Monday , 17 June 2019
சற்று முன்
Home » தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்



தக்காளி விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை


Tomoto Plant-01a

தக்காளி நடவு செய்து வரும் விவசாயிகள் அசோஸ்பைரில்லம் என்ற நுண்ணுயிரியை தெளிக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தக்காளி நாற்று நடவு செய்வதற்கு முன்பு, பாத்திகளில் உள்ள தக்காளி நாற்றுகளை எடுத்து, ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், ஒரு கிலோ பாஸ்போ பேக்டீரியாவை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்த கரைசலில், வேர்பகுதியை நனைத்து, பின்பு நடவு செய்யவேண்டும். அப்போது தக்காளிச்செடிக்கு தேவையான தளைச்சத்து மற்றும் மணிச்சத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் தக்காளிச் செடிக்கு அடிக்க வேண்டிய உரங்களில் இருந்து 20 ... மேலும் படிக்க... »

தலைகீழாய் வளரும் தக்காளி


Tomoto-New Technology-01a

பொதுவாக தக்காளி செடியின் வேர் கீழ் நோக்கியும் தண்டு பகுதி புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கியும் வளர்வது வழக்கம். இதுவே தக்காளியை மேலிருந்து கீழ்நோக்கி வளர்த்தால் எப்படி இருக்கும்? இந்த முயற்சியைத்தான் “டாப்சி டர்வி’ என்ற நிறுவனம் முயற்சி செய்து பார்த்து, அவ்வாறு வளர்ப்பதற்கு தேவையான தொட்டியையும் வடிவமைத்து அமெரிக்க சந்தையில் விற்பனை செய்துவருகிறது. ஒரு செடி கீழிருந்து மேல்நோக்கி வளரும்போது அது நீர் மற்றும் மண்ணிலிருந்து உறிஞ்சும் சத்துக்களை புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து கீழிருந்து மேல்நோக்கி அனுப்ப வேண்டியுள்ளது. ... மேலும் படிக்க... »

ரோட்டாவேட்டர் எனும் சுழற்கலப்பை


Rotavator-01a

காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் நிலத்தை உழுவதற்கு, பவர்டில்லர் மற்றும் சாதாரண ஏர் கலப்பைகளைப் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. புதிதாக “ரோட்டாவேட்டர்’ என அழைக்கப்படும் சுழற்கலப்பையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம். பெரும்பாலான விவசாயிகள் ஆண்டிற்கு மூன்று போகம் பயிரிடுகின்றனர். தண்ணீர் இல்லாத விவசாயிகள் பயறு விதைக்கின்றனர். இந்தாண்டு பருவ மழை காரணமாக ஏரிகள் நிரம்பியுள்ளன. விவசாயிகள் நவரைப் பட்டத்தில் நெல் பயிரிட உழவுப் பணிகளை துவக்கியுள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் புதிய “ரோட்டாவேட்டர்’ சுழற் கலப்பையைக் கொண்டு, தங்கள் ... மேலும் படிக்க... »

உரம், விதை விதைக்கும் கருவி


Vidaikkumkaruvi-01a

தமிழகத்தில் உள்ள சாகுபடி நிலப் பரப்பில் 70 சதவீதம் மானாவாரி நிலப் பரப்பாகும். இதில் 25 சதவீதம் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு மானாவாரியில் பயிரிடப்படும் நிலக்கடலை, மக்காச்சோளம், சோளம் மற்றும் பிற பயறு வகைககளைக் குறித்த காலத்திற்குள், அதாவது மண்ணில் ஈரப்பதம் குறைவதற்கு முன்பாகவே விதைக்க வேண்டும். குறிப்பாக நிலக்கடலையைப் பொருத்த வரையில் மண்ணில் ஈரப்பதம் குறைவதற்குள் கலப்பையின் பின்னால் சால்விட்டு விதைக்கப்படுகிறது. தற்சமயம் விதை விதைக்கும் பட்டத்தில் போதிய ஏர், ஆள்கள் பற்றாக்குறை காரணமாக மண் ஈரம் இருக்கும் போதே விதைக்க ... மேலும் படிக்க... »

புளியில் மேல் ஓடு பிரிக்கும் இயந்திரம்



அறுவடை செய்ய பட்ட புளியில் 25-30% வரை மேல் ஓடு இருக்கும், புளியை சமையல் செய்து சாப்பிட இந்த ஓடை எடுக்க வேண்டும். மேல் ஓடை எடுக்கும் வேலயை இப்போது மனிதர்கள் தான் செய்கின்றனர். அறுவடை செய்த பின் புளியை வெயிலில் காய வெய்து, அதன் பின் குச்சிகளால் குத்தி மேல் ஓட்டை எடுக்கின்றனர். ஏற்கனவே வேலை ஆட்கள் பற்றாக்குறை ஆட்டி வைக்கும் போது இந்த வேலையை செய்ய வருபவர்கள் குறைந்து வருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க தமிழ் நாடு வேளாண்மை பொறியியல் மையம் ... மேலும் படிக்க... »

சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க யோசனை



சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்ப முறைகள:   60- 90 நாள்கள் வயதுடைய சூரியகாந்தி வறட்சியைத் தாங்கி வளரும்.  பொதுவாக சூரியகாந்தியில் மகசூல் குறைவுக்கு பிரதான காரணம் மகரந்தச் சேர்க்கை உண்டாகாமல் இருப்பதுதான். எனவே, புதிய உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து, மகரந்தச் சேர்க்கையை அதிகரித்து அதிக மகசூல் பெறலாம். சூரிய வெளிச்சம் இருக்கும் போது காலை 6.30- 7.30 மணிக்கு தொடங்கி 9.30- 11 மணிவரை தொடர்ந்து மகரந்தத் தூள் வெளி வரும். குறைந்த வயதுடைய உயர் ரகங்களைத் தேர்வு செய்து ... மேலும் படிக்க... »

பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்



பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு தொழில் நுட்பங்கள் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ் தெரிவித்துள்ளார். மா மரம்: ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிடவேண்டும். 5 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளிவிடவேண்டும். பின்னர் நல்ல காய்கள் பிடிக்கும் வகையில் உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுக்கு ஒருமுறை ... மேலும் படிக்க... »

கொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி?



பரங்கி, பாகல், பீர்க்கு, புடலை, சுரை, வெள்ளரி போன்ற கொடிவகை காய்கறிகள். இது போன்ற கொடிவகை காய்கறிகளில் பூக்கள் பெருமளவு தோன்றினாலும், பூக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு காய்கள் உருவாவதில்லை. இதற்கு காரணம் அதிக அளவு ஆண் பூக்கள் உற்பத்தியாவதே ஆகும். பொதுவாக 15 முதல் 25 ஆண் பூக்களுக்கு ஒரு பெண் பூ என்ற விகிதத்திலேயே பூக்கள் தோன்றும். ஆண் பூக்கள் பூக்காம்பின் நுனியிலும், பெண் பூக்கள் பிஞ்சுகளின் நுனியிலும் தோன்றும். பெண் பூக்களின் எண்ணிக்கை யை அதிகப்படுத்தி மகசூலை அதிகப்படுத்துவதற்கு வளர்ச்சி ஊக்கிகள் ... மேலும் படிக்க... »

பயோ ஆக்சி – இயற்கை பயிர் ஊக்கி



பயோ ஆக்சி என்றால் என்ன? இவை இயற்கையாக ஆக்சிஜன் வெளியிடும் கனிமங்கள். தொடர்ச்சியாக 6 மாதத்திற்கு ஆக்சிஜனை வெளியிட்டு உயிரற்ற ரசாயன மண்ணையும் உயிருள்ள இயற்கை நல மண்ணாக மாற்றும் அற்புத படைப்பு. 100% இயற்கையானது. சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பானது. பயோ ஆக்சியின் பயன்கள்: விதை முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. நாற்றின் வளர்ச்சியை ஊக்குவித்து, தரமான நாற்றாக மாற்றுகிறது. மண்ணில் காற்றோட்டம், இரு மண்துகள்களுக்கு இடையில் உள்ள இடைவெளி, நீர்பிடிப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இதன்மூலம் வேரின் சுவாசத்தையும், வளர்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. மொத்த நுண்ணுயிர்களையும் அதிகப்படுத்துவதால், அவை ... மேலும் படிக்க... »

ஆகாயத்தாமரையில் இருந்து இயற்கை எரி வாயு



நீர் நிலைகளில் வேகமாக வளர்ந்து நீரை கெடுக்கும் ஆகாயத்தாமரை  எப்படி மண்புழு கம்போஸ்ட் ஆக பயன் படுத்தலாம் என்று பார்த்தோம். இப்போது, ஆகாயத்தாமரை இயற்கை எரிவாயு ஆக மாற்றுவதை பற்றிய ஒரு செய்தி ஆகாய தாமரைக்கு நீரை ஆவியாக்கும் தன்மை உண்டு. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலம் தொடர்ந்து வேகமாக பரவுகிறது. மிக கனமாகவும், பசுமையான இலைகளை கொண்டிருக்கும் இந்த தாவரம் ஊதா நிறத்திலான பூக்களை கொண்டது. இதன் தண்டிலிருந்து புறப்படும் கிளைகள் விரைவில் புதிய செடியாக பரவும். ... மேலும் படிக்க... »