Monday , 10 December 2018
சற்று முன்
Home » பயிர்கள்

பயிர்கள்



நடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்


Cotton-01a

நடப்பு 2014-15 பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்) பருத்தி உற்பத்தி வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 4.06 கோடி பொதிகளை எட்டும் என இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு பொதி என்பது 70 கிலோ பருத்தியை கொண்டதாகும். தற்போதைய மதிப்பீடுகளின்படி குஜராத் மாநிலத்தில் பருத்தி உற்பத்தி அதிகபட்சமாக 1.25 கோடி பொதிகளாக இருக்கும். அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தி 85 லட்சம் பொதிகளாக இருக்கும். தெலுங்கானாவில் 45 லட்சம் பொதிகளும், கர்நாடகா மாநிலத்தில் 36 லட்சம் பொதிகளும், சீமாந்திராவில் 25 லட்சம் பொதிகளும் உற்பத்தியாகும். அரியானாவில் ... மேலும் படிக்க... »

மானாவாரி பருத்தி பயிரிட மண் பரிசோதனை அவசியம்



மானாவாரி பருத்தி சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. மாரிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: எங்கள் அறிவியல் மையமானது, பருத்தி சாகுபடியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்கிறது.இந்த ஆய்வுகளின் முடிவுப்படி, மானாவாரிப் பருத்தி பயிருக்கு மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி பயிரிடும் கரிசல் மண் வகை அதிகளவிலும், செம்மண் வகை ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகிறது. மண் பரிசோதனை செய்யும்போது, மண் ஆய்வக வல்லுநர்கள் ... மேலும் படிக்க... »

நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரமிடல்



நெற்பயிருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் எவ்வாறு முக்கியமோ அதுபோல் நுண்ணூட்ட சத்து மிகவும் முக்கியமாகும். நெல் நுண்ணூட்ட உரம் ஒரு ஏக்கருக்கு 5 கிலோவுடன் சமபங்கு மணல் கலந்து நடவுக்கு முன்பு தனியாக இட்டு பின்பு நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நுண்ணூட்ட உரமிட்டு நடவு செய்வதால் பயிருக்கு தேவையான இரும்புசத்து 0.3 சதம், மாங்கனீசு 0.3 சதம், துத்தநாகம் 3 சதம், தாமிரம் 0.4 சதம், போரான் 0.2 சதம், மக்னீசியம் 4 சதம் எளிதாக கிடைக்கிறது. பயிர் வளர்ச்சியின் போது ... மேலும் படிக்க... »

பயறு பயிர்களைத் தாக்கும் பச்சைப் புழு கட்டுப்படுத்தும் வழிகள்



விவசாயிகள் பயிரிடும் பயறுவகை பயிர்களை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. குறிப்பிட்ட சில வைரஸ்களை கொண்டு தயாரிக்கப்படும் உயிர்ரக மருந்துகளைக் கொண்டு இவ் வகையான பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். நிலக்கடலை, உளுந்து, பச்சைப்பயிறு, துவரை, சோயா பீன்ஸ், சூரியகாந்தி பயிர்களில் பச்சை புழு சேதத்தை உருவாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.இந்த பச்சைப் புழுக்களை வைரஸ் உயிரிகளைப் பயன்படுத்தி அழிக்கலாம். இப் பூச்சிகளை அழிக்க என்.பி.வைரஸ் என்ற உயர்ரக பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது. இப் பூச்சிக் கொல்லி குறித்தும் இதைப் பயன்படுத்தும் முறை குறித்தும் புதுச்சேரி வேளாண்மை அறிவியல் ... மேலும் படிக்க... »

“ஊடுபயிர்களால்” கூடுதல் லாபம்



கூடுதல் லாபம் பெறுவதற்காக விவசாயிகள் மத்தியில் ஊடுபயிர் திட்டத்தை சேலம் வேளாண்மை துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகையில், சேலம் மாவட்டம் கொளத்தூர் வட்டாரத்தில் செம்மை நெல் பயிரிட்ட விவசாயிகளிடம், வயலின் வரப்பில் உளுந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்று வேளாண் அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர். நெல் நாற்று நடவு செய்யும் நேரத்தில் வரப்பில் உளுந்து சாகுபடி செய்ய வேண்டும். நெல்லுக்கு செல்லும் நீர் உளுந்துசெடிகளுக்கும் கிடைக்கும். இதனால் உளுந்து செடிகளும் செழிப்பாக வளரும். ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள வரப்பில் உளுந்து சாகுபடி ... மேலும் படிக்க... »

நெற்பயிரில் உர மேலாண்மை



நெல் பயிரில் உயர் விளைச்சல் பெறுவதற்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை நிர்வாகத்தை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும்.: நெல் விளைச்சலில் 40 விழுக்காடு உர நிர்வாகத்தைப் பொருத்தே அமைகிறது. இயற்கை எருக்களான பசுந்தாள் உரம், தொழு உரம், மண்புழு உரம், மக்கிய தென்னை நார்க் கழிவு, செயற்கை உரங்களான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்கள், உயிரி உரங்களான பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்ஸ் பைரில்லம், நுண்ணூட்ட சத்துகளைச் சேர்த்து சமச்சீர் உணவாக நெல்லுக்கு அளிப்பது தான் ஒருங்கிணைந்த உர மேலாண்மை நிர்வாகம். இதனால் நிலவளத்தை காத்து, ... மேலும் படிக்க... »

இயற்கை முறை விவசாயத்தில் நெற்பயிர்


Crop -01a

கடந்த காலங்களில் செயற்கையான உரங்கள் வருகைக்கு முன்பு விவசாயம் என்றாலே இயற்கை உரங்கள் மூலம் விவசாயிகள் பயிரிட்டு வந்தனர் காலப்போக்கில் செயற்கையான உரங்கள் ஏராளமாக வரத் துவங்கியதால் இயற்கை உரங்களை மறந்தனர்.தமிழகத்தில் பெரும்பாலான விவசாயிகள் செயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வரும் நிலையில்,விவசாயி ஒருவர் ஐந்து ஆண்டுகளாக இயற்கை உரங்களை பயன்படுத்தி நெற்பயிர் செய்து வருகிறார்.மேலும் அவர் இயற்கை முறை விவசாயத்தில் 10 ஆண்டுகளாக கரும்பு, வாழை போன்றவற்றை பயிர் செய்து வருகிறார். ஐந்து ஆண்டுகளாக, இயற்கை முறை விவசாயத்தை செய்து வருகிறேன். ... மேலும் படிக்க... »

கலக்கல் வருமானம் தரும் கறிவாழை!


7015157331_4ff9f7772a_b

ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி, செவ்வாழை, ஏலக்கி… என வாழையில் வகை வகையான ரகங்கள் இருக்கின்றன. என்றாலும்… கூட்டு, குழம்பு, வறுவல், பொரியல் என்று ஒரு காய்கறியாகவே பயன்படும் ஒரே ரகம், மொந்தன் மட்டுமே. இதை கறிவாழை என்று கூட சொல்லலாம். இன்னும் சிப்ஸ், பஜ்ஜி மற்றும் பழம் என்று பலவிதங்களிலும் பயன்படுகிறது மொந்தன். அதனால்தான், ஆண்டு முழுவதுமே இந்த ரகத்துக்கான தேவை இங்கே அதிகமாகவே இருக்கிறது! திருவண்ணாமலை மாவட்டம், பள்ளக்கொல்லை கிராமம். நான்கு பக்கங்களிலும் மலைகள் சூழ, மஞ்சள், கரும்பு, வாழை, நெல்… எனப் ... மேலும் படிக்க... »