Tuesday , 26 March 2019
சற்று முன்
Home » நோய் தடுப்பு

நோய் தடுப்பு



கத்தரியில் காய்ப்புழுவைத் தடுக்கும் முறைகள்



தற்போதைய சூழ்நிலையில் கத்தரி தோட்டங்களை தண்டு மற்றும் காய்த்துளைப்பான் தாக்குதல் பரவலாக தென்பட்டு மகசூல் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதி மற்றும் தண்டுப் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும், செடிகளில் தோன்றும் காய்ப்புழுக்களை ஆள்கள் மூலம் சேகரித்து அழிக்கலாம். அந்த வேளையில் வயலில் விளக்குப் பொறிகள் அமைப்பதன் மூலம் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். உழவியல் முறைகள்: தொடர்ந்து கத்திரி சாகுபடி செய்வதை தவிர்ப்பதன் மூலம் இந்த பூச்சியினை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். குட்டையான மற்றும் நீளமான காய்கள் கொண்ட ரகங்களை தேர்வு செய்து நடவு ... மேலும் படிக்க... »

கத்தரி பயிரில் பூச்சி கட்டுப்பாடு


Egg Plant-01a

கத்தரி பயிரில்  பூச்சிகள்    அதிகம் வரும். முறையாக பூச்சி மருந்துகளை பயன் படித்தினால், பூச்சிகளை கட்டு படுத்தலாம். இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுபடுத்தினால் இன்னும் நலம். இதோ, கத்தரி பயிரில் பூச்சிகளை கட்டுபடுத்தும் வழிமுறைகள்: தண்டு மற்றும் காய்த்துளைப்பான் நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச்செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து ... மேலும் படிக்க... »

துவரை, அவரைக்கு மூலிகைப் பூச்சி விரட்டி!



துவரை மற்றும் அவரையில் காய் துளைப்பானின் தாக்குதல் அதிகம் இருக்கும்.  இதற்கு விவசாயிகள் அதிக அளவு இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்துவர்.  காய்த்துளைப்பான் அதிகமுள்ள பகுதியில் துவரை மற்றும் அவரை பயிரிடுவதைக்கூடத் தவிர்த்துவிடுவர். கீழ்கண்ட முறையில் பூச்சிக்கொல்லிமருந்தினை தயாரித்து காய்த்துளைப்பானை கட்டுப்படுத்தலாம். சுண்டக்காய் – அரைகிலோ எட்டிக்காய் – 1 கிலோ நொச்சி – அரை கிலோ சோற்றுக்கற்றாலை – அரைகிலோ பீனாரி சங்கு – அரைகிலோ வேப்பங்கொட்டை – 1/4 கிலோ உருகுலா பட்டை – 1/2 கிலோ ஆகியவற்றை  ஒன்றாக ... மேலும் படிக்க... »

இயற்கை பூச்சி விரட்டி!



பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தப்படும் தாவரச்சாறே தாவர பூச்சிவிரட்டி என்று அழைக்கப்படுகிறது. இவற்றை இயற்கை விவசாயத்தில் இரசாயனப் பூச்சி கொல்லிகளுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச் சுழல் மாசுபடாமல் பாதுகாக்கப்படுகின்றது. இயற்கையில் இரண்டு வகையான பூச்சிகள் உள்ளன. இவற்றில் ஒருவகை தாவரத்தை உண்டு விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும். இரண்டாவது வகை தாவரங்களுக்கு தீங்க விளைவிக்கும் பூச்சிகளை உண்டு தாவரங்களின் வளர்ச்சியைப் பாதுகாப்பவை. தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த, பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் கொல்லப்படுவதில்லை. மாறாக பூச்சிகள் ... மேலும் படிக்க... »

வசம்பு – பூச்சிவிரட்டி



வசம்பு என்னும் அற்புத மூலிகையை பயன்படுத்தி மூலிகை பூச்சிவிரட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளது புவிகேர் நிறுவனம். தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் ஒப்புதலோடு இந்த மூலிகை பூச்சி விரட்டியை அறிமுகப்படுத்தியுள்ளனர். நெல்லைத் தாக்கும் இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், அந்துபூச்சி, கதிர் நாவாய்பூச்சி, தத்துப்பூச்சி போன்றவற்றைக் கட்டுப்படுத்த நட்டபின் 25ம் நாள், 45ம் நாள் மற்றும் பொதிப்பருவத்தில் 10 கிலோ அளவில் தூவினால் போதும். காய்கறிகளைத் தாக்கும் பலவிதமான பூச்சிகளையும் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 10 கிலோ தூவினால் போதும். பருத்தியில் அசுவினி, காய்ப்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்த 5 ... மேலும் படிக்க... »

மரவள்ளி சாகுபடியில் பூச்சி கட்டுப்பாடு முறைகள்



பருவ நிலை மாற்றம் காரணமாக அதிகமான உஷ்ணம் நிலவுகிறது. இந்நிலையில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள் எத்தகைய பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். மரவள்ளி நடும் முறைகள் மரவள்ளி நடும்போது நல்ல வளர்ச்சி அடைந்த குச்சியை நட வேண்டும். மரவள்ளிக் குச்சியில் டார்ச் அளவு 33 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் பூச்சி தாக்குதல் இருக்காது. குச்சியைப் படுக்க வைத்து நடக்கூடாது. நேராகவும் நடக்கூடாது. சாய்வாக நட வேண்டும். அப்போதான் சாறு உறிஞ்சும் பூச்சுகள் தாக்காது. வைரஸ் நோயும் வராது. ... மேலும் படிக்க... »

மரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள்



மரவள்ளி இறவை சாகுபடியில் ஹெக்டேருக்கு 10 முதல் 11 டன் வரை மகசூல் கிடைக்கும்.மரவள்ளியில் சொட்டு நீர்பாசன முறையில் அதிக மகசூல் கிடைக்கும்.தற்போது 2 அல்லது மூன்றாம் பருவத்தில் பயிரில் தேமல் நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. தேமல் நோய் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும் நோய் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு வெள்ளை ஈக்கள் நோயை பரப்புகின்றன. ஈக்கள் இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் மஞ்சள் நிறம் அடைந்து வெள்ளை நிறமாக மாறிவிடுகிறது.  மகசூல் பாதிக்கும் நிலை உருவாகும். தேமல் நோயை கட்டுப்படுத்த ... மேலும் படிக்க... »

மரவள்ளிப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் வழிகள்



மரவள்ளிப் பயிர்களை 3 விதமான பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது. அவற்றை முறையான வழிகளில் கட்டுப்படுத்தினால் அதிக மகசூலை பெற முடியும். மரவள்ளியின் கால அளவு 9 முதல் 10 மாதங்கள். புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் மரவள்ளி பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் முள்ளுவாடி என்ற ரகமும், கேரள ரோஸ் ரகமும்தான் அதிகம் பயரிடப்படுகின்றன. தற்போதுள்ள அதிக வெப்பநிலை, காற்றில் அதிக ஈரப்பதம் ஆகிய காரணங்களால் பூச்சிகள் தாக்குகின்றன.இப் பயிரை தாக்கும் பூச்சிகளும் அதை கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை ... மேலும் படிக்க... »

மரவள்ளியில் பூச்சி கட்டுப்பாடு



மரவள்ளிகளை தற்போதைய சூழ்நிலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. இவற்றை முறையான உயிர்ரக மருந்துகளை உபயோகித்து கட்டுப்படுத்தலாம். மரவள்ளியை பொறுத்தவரை, பொதுவாக விவசாயிகள் முள்ளுவாடி மற்றும் கேரளா ரோஸ் வகைகளையே பயிர் செய்கின்றனர். இந்த மரவள்ளி கிழங்கு வகைகள் சமைப்பதற்கு மட்டுமல்லாமல் தொழிற்சாலைகளில் ஜவ்வரிசி மற்றும் சேமியா தயாரிக்கவும் பயன்படுகிறது. மரவள்ளிப் பயிர்களில், தற்போது சாறு உறுஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈ, மாவுப் பூச்சி மற்றும் செஞ்சிலந்திகளின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.இந்தப் பூச்சிகள், இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் உள்ள சாற்றினை உறிஞ்சுவதால் ... மேலும் படிக்க... »

தக்காளி இலை துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்



தக்காளி  இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும். நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும். பூச்சியின் விபரம் இலைகளில் வெண்ணிற கோடுகள் இலைகள் வாடிக் காய்தல் புழு : பழுப்புநிற 2மிமீ நீளமுள்ள கால்கள் இல்லாத புழுக்கள். கூட்டுப்புழு : வளைக்கோடுகளில் மஞ்சள் நிற கூட்டுப்புழு காணப்படும். முதிர்பூச்சி : வெளிர் மஞ்சள் நிற ஈக்கள். கட்டுப்படுத்தும் முறைகள் துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம். வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும். நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் ... மேலும் படிக்க... »