Wednesday , 24 July 2019
சற்று முன்
Home » உரம்

உரம்இயற்கை முறையில் தக்காளியை தாக்கும் பூச்சி கட்டுப்பாடு


Aloe-vera-01a

சோற்றுக் கற்றாழை, துளசி மற்றும் ஆடு தின்ன பாளை செடிகளின் சாற்றை தயார் செய்து, தக்காளி செடி மீது தெளித்தால் எல்லாவிதமான பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதோடு, பூ உதிர்தலையும் குறைக்கலாம். 20மிலி காகித பூ இலைச் சாற்றில் ஒரு லிட்டர் நீர் கலந்து தக்காளி விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் நாற்றாங்காலில் நாற்று அழுகல் நோய் வராது. 25-30 நாட்கள் ஆன நாற்றுக்களை நடவுக்கு பயன்படுத்தவேண்டும். பூ உதிர்தலை குறைக்க, வேப்பம் எண்ணெயை தெளிக்கலாம். பூ உதிர்தலை குறைக்க சூளைச் ... மேலும் படிக்க... »

கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை


Cumpost Uram-01a

“கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பருவமழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் உரமான கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறலாம்’ என்று வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) பச்சையப்பன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இரண்டு லட்சம் ஹெக்டேரில் நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணைய் வித்து பயிர்கள், மலர் பயிர்கள், காய்கறிபயிர்கள், பழப்பயிர்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டதில் இயங்கி வரும், 125 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம், 30 கோடி ரூபாய் அளவுக்கு விவசாய கடன்கள் ... மேலும் படிக்க... »

உரங்களுக்கான மானியங்கள் குறைப்பு


Chemical Fertilizer-01a

இந்த நிதியாண்டுக்கு பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான மானியங்களை குறைக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை முடிவெடுத்துள்ளது. சர்வதேச அளவில் உரங்களின் விலை குறைவு ஏற்பட்டதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி மிச்சமாகும். உரங்களுக்கான மானியம் குறைக்கப்பட்டபோதும், டை அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு போன்ற உரங்களின் அதிகபட்ச சில்லறை விலை ஒரு டன்னுக்கு முறையே ரூ.1500 மற்றும் ரூ. 1000 குறையும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், ... மேலும் படிக்க... »

உளுந்துக்கு உதவும் டி.ஏ.பி. கரைசல்உளுந்துப் பயிரில் அதிக மகசூல் பெற டி.ஏ.பி. கரைசல் தெளிக்கலாம்.உளுந்துப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு தற்போது 30-40 நாள்கள் பயிராக உள்ளது. டி.ஏ.பி. கரைசல் தெளிக்க இதுவே ஏற்ற தருணம். உளுந்துப் பயிரை நன்செய் தரிசில் சாகுபடி செய்வதால் அடி உரமிட வாய்ப்பில்லை. அதிக மகசூல் பெற இலைவழி உரம் அளித்தல் மிகவும் அவசியம்.  செடிகள் பூக்க ஆரம்பிக்கும்போது 2 சதவிகிதம் டி.ஏ.பி. கரைசல் தயார் செய்ய ஒரு ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை நன்கு தூள் செய்து 10 லிட்டர் ... மேலும் படிக்க... »

சிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி?சிறுநீரில் உள்ள போஸ்போரஸ்  (Phosphorus)  எளிதாக எடுத்து Struvite என்ற உரத்தை தயாரிக்கும் முறை பற்றி சுவிட்சர்லாந்தில் ஆராய்ச்சி செய்து இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளார்கள். அதன் தமிழாக்கம் இதோ: Struvite என்றால் என்ன? சிறுநீரில் உள்ள போஸ்போரஸ் உடன் மக்னீ சியம் (Magnesium) சேர்த்து செய்ய படும் உரம் ஆகும். இதன் ரசாயன போர்முலா MgNH4PO4•6H2O. இது வெள்ளை நிற பொடி ஆகும். வாசனை அற்றது. மண்ணில் சத்தை   மெதுவாக நிலத்தில் வெளியிடும் தன்மை கொண்டது. Struvite தயாரிப்பது எப்படி? உப்பங்கழிகளில் ... மேலும் படிக்க... »

இயற்கை உரமான மீன் அமிலம்இயற்கை உரமான மீன் அமிலம் தயாரிப்பது எப்படி? எளிய இயற்கை உரமான மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை: ஒரு கிலோ நாட்டு சர்க்கரை,​​ ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும். நாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும்.​ மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.​ பழவாடை வீசும்.இப்படி பழவாடை ... மேலும் படிக்க... »

பஞ்சகவ்யா செய்முறை


Panjagavya-01a

இயற்கை உரமான பஞ்சகவ்யா செய்வது பற்றி ஹிந்து நாளிதழ் சிறப்பாக வெளியிட்டு உள்ளது. பஞ்சகவ்யவின் பார்முலாவும் தயாரிக்கும் வழியும். முதலில் 5 கிலோ பிரெஷ் பசுமாடு சாணம் எடுத்து கொள்ளவும் அதில், 3 லிட்டர் பசு மூத்திரம் சேர்க்கவும் அதில், 2 லிட்டர் பசும்பால் சேர்க்கவும் அரை கிலோ பசும் நெய் சேர்க்கவும் இந்த கூட்டில், மூன்று தேங்காய் இளநீர் சேர்க்கவும் ஒரு டசன் நல்ல பழுத்த, அல்லது அழுகிய வாழை பழம் சேர்க்கவும் இரண்டு லிட்டர் புளித்த தயிரை சேர்க்கவும் சிறிது சுண்ணாம்பை ... மேலும் படிக்க... »

இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும் வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து,  இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது. நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து ... மேலும் படிக்க... »

உர மேலாண்மை டிப்ஸ்விவசாயிகள் உர மேலாண்மையை கடைப்பிடிப்பதன் மூலம் அரசுக்கு ஏற்படும் உரமானிய செலவினத்திலும், தங்கள் செலவினத்திலும் ஓரளவு மிச்சப்படுத்த முடியும் என்று திருவண்ணாமலை வேளாண் உதவி இயக்குநர் ரமணன் யோசனை தெரிவித்தார்.  உர மேலாண்மை அவர் கூறும் யோசனைகள் மண்வள அட்டை கொண்டு உரமிடுதல்: தமிழகத்தில் உள்ள பலவகையான மண்களில் ஊட்டச்சத்து நிலை மாறுபடுகிறது. எனவே, அனைத்து வகை மண்ணுக்கும் ஓரே அளவு உரமிடுதல் அவசியமற்றது. தேவைக்கு அதிகமான உரத்தை பயன்படுத்தும்போது விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு அதிகமாகிறது. மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் ... மேலும் படிக்க... »

உரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி?உரக்குழி மூலம் அதிக மகசூல் பெறுவது எப்படி? திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி. ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் இவருடைய ரகசியம் உரகுழி.  இதை பற்றி அவர் கூறுகிறார்: “ஒன்றரை ஏக்கர்ல உளுந்து விதைச்சுருக்கேன். மொத்தத்துக்கும் உரக்குழி தண்ணிதான் பாசனமாயிட்டிருக்கு. இந்த உளுந்துச் செடியில இலைகள் அடர்த்தியாகவும், அகலமாகவும் இருக்குறதுனால களைகளே இல்ல. ஒரு செடிக்கு சராசரியா 20 கிளைகளும், மொத்தம் 150 முதல் 200 காய்களும் பிடிச்சிருக்கு. கொஞ்சம்கூட பொக்கையே இல்லாம எல்லா ... மேலும் படிக்க... »