக்க... »

உளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6உளுந்து வம்பன்6 சிறப்பு இயல்புகள் சாயாத உதிராத ஒரு சேர பூக்கும் திறன் மஞ்சள், தேமல் மற்றும் சாம்பல் நோய் எதிர்ப்பு திறன் மானாவரி மற்றும் இரவைக்கு ஏற்றது புரத சாது -21.1% வயது: 65-70 நாட்கள் பருவம்: ஆடி பட்டம், புரட்டாசி பட்டம் மற்றும் தை பட்டம் மகசூல்:  சராசரி: 871கிலோ/எக்டேர் இரவை:890 கிலோ/எக்டேர் மாணவரி: 850 கிலோ/எக்டேர் பயிரிட உகந்த மாவட்டங்கள்: நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர எல்லா மாவட்டங்களுக்கும் உகந்தது நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் மேலும் படிக்க... »

சம்பாவுக்கு பின் உளுந்து பயிரிட வேளாண் துறையினர் அறிவுரைபுதுக்கோட் டை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடைக்கு பின் அந்த நிலங்களில் உளுந்து சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதர பயிர்களை விட பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தண்ணீரும் குறைந்த அளவு போதுமானது. பயறுவகைகளுக்கு நுகர்வோர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதால் இவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, உளுந்து, தட்டைப்பயிறு, பாசிப்பயிறு, துவரை போன்ற பயறுவகைப் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ... மேலும் படிக்க... »

கலக்கல் வருமானம் தரும் கறிவாழை!


7015157331_4ff9f7772a_b

ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, ஏலக்கி… என வாழையில் வகை வகையான ரகங்கள் இருக்கின்றன. என்றாலும்… கூட்டு, குழம்பு, வறுவல், பொரியல் என்று ஒரு காய்கறியாகவே பயன்படும் ஒரே ரகம், மொந்தன் மட்டுமே. இதை கறிவாழை என்று கூட சொல்லலாம். இன்னும் சிப்ஸ், பஜ்ஜி மற்றும் பழம் என்று பலவிதங்களிலும் பயன்படுகிறது மொந்தன். அதனால்தான், ஆண்டு முழுவதுமே இந்த ரகத்துக்கான தேவை இங்கே அதிகமாகவே இருக்கிறது! திருவண்ணாமலை மாவட்டம், பள்ளக்கொல்லை கிராமம். நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ, மஞ்சள், கரும்பு, வாழை, நெல்… எனப் ... மேலும் படிக்க... »