Wednesday , 24 July 2019
சற்று முன்
Home » உரம் » இயற்கை உரம்

இயற்கை உரம்இயற்கை முறையில் தக்காளியை தாக்கும் பூச்சி கட்டுப்பாடு


Aloe-vera-01a

சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம். 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது. 25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும். பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம். பூ உதிர்தலை குறைக்க சூளைச் ... மேலும் படிக்க... »

கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை


Cumpost Uram-01a

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் உரமான கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறலாம்’ என்று வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பச்சையப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டு லட்சம் ஹெக்டேரில் நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணைய் வித்து பயிர்கள், மலர் பயிர்கள், காய்கறிபயிர்கள், பழப்பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டதில் இயங்கி வரும், 125 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம், 30 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்கள் ... மேலும் படிக்க... »

சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி?சிறுநீரில் உள்ள போஸ்போரஸ்  (Phosphorus)  எளிதாக எடுத்து Struvite என்ற உரத்தை தயாரிக்கும் முறை பற்றி சுவிட்சர்லாந்தில் ஆராய்ச்சி செய்து இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். அதன் தமிழாக்கம் இதோ: Struvite என்றால் என்ன? சிறுநீரில் உள்ள போஸ்போரஸ் உடன் மக்னீ சியம் (Magnesium) சேர்த்து செய்ய படும் உரம் ஆகும். இதன் ரசாயன போர்முலா MgNH4PO4•6H2O. இது வெள்ளை நிற பொடி ஆகும். வாசனை அற்றது. மண்ணில் சத்தை   மெதுவாக நிலத்தில் வெளியிடும் தன்மை கொண்டது. Struvite தயாரிப்பது எப்படி? உப்பங்கழிகளில் ... மேலும் படிக்க... »

இயற்கை உரமான மீன் அமிலம்இயற்கை உரமான மீன் அமிலம் தயாரிப்பது எப்படி? எளிய இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை: ஒரு கிலோ நாட்டு சர்க்கரை,​​ ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும்.​ மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.​ பழவாடை வீசும்.இப்படி பழவாடை ... மேலும் படிக்க... »

பஞ்சகவ்யா செய்முறை


Panjagavya-01a

இயற்கை உரமான பஞ்சகவ்யா செய்வது பற்றி ஹிந்து நாளிதழ் சிறப்பாக வெளியிட்டு உள்ளது. பஞ்சகவ்யவின் பார்முலாவும் தயாரிக்கும் வழியும். முதலில் 5 கிலோ பிரெஷ் பசுமாடு சாணம் எடுத்து கொள்ளவும் அதில், 3 லிட்டர் பசு மூத்திரம் சேர்க்கவும் அதில், 2 லிட்டர் பசும்பால் சேர்க்கவும் அரை கிலோ பசும் நெய் சேர்க்கவும் இந்த கூட்டில், மூன்று தேங்காய் இளநீர் சேர்க்கவும் ஒரு டசன் நல்ல பழுத்த, அல்லது அழுகிய வாழை பழம் சேர்க்கவும் இரண்டு லிட்டர் புளித்த தயிரை சேர்க்கவும் சிறிது சுண்ணாம்பை ... மேலும் படிக்க... »

இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும் வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து,  இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது. நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து ... மேலும் படிக்க... »

உரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி?உரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி? திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி. ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் இவருடைய ரகசியம் உரகுழி.  இதை பற்றி அவர் கூறுகிறார்: “ஒன்றரை ஏக்கர்ல உளுந்து விதைச்சுருக்கேன். மொத்தத்துக்கும் உரக்குழி தண்ணிதான் பாசனமாயிட்டிருக்கு. இந்த உளுந்துச் செடியில இலைகள் அடர்த்தியாகவும், அகலமாகவும் இருக்குறதுனால களைகளே இல்ல. ஒரு செடிக்கு சராசரியா 20 கிளைகளும், மொத்தம் 150 முதல் 200 காய்களும் பிடிச்சிருக்கு. கொஞ்சம்கூட பொக்கையே இல்லாம எல்லா ... மேலும் படிக்க... »

இயற்கை பயிர் ஊக்கியான முட்டை ரசம்இயற்கை பயிர் ஊக்கியான முட்டை ரசம் தயாரிப்பது எப்படி? இயற்கை வேளாண்மை விஞானி நம்மாழ்வார்கூறுகிறார்:  ” ஒரு சிறிய விவசாயி இரண்டு அல்லது மூன்று ஏகரில் விவசாயம் செய்து லாபம் செயபது என்பது மிகவும் கஷ்டமாகி விட்டது. இதற்கு  மூலகாரணம், ரசாயன இடு பொருள்களின் விலைகள் தாறு மாறாக ஏறிவிட்டதே ஆகும். விவசாயம் சரியாக செய்தல், நிச்சயமாக லாபம் செய்ய முடியும். ஆனால் பல விவசாயிகள் கடன் வாங்கி திருப்பி தர முடியாமல், நிலங்களை விற்று விட்டு சென்று அவை வீட்டு நிலங்களாகும் அவலத்தை ... மேலும் படிக்க... »

தொல்லுயிரி கரைசல்தொல்லுயிரி கரைசல் தயாரிப்பது எப்படி? ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு ஊர் கொம்புபள்ளம். இந்த ஊரில், தமிழக உழவர் தொழில் நுட்ப கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் திரு சுந்தர ராமன் அவர்கள். இயற்கை விவசாயம் என்பதை முழு மூச்சாக கொண்டு இயங்கி வரும் இந்த கழகத்திற்கு தமிழகம் மட்டும் அல்ல, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக போன்ற இடங்களில் இருந்து விவசாயிகள் படை எடுத்து வந்து பயிற்சி எடுத்து செல்கிறார்கள். சுந்தர் ராமனும் மற்ற விவசாயிகளை போன்று, ... மேலும் படிக்க... »

ஆழ்கூள முறை உர உற்பத்தி:ஆட்டு எரு – ஆழ்கூள முறை உர உற்பத்தி ஆட்டு எருவில்மாட்டு எருவில் உள்ளதைப் போல் 2 மடங்கு தழைச்சத்தும் சாம்பல்சத்தும் உள்ளது. ஒரு ஆடு ஒரு வருடத்திற்கு 500 கிலோவில்இருந்து 750 கிலோ வரை எரு உற்பத்தி செய்ய வல்லது. 100 ஆடுகள் உள்ள கிடை வைத்தால் ஒரு ஏக்கருக்கு வேண்டிய வளத்தைப் பெறலாம். ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து குறைந்த தீவனங்களை அளிக்கும்போது எருவில் தழைச்சத்து ... மேலும் படிக்க... »