Friday , 24 May 2019
சற்று முன்
Home » நிலவளம் & மண் மேலாண்ம

நிலவளம் & மண் மேலாண்ம



மரவள்ளியில் நுண்ணூட்ட மேலாண்மை



மரவள்ளியில் நுண்ணூட்ட கலவை தெளிப்பதால் துத்தநாகசத்து பற்றாக்குறை நீங்கி, செடிகளின் வளர்ச்சி நன்கு இருக்கும் நாமக்கல் வட்டாரத்தில், வளர்ச்சி நிலையில் உள்ள மரவள்ளியில் பல வயல்களில் இரும்பு மற்றும் துத்தநாகம் நுண்ணூட்டம் பற்றாக்குறை காணமுடிகிறது. அதனால், இலைகள் வெளுத்து இளம் மஞ்சளாகி, சிறுத்து மெலிந்து காணப்படுகிறது. தற்போது, வெப்பநிலை அதிகரித்துள்ளதால், வெப்பம் தாங்காமல் இலைகள் கருக ஆரம்பித்துவிடும். அதை தவிர்க்க, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம், பெரஸ்சல்பேட், 5 கிராம் ஜிங்க்சல்பேட் மற்றும், 5 கிராம் யூரியா வீதம் கலந்து மாலை வேளையில் ... மேலும் படிக்க... »

மண் வள அட்டை



” மண் மாதிரி எடுத்து ஆய்வு செய்து, மண்வள அட்டை பெற்று, அதிகாரிகள் ஆலோசனைப்படி உரமிட்டால் அதிக மகசூல் பெறலாம்’ என, எலச்சிபாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் லோகநாதபிரகாசம் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன் மண்ணின் வளத்தை பொறுத்தே அமைகிறது. பயிர் சாகுபடி செய்வதால் ஏற்படும் சத்து குறைபாடுகளை சரியான உர நிர்வாகத்தின் மூலம் சரி செய்ய வேண்டியது அவசியம். சரியான உர நிர்வாகத்துக்கு முதலில் மண் பரிசோதனையே அடிப்படையாகும். சத்துக்களின் அளவு வேறுபடுவதாலும், சத்துகளின் தேவை மாறுபடுவதாலும் மண் பரிசோதனையின் மூலமே பயிருக்கு ... மேலும் படிக்க... »

மண் பரிசோதனை மூலம் உரச்செலவு குறையும்



“மண் பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணில் ஏற்கனவே உள்ள சத்து எவை என அறிந்து, தேவையான அளவு உரமிட்டு, உரச் செலவை குறைக்க முடியும்’ என, வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார். மண்ணின் தன்மை அறிந்து பயிர் தேர்வு செய்ய மண் பரிசோதனை உதவுகிறது. மண்ணின் கார அமில தன்மையை அறிந்து பயிரிட கூடிய நிலமாக, மண்ணை சீரமைக்க மண் பரிசோதனை செய்ய வேண்டும். மண் பரிசோதனையின் மூலம் மண்ணில் ஏற்கனவே உள்ள சத்துக்கள் எவை என அறிந்து, தேவையான அளவு மட்டும் ... மேலும் படிக்க... »

வெட்டிவேர் மகிமைகள்



விலாவேர், இலமிச்சம் வேர் என்ற பெயர்களால் குறிப்பிடப்படும் வெட்டிவேர் எல்லா விவசாயிகளுக்கும் நன்மை செய்யும் ஒரு வெற்றி வேராகத் திகழ்கிறது. பிரதானமாக இந்த வேர் மண் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. வெட்டிவேரின் செடிகளை வேருடன் வெட்டி, தோண்டி எடுத்து, ஒரு கொத்தாக உள்ள செடியைத் தனித்தனியே பிரித்தெடுக்க வேண்டும். பின் வேர்ப்பகுதியிலிருந்து 15-20 செ.மீ. மேலே உள்ள இலைகளை வெட்டிவிட வேண்டும். வேர்ப்பகுதியிலிருந்து 10 செ.மீ. கீழே உள்ள வேர்களை வெட்டி, நடுவதற்கு உள்ள நாற்றுக்களைத் தயாரிக்க வேண்டும். இதனை 15 செ.மீ. இடைவெளியில் ... மேலும் படிக்க... »

பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை



”விவசாய நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதே சிறந்த முறையாகும்” என, கோவை வேளாண் பல்கலை பயிர் மேளாண்மை துறை இயக்குனர் வேலாயுதம் பேசினார். கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுனத்தில் மண் பரிசோதனை குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை துறை இயக்குனர் வேலாயுதம் பேசியதாவது: தமிழகத்தில் காலங்காலமாக இயற்கை முறை விவசாயத்தைதான் நம் விவசாயிகள் செய்து வந்தனர். 1950ம் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் மூலம் 50 மில்லியன் டன்கள் உணவு உற்பத்தி செய்யப்பட்டது. 1960ம் ஆண்டுகளுக்கு பிறகு, ... மேலும் படிக்க... »

களர் நிலத்தை சரி செய்வது எப்படி



திருநெல்வேலி சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சீர்திருத்தம் செய்து பயிர் சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெற முடியும் என சங்கரன் கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது; சங்கரன்கோவில் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் அனைத்து வகையான பயிர்களிலும் மண்ணின் தன்மை அறிந்து குறிப்பாக களர் நிலமாக இருந்தால் அதனை சீர்திருத்தம் செய்து பயிர் சாகுபடி செய்தால் மட்டுமே அதிக மகசூல் பெற முடியும். களர் மண்ணில் கார அமிலநிலை ... மேலும் படிக்க... »

மானாவாரி பருத்தி பயிரிட மண் பரிசோதனை அவசியம்



மானாவாரி பருத்தி சாகுபடி செய்வதற்கு மண் பரிசோதனை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் இரா. மாரிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: எங்கள் அறிவியல் மையமானது, பருத்தி சாகுபடியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்கிறது.இந்த ஆய்வுகளின் முடிவுப்படி, மானாவாரிப் பருத்தி பயிருக்கு மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும். பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி பயிரிடும் கரிசல் மண் வகை அதிகளவிலும், செம்மண் வகை ஒரு சில பகுதிகளிலும் காணப்படுகிறது. மண் பரிசோதனை செய்யும்போது, மண் ஆய்வக வல்லுநர்கள் ... மேலும் படிக்க... »

மதுரை மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை மையம்



பல்வேறு நவீன வசதிகளுடன், மதுரை மாவட்டத்துக்கு புதிதாக நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் மண் பரிசோதனை ஊர்தி, மதுரை மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நேரடியாகச் சென்று, அந்த கிராமங்களின் மண் வளத்தைக் கண்டறியும் பொருட்டு, ஆய்வு மேற்கொள்ள வழங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் பரிசோதனை மையத்தை, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். செல்லம்பட்டி வட்டாரம் கருமாத்தூர் கிராமத்தில் மண் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. நடமாடும் மண் பரிசோதனை மையம் குறித்து, வேளாண் இணை ... மேலும் படிக்க... »

பண்ணை செழிக்க மண்ணைக் காப்போம்!



பண்ணை செழிக்க வேண்டுமானால் மண்ணைப் பாதுகாப்பது அவசியம். மண்ணின் வளமே மனித வளம். நாம் சாகுபடி செய்யும் மண், எண்ணற்ற நுண்ணுயிரிகளையும் நன்மை செய்யும் பல பாக்டீரியாக்களையும் கொண்ட உயிருட்டமுள்ளதாகும். உயிரூட்டப்பட்ட மண்ணில்தான்அதிக பயிர் மகசூல் பெற முடியும். நம் முன்னோர்கள் அதிக அளவு இயற்கை உரங்களான தொழு உரம், பசுந்தாள் உரம், போன்றவற்றைப்பயன்படுத்தினர். இதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகரித்து அம் மண் உயிரோட்டமுள்ள மண்ணாக இருந்தது. ஆனால் இப்போது நாம் ஆடு, மாடுகள் வளர்ப்பதைக் குறைத்துக் கொண்டு இயற்கை உரங்களுக்கு ... மேலும் படிக்க... »

மண் பரிசோதனை



மண் பரிசோதனை செய்வது எப்படி? விவசாயிகள் அதிக அளவில் விளைச்சல் கிடைக்க பயிருக்கு, பேரூட்டச் சத்துகளான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் இயற்கையில் கிடைக்கும் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் சத்துகள், இரண்டாம் நிலை சத்துகளான கால்சியம், மக்னீசியம் சல்பர், நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு, துத்தநாகம், தாமிரம், போரான், மாங்கனீசு, மாலிப்டினம், குளோரின் போன்ற 16 வகையான சத்துகள் தேவை.  இச்சத்துகளை முழுமையாக பயிர்களுக்கு வழங்கி தகுந்த நேரத்தில் பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டால் கூடுதல் மகசூல் பெறலாம். மண் பிரசோதனையின் நன்மைகள்: மண்ணின் ... மேலும் படிக்க... »