Monday , 17 June 2019
சற்று முன்
Home » Author Archives: ETSAdmin

Author Archives: ETSAdminமண் பரிசோதனை அடிப்படையில் உரங்களை இட வேண்டும்விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் பயிர்களுக்கு, பரிந்துரை செய்யப்பட்ட அளவே தழைச்சத்து தரும் யூரியா உரத்தினைஇடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். விவசாயத்திற்கு தேவையான முக்கிய இடுபொருளான, உரங்கள் தாராளமாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு 150 கோடி டான்பெட் நிறுவனத்திற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கியுள்ளது. இதனை கொண்டு டான்பெட் நிறுவனம் டி.ஏ.பி.,உரத்தினை கொள்முதல் செய்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் மூலம் விநியோகம் செய்து வருகிறது. இதுதவிர தமிழக அரசு உரங்களின் மீதான 4 சத மதிப்பு கூட்டப்பட்ட வரியிலிருந்து விலக்கு ... மேலும் படிக்க... »

தேயிலை உற்பத்தி பாதிப்பு


Tea Leaf-03a

மத்திய தேயிலை வாரியம் ஒவ்வொரு மாதமும் தேயிலை உற்பத்தி குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 5.9 சதவிகிதம் சரிந்து 2.09 கோடி கிலோவாக குறைந்துள்ளது என்று தேயிலை உற்பத்தி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் உற்பத்தி பாதித்ததால் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரியில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 15 சதவிகிதம் குறைவு என்று தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.   ... மேலும் படிக்க... »

பிப்ரவரியில் ஏற்றுமதி குறைந்துள்ளதால் நடப்பு நிதி ஆண்டிற்கான இலக்கை எட்டுவது கடினம்


Tea Leaf-01a

ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 5.9 சதவீதம் சரிவடைந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், ஜனவரி மாதத்தில் 1.15 கோடி கிலோ தேயிலை உற்பத்தியாகியுள்ளது. இது, 2013 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் குறைவாகும். நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 56 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி பெரிதும் குறைந்ததால் ஒட்டுமொத்த அளவில் நாட்டின் தேயிலை உற்பத்தி சரிவடைந்துள்ளது. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது ... மேலும் படிக்க... »

வீட்டிலேயே எளிதாக இயற்கை உரம் தயாரிப்பதுநம் வீட்டில் சேருகிற குப்பைகள், காய்கறி கழிவுகளை வெளியே கொட்ட இப்போது இடமே இல்லை என்ற நிலைமை இருக்கு. அப்படியே இடம் இருந்தாலும், கொட்டிய குப்பைகள் அப்புற படுத்தாமல் சுற்றுபுறம் அசுத்தம் ஆகி வருவதையும் காண்கிறோம். இவற்றை தடுத்து, நம் வீட்டிலேயேஇயற்கை உரம் தயாரிப்பது. நம் வீட்டில் விழுகிற காய்கறி கழிவுகள், வாடி போன பூக்கள், இலைகள், தேங்காய் நார், போன்றவற்றை சேகரிக்கணும். இந்த குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்களை எடுத்து விடவும் இந்த கழிவுகளை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் நிரப்பவும். இந்த பக்கெட்டின் ... மேலும் படிக்க... »

பசுந்தாள் உரபயிர் சாகுபடி-சித்தகத்திபருவம் : அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.  மார்ச்-ஏப்ரல் மிகசிறந்த பருவமாகும் மண் : அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது. விதையளவு   : பசுந்தாள்உரப்பயிர் 30-40 கிலோ / ஹெக்டர் விதைக்கு 15 கிலோ / ஹெக்டர் விதை நேர்த்தி : ரைசோபியத்துடன் ( 5 பொதி / ஹெக்டர்) விதை கலப்பு நடவு இடைவெளி : கை விதைப்பு, விதைக்காக நடவு செய்யயும் போது அதற்கான இடைவெளி 45 x 20 செ.மீ நீர்ப்பாசனம் 15-20 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை : நடவு ... மேலும் படிக்க... »

வடமாநிலங்களில் உற்பத்தி பாதிப்பு ஆப்பிள் விலை 20 சதவிகிதம் அதிகரிப்பு


Apple-01a

வடமாநிலங்களில் ஆப்பிள் உற்பத்தி குறைந்துள்ளதால் அதன் விலை 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில பகுதிகளில் அதிக அளவில் மழைபெய்வது, சில பகுதிகளில் காலம் தவறி மழைபெய்வது, வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆப்பிள், வாழை, மாம்பழம் உள்ளிட்ட பழ வகைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பழ வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிம்லாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், ‘இந்திய ஆப்பிள் சாகுபடியாளர்கள் சங்கத்தின்’ தலைவர் ரவீந்தர் சவுகான் கூறுகையில், ‘கடந்த ஆண்டு காலம் கடந்து மழை பெய்தது. இதனால் ... மேலும் படிக்க... »

மண் புழு உரம் தயாரிப்பு-கேள்வி பதில்கள்பொதுவாக மண் புழு உர படுக்கையில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டுமா? முதலில் 15 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் தெளித்து வரவேண்டும். பிறகு ஈரத்தின் அளவை பொருத்து மூன்று நாடகளுக்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து வரவேண்டும் சாணக்கரைசல் குளோரின் கலந்த குடிநீரில் தயாரிக்கலாமா? குடிநீரில் குறைந்த அளவே குளோரின் இருப்பதனால் பயன்படுத்தலாம். மண் புழு உரம் பயன்படுத்தும் வயலில் பியூரிடான் குருனை பயன்படுத்தலாமா? இரசாயன உரம் பயன்படுத்தும் அதே வேளையில் பயன்படுத்த கூடாது. மண் புழு உர படுக்கையில் எறும்புகளால் பாதிப்பு உண்டா? மண் ... மேலும் படிக்க... »

அரசு மதிப்பீடுகளுக்கு மாறாக கோதுமை உற்பத்தி குறையும்


Wheat-01a

அரசு மதிப்பீடுகளுக்கு மாறாக கோதுமை உற்பத்தி குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருவம் தவறி பெய்த மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக சில மாநிலங்களில் உள்ள கோதுமை வயல்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே உற்பத்தி பாதிக்கப்படும் என விவசாய ஆணையர் ஜே.எஸ். சந்து தெரிவித்தார். குளிர்கால பயிர் கோதுமை குளிர்கால பயிராகும். ரபி பருவத்தில் (அக்டோபர்–மார்ச்) மிக முக்கிய பயிரான கோதுமை அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நடப்பு பருவத்தில் கூடுதலாக 61 ஆயிரம் ஹெக்டேரில் கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டில் கோதுமை விளைச்சல் அமோகமாக ... மேலும் படிக்க... »

தொட்டி முறையில் மண்புழு உரம் தயாரித்தல்இந்த முறையில் 3 அடி அகலம் 11/2 அடி உயரம் 20 அடி நீளம் கொண்ட சிமென்ட் தொட்டிகளை கட்டிக் கொள்ள வேண்டும். இதுபோல அவரவர் வசதிக்கு ஏற்ப எத்தனை தொட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். தொட்டியின் அடிப்பாகத்தில் தண்ணீர் வெளியேற்றுவதற்காக 5 அடிக்கு ஒரு துவாரம் வீதம் இருக்கும் வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும். தொட்டியில் மண்புழு உரம் தயாரிக்க மழை மற்றும் வெய்யிலிலிருந்து பாதுகாக்க கீற்றுக் கொட்டகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். மக்கிய கால்நடைக் கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை மேற்சொன்ன ... மேலும் படிக்க... »

ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க யோசனைமானாவாரி பருவம் துவங்குவதால் முன் கூட்டியே ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேண்டும், என வேளாண்மை துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் மொத்த சாகுபடி பரப்பில் 50 சதவீதம் வானம் பார்த்த பூமியாகும். மானாவாரி பயிரிடப்படும் நிலங்களில் குறைந்த மகசூல் கிடைக்கிறது. இதற்கு காரணம் பருவம் தவறி மழை பெய்வதும், மழை அளவில் நிலையில்லாத தன்மை, குறைந்த கால மழை பருவம், அதிக அளவில் நீர் ஆவியாதல், மண் அரிப்பு போன்றவையாகும். நிலையில்லாத சூழ்நிலையில் மானாவாரி விவசாயத்தில் சில யுக்திகளை பயன்படுத்தி ஓரளவு நிலைத்த வருமானத்தை ... மேலும் படிக்க... »